இந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
இந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 டிச
2014
00:00

மோட்டாரோலா நிறுவனம் மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 16 ஜி.பி. மாடல், ஏற்கனவே செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. முதலில் ரூ.31,999 என விலையிடப்பட்டு வந்த இந்த மாடல், பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ. 29,999 க்குக் கிடைத்தது. தோலினால் ஆன பின்னணியுடன் கூடிய மாடல் தற்போது ரூ. 31,999 என விலையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் 32 ஜி.பி. வகை மாடல் போன் ரூ.32,999 என விலையிடப்பட்டு விற்பனையாகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
5.2 அங்குல அளவிலான AMOLED டிஸ்பிளே காட்டும் திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 2.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் 801 ஆக உள்ளது. ராம் மெமரி 2 ஜி.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி மாடலைப் பொறுத்து 16 அல்லது 32 ஜி.பி. ஆகவும் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் ஸ்பீக்கர் முன்புறமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
டூயல் ரிங் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகிறது. இந்த மொபைல் போனின் தடிமன் 9.97 மிமீ. எடை 144 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4, ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் ராயல் புளு வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடல் போன் ரூ. 32,999க்குக் கிடைக்கிறது. தற்போதைக்கு ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் மூலமாக மட்டுமே இதனை வாங்க முடியும்.
இரண்டு மாடல் போன்களும், பழைய ஸ்மார்ட் போன்களைத் தந்து வாங்கினால், விலையில் ரூ.6,000 தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X