2015ல் மொபைல் விளம்பரம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
2015ல் மொபைல் விளம்பரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

இந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம். டிஜிட்டல் விளம்பரச் சந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது.
மொபைல் சாதனங்களில் விளம்பரங்கள் குறித்து எரிக்சன் நுகர்வோர் அறிக்கை, விளம்பரப் பிரிவில் ஏற்பட்டு வரும் அபார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து பெற்ற தகவல்களை அளிக்கிறது. ஆசிய கண்டத்தில், மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாவது இந்தியாவில் தான். விளம்பரதாரர்கள், இந்த போன்களில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுகள் மற்றும் பொதுவான மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தங்கள் பார்வையைத் தீவிரமாகச் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திரை என்பது, மொபைல் போனின் திரைதான் என்று வரையறை செய்திடும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது. சராசரியாக 5 அங்குல திரையே பல பயனாளர்கள் விரும்பிப் பயன்படுத்துகின்றனர். இது விளம்பரம் செய்பவர்களுக்கு சவால் தருவதாக அமைகிறது. இந்நிலையில் வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் போன் விளம்பரங்கள் எப்படி வளர்ச்சி பெறும் என்பதைக் காணலாம்.
1. டிஜிட்டல் சாதனங்கள் குறித்த ஆய்வு தகவல் கட்டுரைகளின் இடத்தில், அந்த சாதனத்தை எப்படி வாங்கலாம், எந்த தளம் மூலம் வாங்கலாம் என்பதே முதன்மை தேவையாக இருக்கும்.
2. மொபைல் பக்கங்களைக் காட்டிலும், மொபைல் அப்ளிகேஷன்களையே மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.
3. தற்போது பரவலாகக் காட்டப்படும் பேனர் விளம்பரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பயனாளர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் விளம்பரங்கள் இருக்கும். சாதாரணமான மொபைல் விளம்பரப் பக்கங்களுக்குப் பதிலாக, அப்ளிகேஷன் வழியாகச் சென்று, அல்லது அப்ளிகேஷன்கள் இயக்கும் விளம்பரங்கள் இடம் பெறும். அல்லது விளம்பரதாரருடன் இலவசமாக தொலைபேசியில் பேசித் தகவல் பெறும் வகையில், தனிப்பட்ட டயலர் கட்டங்களுடன் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டு இடம் பெறும்.
4. பயனாளர் ஒருவர் தகவல் தேடும் போது, அவரின் தேடல், நேரம் மற்றும் அவரின் வயதுக்கேற்ற வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்கள் ஒரே பொருள் குறித்து கிடைக்கும்.
5. கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற தேடல் சாதனங்கள் வழியாக விளம்பரங்கள் கிடைப்பது அதிகரிக்கும்.
6. இப்போதே, மொபைல் போன்களில் விளம்பரங்களுக்கான புரோகிராம் செய்வது, சிறந்த திறமையாக மதிக்கப்படுகிறது. இதன் தேவை இன்னும் அதிகமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனை 230% அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் பேர், டேட்டா இணைப்புகளைப் புதியதாக பெற்று வருகின்றனர். இதனால், வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் வழி இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்துபவர் எண்ணிக்கை 15 கோடியாக உயரும். இது, மொபைல் விளம்பரதாரர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு நல்லதொரு சந்தையைத் தரும். இனி, மொபைல் விளம்பரங்கள், எந்த வகை விளம்பரமும் அமைத்துக் கொள்ளும் வகையில், மொபைல் விளம்பரத்திற்கான வாடைகை சுவர்கள், பயனாளர் பணம் செலுத்தும் வழிகள் மற்றும் பதிவுகள் பெறும் சேவை என விளம்பர சந்தை விரிவடையும்.
விளம்பரங்கள் இனி இடங்களைப் பொறுத்து, அங்கு வாழ்கின்ற மக்களைச் சார்ந்து மாறுதல் அடையும். விளம்பர விடியோக்கள் எண்ணிக்கை பெருகும். இவற்றைத் தயாரித்து வழங்குதல் தனிப் பிரிவாக வளரும்.
தனிப்பட்ட விளம்பர நெட்வொர்க்குகளுக்கு வர்த்தகர்கள் செல்வதைக் காட்டிலும், Google's RTB போன்றவற்றை, வர்த்தகர்கள் நாட ஆரம்பிப்பார்கள்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X