நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிர்வாக அலுவலர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

பொது இன்ஸ்யூரன்ஸ் பிரிவைச் சார்ந்த நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் பொதுத் துறை சார்ந்த ஒரு லாபகரமான நிறுவனமாகும். நம் நாட்டின் உள்கட்டமைப்புக்குத் தேவையான பணத்திரட்டலை ஈட்டுவதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 362 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: என்.ஐ.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி காலியிடங்களில் நிதிப்பிரிவில் 60 இடங்களும், சட்டப் பிரிவில் 60 இடங்களும், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் 30 இடங்களும், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் 20 இடங்களும், ஜெனரலிஸ்ட் பிரிவில் 192 இடங்களும் காலியாக உள்ளன.
வயது: 30.11.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு பட்டதாரிகளும், இதர பிரிவுகளுக்கு அத்துறை சார்ந்த சிறப்புப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக ஆன்-லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தையும், உங்களின் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.01.2015
இணையதள முகவரி: www.nationalinsuranceindia.com

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X