திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
00:00

மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாற்றை அவரே சொல்லக் கேட்டு, கவிதா ஆல்பர்ட் என்ற பெண்மணி, 'ஒரு குயிலின் வாழ்க்கைச் சங்கீதம்...' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதில்...
எம்.ஜி.ஆருக்காக, அடிமைப் பெண் படத்தில், 'ஆயிரம் நிலவே வா...' என்ற பாடலை டி.எம்.எஸ்., பாடி, ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது. பாடல் ஒலிப்பதிவு செய்ய வேண்டிய நாளில், டி.எம்.எஸ்., தன் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க, சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல மதியம், 2:00 மணிக்கு காரில் புறப்பட தயாராக இருந்தார்.
அப்போது எம்.ஜி.ஆர்., பட நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அடிமைப் பெண் படத்தில், ஏற்கனவே முடிவு செய்தபடி, 'ஆயிரம் நிலவே வா...' பாடலை, பி. சுசீலா - டி.எம்.எஸ்., பாட வேண்டும் என்றும், இன்று மதியம் ஒலிப்பதிவு என்றும் கூறினர்.
'நாளை மறுநாள், என் மகளின் திருமணம்; அதனால், இன்று மதியம் கண்டிப்பாகப் புறப்பட வேண்டும். நான் போய் தான் திருமண ஏற்பாடுகளை கவனிக்கணும் என்பதால், இப்போது பாட வர முடியாது; திருமணம் முடிந்து, மறுநாள் வந்து பாடிக் கொடுக்கிறேன்...' என்றார், டி.எம்.எஸ்.,
செய்தி எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தரராஜனை அழைத் தார். சென்னை, தி.நகர் அலுவலகத்தில்
எம்.ஜி.ஆரை சந்தித்து, தன் நிலையை எடுத்துச் சொன்னார் டி.எம்.எஸ்.,
ஆனால், எம்.ஜி.ஆரோ, 'இன்று பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டு, நான் ஜெய்ப்பூருக்குச் சென்று, அடிமைப் பெண் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும்; எனவே, எப்படி யாவது பாடிக் கொடுங்கள்...' என்றார்.
ஆனால், டி.எம்.எஸ்., 'மதுரை புறப்பட்டே ஆக வேண்டும்...' என்று சொல்ல, எம்.ஜி.ஆர்., கோபத்தோடு, 'சரி, நீங்கள் புறப்படலாம்...' என்றார்.
மதுரையில் திருமணம் முடிந்த பின், மாலை, 4:00 மணி அளவில், மாலை தினசரி பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொண்டு, சிலர் அவசரமாக டி.எம்.எஸ்சை தேடி வந்தனர். அதில், முழுப் பக்க அளவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை, எம்.ஜி.ஆர்., கட்டித் தழுவுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, 'எம்.ஜி.ஆர்., புது பின்னணி பாடகரை அறிமுகப்படுத்துகிறார்...' என, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்காக, 'ஆயிரம் நிலவே வா...' பாடலைப் பாடினார், எஸ்.பி.பி.,
எஸ்.பி.பி.,யை தனக்காக பாடுவதற்கு, சில கம்பெனிகளுக்கு சிபாரிசு செய்து பாட வைத்தார் எம்.ஜி.ஆர்.,.
பின், அடிமைப் பெண் படத்தில், 'தாயில்லாமல் நானில்லை...' என்ற பாடலை பாட வைத்தார். பாடலைக் கேட்ட வினியோகஸ்தர்கள், 'சவுந்தரராஜன் குரல் தான் உங்களுக்குப் பொருத்தம்...' என்று கூறி வருத்தப்பட்டனர்.
மீண்டும் டி.எம்.எஸ்சை பாட அழைத்தனர். அப்போது டி.எம்.எஸ்., 'இதுவரை எம்.ஜி.ஆருக்காகப் பாட, 500 ரூபாய் தான் வாங்கினேன்; இனி, 1,500 ரூபாய் கொடுத்தால் தான் பாட வருவேன்...' என்றார். அவ்வாறே தந்து, டி.எம்.எஸ்ஸை பாட வைத்தனர்.

'தென்னகத் திருத்தலங்கள்' நூலிலிருந்து: கேரளாவில் புகழ் மிக்க திருத்தலம் பழையனூர், பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பிரகாரத்துக்குள் கணக்கற்ற சேவல்கள் அலைந்து திரிவதை பார்க்கலாம். இச்சேவல்களை தங்கள் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டி, அம்பாள் சன்னிதியில் கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு பிரார்த்தனை காணிக்கையாக விடப்படும் சேவல்களை, ஏலம் விடுவது இல்லை என்பதால், இவை அனைத்தும் இயற்கையாகத் தான் இறக்கின்றன.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Subramanian - Chennai,இந்தியா
23-டிச-201412:51:33 IST Report Abuse
P.Subramanian பழையனூர் பகவதியம்மன் கோவிலில் பிரார்த்தனைக்காக விடப்படும் சேவல்கள் ஏலம் விடாமல் சேவல்கள் அனைத்தும் சுதந்திரமாக திரிந்து இயற்கையாக இறந்து விடுகின்றன . இதேமுறையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் கடைபிடித்து பிரார்த்தனைக்காக விடப்படும் அனைத்து உயிரினங்கள் மீதும கருணை காட்டலாமே P. Subramanian, PlotNo. 69, Block No. 1, Flat No. S -2 , Anjaneyar Nagar, Kalaivanar street, Jalladianpettai, Pallikaranai (Post), Chennai -600 100
Rate this:
Cancel
V .வெங்கடேஷ் - Singapore,சிங்கப்பூர்
22-டிச-201409:00:59 IST Report Abuse
V .வெங்கடேஷ் 'ஆயிரம் நிலவே வா...' அப்படி ஒன்றும் அவசரமாக ரெகார்ட் செய்யப்பட்ட மாதிரி தெரியலையே. SPB அவர்கள் ஒரு பேட்டியில் அவருக்கு முதலில் உடல்நல குறைவால் பாட முடியாமல் போனதால் எம்.ஜி.ஆர் காத்திருந்து ரெகார்ட் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். எப்படியோ இதனால் டி.எம்.எஸ் அவர்களுக்கு கூடுதல் வருமானமும் தமிழ் திரை உலகுக்கு ஒரு பாடும் நிலா கிடைத்ததில் மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X