கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

கேள்வி: விண்டோஸ் 7 கொண்ட என் பெர்சனல் கம்ப்யூட்டரில், திடீரென்று Hybernate செயல்பாடு மறைந்துவிட்டது. நான் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு எடுக்கையில் அதனைப் பயன்படுத்துவேன். இப்போது Sleep போட்டு செல்கிறேன். ஏன், இப்படி ஏற்பட்டது? மைக்ரோசாப்ட் உதவித் தளம் சென்று, அவர்கள் சொன்னபடி கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் சில மாற்றங்கள் செய்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம்?
என். கோகிலம், கோவை.
பதில்:
ஷட் டவுண் மெனுவில், ஹைபர்னேட் ஆப்ஷன் இல்லை; அல்லது காட்டப்படவில்லை என்று கூறுகிறீர்கள். கீழே தந்துள்ளபடி செயல்படவும். சரியாகிவிடும். முதலில் Control Panel > Power Options என்று செல்லவும். நீங்கள் எந்த Power நிலையினைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், 'Change plan settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் 'Change advanced plan settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு 'Sleep' என்பதில் உள்ள + அடையாளத்தில், கிளிக் செய்தால், இந்த சிறிய கட்டம் விரிவடையும். இங்கு கிடைக்கும் 'Allow hybrid sleep' என்பதன் அருகே Disable செய்திடவும். அடுத்து பவர் செட்டிங்ஸ் விண்டோவிலிருந்து வெளியேறும் வரை 'Ok/save changes' என்பதில் கிளிக் செய்து வரவும். இப்போது பவர் ஆப் செய்திடுகையில் 'Hibernate' என்ற ஆப்ஷன் உங்களுக்குக் கிடைக்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 க்கு அண்மையில் அப்கிரேட் செய்தேன். பேஸ்புக்கில் விடியோ சேட் பயன்படுத்த முயன்றால், ஒவ்வொரு முறையும் இன்ஸ்டால் செய்திடக் கேட்கிறது. இன்ஸ்டலேஷனும் முழுமையாக மறுக்கிறது. விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டரில் நன்றாகச் செயல்படுகிறது. இந்த நிலை ஏன்? என்னிடம் விண்டோஸ் 8.1 சிஸ்டம் 64 பிட் அளவில் உள்ளது.
-என். குணசீலன், சுசீந்திரம்.
பதில்:
விண்டோஸ் 8.1 இயக்க முறைமையில், பேஸ்புக் விடியோ சேட் பிரச்னை தருகிறது என்று எழுதிய, தகவல் தெரிவித்தவர்கள் பலர். இது பலருக்குப் பிரச்னையாக உள்ளது. ஆனால், இவர்கள் அனைவரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களாக அறிகிறேன். எனவே, வீடியோ சேட் செயலியை, கூகுள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில் பயன்படுத்திப் பார்க்கவும்.
நீங்கள் ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இல்லாமல், வேறு ஒரு பிரவுசர் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உங்களுக்குத் தீர்வாகச் சற்று சுற்றி வளைத்த வழி ஒன்று தருகிறேன். விண்டோஸ் 8 / 8.1ல், அப்ளிகேஷன் புரோகிராம்களை, முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்காக, compatibility mode முறையில் இயக்க வழி தருகிறது. இதனைப் பெற, உங்கள் வெப் பிரவுசர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Compatibility” என்னும் டேப் செல்லவும். “Run This Program In Compatibility Mode.” என்று இருப்பதன் எதிரில் உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். மீண்டும் ட்ராப் டவுண் மெனு ஒன்று கிடைக்கும். இதில் கீழாகச் சென்று, Windows 8 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆக இருந்தாலும், பேஸ்புக் அப்ளிகேஷனை compatibility modeல் இயக்க அமைக்க வேண்டும். பிரவுசரில் “Tools” மெனு தேர்ந்தெடுக்கவும். “Comparability View Settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் டெக்ஸ்ட் பாக்ஸில், “Facebook.com” என டைப் செய்திடவும். பின்னர் “Add” என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த வழியிலும், பேஸ்புக் வீடியோ சேட் கிடைக்கவில்லை என்றால், அண்மையில் உங்கள் பிரவுசரில், நீங்கள் அறியாமலே பதித்த ஆட் ஆன் தொகுப்பு பிரச்னை தருகிறது என்று பொருள். அதனைத் தேடி அறிந்து நீக்கவும். பின்னர், பிரவுசரை மீண்டும் இயக்கி, வீடியோ சேட் இயக்கிப் பார்க்கவும்.

கேள்வி: நீங்கள் முன்பு எழுதிய கட்டுரையின் அடிப்படையில், க்ளவ்ட் சர்வீஸ் வசதியை பைல்களை ஸ்டோரேஜ் செய்திட வடிவமைத்தேன். நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இப்போது இதன் சேவையினை அழிக்க விரும்புகிறேன். எனக்குத் தேவை இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அழிக்க வழி காட்டவும்.
பேரா. கா. மல்லிகா, மதுரை.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில் ஒன் ட்ரைவ் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் க்ளவ்ட் அப்ளிகேஷன் சேவையைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதனை அணுகாமலேயே இருக்கலாமே! கம்ப்யூட்டரில் இருந்து, இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒன் ட்ரைவ் அப்ளிகேஷனை நீக்க விரும்பினால், அந்த அப்ளிகேஷனின் அன் இன்ஸ்டால் டூல் வசதியைப் பயன்படுத்தலாம். இதற்குக் கீழ்க் கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
Uninstall or Change a program என்ற விண்டோவில், மேலாக வலதுபுறம் தரப்பட்டுள்ள பாக்ஸில், One Drive என டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளில் OneDrive என்பதனைத் தேர்ந்தெடுத்து, Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். இனி, OneDrive அப்ளிகேஷன் நீக்கப்பட்டிருக்கும். இருப்பினும், பிரவுசர் வழியாக, ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்டை அணுகலாம். உங்களிடம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் இருந்தால், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உங்களுக்கு ஒன் ட்ரைவ் ஸ்டோரேஜ் இடம் தரப்பட்டிருக்கும். ஆனால், அதனைப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம். பொதுவாக, அளவில் பெரிய பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும்.

கேள்வி: என் மகளின் பேஸ்புக் பக்கத்திற்கு செய்தி ஒன்று அனுப்பினேன். என் மகள் போன் செய்து, இது போன்றவற்றை மெசேஜ் ஆக இனி அனுப்ப வேண்டும் என்றும், அப்போதுதான் மற்றவர்கள் படிக்க முடியாது என்றும் கூறினார். மற்றவர்கள் படிக்கக் கூடியது மற்றும் மெசேஜ்கள் ஆகியவை இடையேயான வேறுபாடு என்ன என்று புரிந்து கொள்ள இயலவில்லை. சற்று விளக்க வேண்டுகிறேன்.
என். கார்த்திகேயன், திண்டுக்கல்.
பதில்:
கார்த்திகேயன், நீங்கள் ஒரு நிலைத் தகவல் (Status) அல்லது போட்டோவினை உங்கள் பேஸ்புக் ஹோம் பேஜில் பதிந்தால், அது அனைவரும் பார்க்கும் வகையில் அமைந்து, உங்கள் நண்பர்கள் அனைவரும் அதனைக் காண்பார்கள். ஆனால், நீங்கள் இன்னொருவரின் பேஸ்புக் டைம்லைனில், போட்டோ அல்லது தகவலைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் நண்பர்கள் மற்றும் அந்த இன்னொருவரின் நண்பர்களும் காணலாம்.
தனிப்பட்ட செய்தி ஒன்றை நீங்கள் ஒருவருக்கு மட்டும் அனுப்ப வேண்டும் என விரும்பினால், மெசேஜிங் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் புதிய செய்தியை அனுப்பலாம். செய்தியை டைப் செய்துவிட்டு, எண்டர் தட்டினால் போதும். செய்தி அனுப்பப்படும். இதில் ஒன்றைக் கவனத்துடன் சரியாகக் கையாள வேண்டும். மெசேஜிங் பயன்படுத்துகையில், நாம் ஒருவரின் தகவலுக்கு மட்டும் மெசேஜ் அனுப்புகிறோம் என்பதாக இருக்க வேண்டும். அதுவே ஒரு குழு தகவலாக இருந்தால், நீங்கள் தரும் மெசேஜ் அந்த குழுவில் இருப்பவர் அனைவராலும் படிக்கப்படும். அந்தக் குழுவில் உள்ள ஒருவருக்கு மட்டும் தனியாக மெசேஜ் ஒன்று அனுப்ப விரும்பினால்,' new message' ஆக ஒன்றைத் தொடங்கி, மெசேஜ் அமைத்து அனுப்ப வேண்டும்.

கேள்வி: எனக்கு டாட்டா நிறுவனத்தின் இணைய இணைப்பு உள்ளது. என்னுடைய ஐ.பி. முகவரியை அதன் விண்டோவில் கண்டறிய முடியவில்லை. இதனை எப்படி அறிந்து கொள்ளலாம்? அதற்கான வழி என்ன?
கா.சுமதி கண்ணன், திருப்பூர்.
பதில்:
இணைய இணைப்பில் இருக்கையில் http://whatismyipaddress.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். உடன் உங்களுக்கு திரையில், உங்களின் ஐ.பி. முகவரி காட்டப்பட்டு, உடன், ISP, Services, City, Region மற்றும் Country என்று வரிசையாகத் தகவல் கிடைக்கும். இதில் ஐ.எஸ்.பி. என்பதில் உங்களுக்கு இணைய இணைப்பு தரும் Tata Communications என்ற பெயர் காட்டப்படும். அடுத்து சர்வீசஸ் என்பதில், நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட வசதி பெற்றிருந்தால் அது காட்டப்படும். இல்லை எனில் காலியாக விடப்படும். அல்லது None Detected என்று காட்டப்படும். Region என்பதில் Tamilnadu என்றும், Country என்பதில் India என்றும் காட்டப்படும்.
இன்னொரு வழியும் உள்ளது. இணைய இணைப்பில், கூகுள் தேடுதளம் பெறவும். இதில் ip address அல்லது ip அல்லது my ip என டைப் செய்து எண்டர் தட்டவும். உடன் உங்கள் ஐ.பி. முகவரி காட்டப்படும்.

கேள்வி: முன்பு கேள்வி பதில் பகுதியில், இணையத்தில் இயங்கும் ஜிமெயில் அல்லது அவுட்லுக் பயன்படுத்துமாறு விளக்கம் அளித்தீர்கள். அவுட்லுக் ஜிமெயில் அல்லது யாஹூ போல இல்லாமல், இணைய சர்வர் அடிப்படையில் இயங்காததால், அதனை நான் பயன்படுத்தி வருகிறேன். இது சரியான தகவலா?
சு. கண்ணகி, புதுச்சேரி.
பதில்:
அதாவது, நீங்கள் சொல்லும் இந்த தகவல் சரியா என்று கேட்கிறீர்கள், இல்லையா? முதலில் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். எந்த மின் அஞ்சல் சேவையும் இணையத்தில் தொடர்புடன் இயங்கும் சர்வரில் தான் இயங்குகிறது. அனைத்து மின் அஞ்சல்களும், சிறிது காலமாவது அல்லது எப்போதும் சர்வர் ஒன்றில் க்ளவ்ட் ஸ்டோரேஜ் அடிப்படையில் தங்குகின்றன. உங்களுடைய மின் அஞ்சல் முகவரியைப் பார்க்கையில், நீங்கள் இணைய சேவை வழங்கும் (ISP) நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு வரும் அனைத்து மின் அஞ்சல்களும், ஜிமெயில் அஞ்சல்களைப் போல, சர்வர் ஒன்றில் தங்கித்தான், பின்னர் உங்களுக்குக் கிடைக்கின்றன.
உங்களுடைய மின் அஞ்சல்களை, பல வகை இடைமுகங்கள் (Interfaces) பெறலாம். Outlook.com, Gmail மற்றும் பிற சேவைத் தளங்கள் வழங்கும் அஞ்சல் வசதியை, பிரவுசர் வழியாக அவை வழங்கும் இடைமுகம் மூலம் பெறலாம். உங்களின் மின் அஞ்சல் முகவரியில், உங்களுக்கு அஞ்சல் வசதியை வழங்கும் நிறுவனத்தின் பெயர் இருந்தாலும், அந்த நிறுவனம் யாஹூ சர்வரையே பயன்படுத்துவதால், உங்களுக்கு வரும் அஞ்சல்கள், யாஹூ மெயில் சர்வரில் தங்கித்தான் உங்களுக்குக் கிடைக்கின்றன. இதனால், நீங்கள் உங்கள்
கம்ப்யூட்டரை விட்டு வெளியே இருந்தாலும், உங்களுக்கான அஞ்சலை, வேறு எந்த கம்ப்யூட்டர் மூலமாகவும் பெறலாம்.
அவுட்லுக் இமெயில் க்ளையண்ட், லைவ் மெயில் அல்லது தண்டர்பேர்ட் (Live Mail or Thunderbird) போல, உங்களுக்கு மெயில் வசதியை வழங்கும் சர்வரிடமிருந்து, உங்களுக்கான அஞ்சல்களைப் பெற்று, உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. நீங்கள், உங்கள்
கம்ப்யூட்டரில் அவற்றைத் தேக்கி வைக்கிறீர்கள். அவுட்லுக், ஜிமெயில், அவுட்லுக் டாட் காம், யாஹு மற்றும் பிற மின் அஞ்சல் சேவைத் தளங்களுடன் செயல்படும்.
சில இமெயில் க்ளையண்ட் புரோகிராம்கள், நீங்கள் அதனை அமைத்துள்ள வகையில், அஞ்சல்களை நீங்கள் பெற்றவுடன், அவை தங்கியிருந்த சர்வரில் இருந்து அவற்றை நீக்கிவிடும். மீண்டும் சில முக்கிய தகவல்களை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
1. Outlook.com என்பது ஒரு மின் அஞ்சல் சேவைத் தளம். Outlook என்பது, உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் அஞ்சல்களை, சர்வரிலிருந்து இறக்கித் தரும் புரோகிராம்.
2. இமெயில் அக்கவுண்ட்களை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர் அல்லது இமெயில் க்ளையண்ட் புரோகிராம் வழியாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவை அனைத்தும் இணைய தளங்களில் இருந்தே இயங்குகின்றன.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X