அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
00:00

ஜி.ரமேஷ், ராஜபாளையம்: படித்து பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால் நாடு எப்படி இருக்கும்?
இதோ, இன்று எப்படி இருக்கிறதோ அதே லட்சணத்தில் தான் இருக்கும். இப்போ ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் பேர் டபுள் டிகிரியும், அதற்கு மேல் சட்டமும் பயின்றவர்கள் தானே! மெத்தப் படிக்காதவர் ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இங்கு இருந்த போது, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடாமல், மக்களுக்காக ஆட்சி செய்ததாக பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்!

எஸ்.சுப்பிரமணி, கடலூர்: ஆண்களின் 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும். ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மென்டல் மெச்சூரிட்டி - மன முதிர்ச்சி ஓரளவேனும் வரும். அதன்பின், இம்முயற்சியில் இறங்கினால் நலம் என்று லென்ஸ் மாமா கூறுகிறார்; நமக்கு அனுபவம் இல்லாததால், அவரிடம் கேட்டு பெறப்பட்ட பதில் இது!

எஸ்.வெள்ளைச்சாமி, கடலூர்: அறிவு, அடக்கம், அழகு - இம்மூன்றில் பெண்களுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு! இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை. அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம் அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடாதோ!

க..ஆறுச்சாமி, திருப்புவனம்: அறிவு, தன்மை, புரட்சி, மனிதாபிமானம், பணிவு போன்ற சொற்களின் கலவை தான் உங்கள் பெயர் என்கிறானே என் நண்பன்...
உங்கள் நண்பருக்கு கோடி நன்றி. பெயர் காரணம் கேட்டு எழுதுபவர்களுக்கு ஏற்ற பதில் சொல்ல உதவி இருக்கிறாரே!

வி.பிரபா, கண்டமங்கலம்: விளையாட்டு தொடர்பான கேள்விகளே உங்களுக்கு வருவதில்லையா? அது சம்பந்தப்பட்ட பதில் எதுவுமே தருவதில்லையே...
தெரியாத சப்ஜெக்டுகளில் மூக்கை நுழைப்பதில்லை; இந்தியாவின் குக்கிராமங்களில் கூட கிரிக்கெட் பாப்புலராக உள்ளது. ஆனால், எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. இதைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும் ஏனோ ஆர்வமில்லை!

ஆர்.ரேவதி, மரக்காணம்: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவதைப் பார்க்கும் போது மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு, ஆண்களுடன் பழகுவதற்கான எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்பதால் தைரியமற்றுப் போய், எதிர்காலத்தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால் அவனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, தெம்பற்றவர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!

எஸ்.பி.நடராஜன், அஸ்தினாபுரம்: ஒருவன் முட்டாளாவது எப்போது?
தன்னிடம் சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் எல்லாம் தனக்கு வேண்டியவர்கள் என, நம்ப ஆரம்பிக்கும் போது!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
26-டிச-201418:30:18 IST Report Abuse
LAX "கவிதா ஓகே சொல்லிட்டாளா" - விளம்பரம் மாதிரி 23 வயதிலும் ஒருவருக்கு வாழ்க்கையைப் பற்றி நல்ல பக்குவம் ஏற்படுகிறது.. சிலருக்கு 30லும் அதைத் தாண்டிய பின்னரும் 'தயிர் சாதமாகவே' இருந்து நம்பி வருபவரையும் நட்டாத்தில் விடுபவர்களும் ஆங்காங்கே உண்டு.. - வளர்ப்பு/வளரும் முறையைப் பொறுத்தே இவை அமையும்.. வயது அடுத்த பட்சம்தான்.. 14 முதல் 10 வருடங்கள்/அதற்கு மேலாக ஒருவருடனேயே பழகி, காதலித்து புரிந்துகொண்டு வாழ்க்கையில் வருமானத்துக்கு வழி செய்துகொண்டு அதன் பின் திருமணம் செய்துகொள்பவர்களும் (ஒருவருக்கொருவர் உண்மையாக/நேர்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில்) நன்றாகவே உள்ளனர்..
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
22-டிச-201411:40:41 IST Report Abuse
Shriram அப்படீன்னா இந்த 60 வயதுவரை நீங்கள் காதலிக்கவே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X