அனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
அனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

பெர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. என எதிலும், அதன் இயக்க வேகத்தை அதிகரிக்க, அதில் இயங்கும் அனிமேஷன் காட்சிகளை இயங்கவிடாமல் செய்தால் போதும். இவை நமக்கு முதலில் சற்று சந்தோஷத்தினை தரலாம். ஆனால், காலப் போக்கில் இவை தேவையற்றதாகத் தோன்றுவதுடன், சாதனங்களின் இயக்க வேகத்தினை மட்டுப்படுத்தும். எனவே, இதனை நிறுத்திவிட்டால், நிச்சயம் நம் செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ளலாம். அனிமேஷனை எப்படி நிறுத்துவது என இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் இயக்கம்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அனிமேஷனை நிறுத்தி வைக்க, அதன் தொடக்க காலத்திலிருந்தே வழிகள் தரப்பட்டன. அந்த வழிகள், விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 முதலாக அனைத்து இயக்கத் தொகுப்புகளிலும் செயல்பட்டன. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பிலும் இந்த வழிகள் இயங்குகின்றன.
அனிமேஷன் ஆப்ஷனை அணுக, கண்ட்ரோல் பேனல் திறந்து, System & Security என்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர், System என்பதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து, பக்கவாட்டில் இருக்கும் நீளமான ஸ்லைடில் “Advanced system settings” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Performance என்பதின் கீழ், Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் இயக்கும் அனிமேஷன்களுக்கான செக் பாக்ஸ் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி, எவற்றை முடக்க வேண்டுமோ, அவற்றை முடக்கிவிடலாம். அல்லது “Adjust for best performance” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்தும் முடக்கப்படும்.
புதியதாக வந்திருக்கும் விண்டோஸ் இயக்கங்களில், இந்த அனிமேஷன்கள், அவ்வளவாக, விண்டோஸ் செயல்பாட்டினைத் தடுக்காது. இருப்பினும், இவற்றின் இயக்க நிறுத்தம், விண்டோஸ் இயங்கும் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும்.
ஆண்ட்ராய்ட்: ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையில், மறைத்து வைக்கப்பட்டுள்ள Developer Options என்ற டூல் மூலம், அனிமேஷனை இயக்கவும், நிறுத்தவும் முடியும். இதற்கு முதலில் Developer Options மெனுவினை இயக்கவும். Settings அப்ளிகேஷனைத் திறக்கவும். கீழாகச் சென்று tap About phone அல்லது About tablet என்பதில் தட்டவும். இங்கு “Build number” என்ற பீல்டு எங்கிருக்கிறது என்று பார்த்து கண்டறியவும். இதனை ஏழு முறை தட்டவும். இப்போது நோட்டிபிகேஷன் ஒன்று கிடைக்கும். அதில் நீங்கள் ஒரு டெவலப்பர் எனக் காட்டப்படும்.
இனி, back பட்டன் தட்டி, Developer options என்பதனை தட்டவும். இது தற்போது செட்டிங்ஸ் மெனுவின் கீழாகக் காட்டப்படும். டெவலப்பர் ஆப்ஷன் விண்டோவில், ஸ்லைடர் ஒன்று காட்டப்படும். இதனை இயக்கி “Window animation scale,” “Transition animation scale,” மற்றும் “Animator duration scale” ஆகிய ஆப்ஷன்களை மாற்றி அமைக்கவும். முழுமையாக இயக்க நிறுத்தத்திற்கு “Animation off” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X