தமிழக வனத்துறை சீருடைப் பணியாளர் காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
00:00

தமிழக வனப்பகுதிகளில் பணியாற்றும் பதவிகளான பாரஸ்டர், பீல்டு அசிஸ்டென்ட் போன்ற பிரிவுகளில் சீருடையணிந்து பணியாற்றும் இடங்களில் காலியாக உள்ள 181 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை டி.என்.எப்.யூ.எஸ்.ஆர்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிட விபரம்: தமிழ்நாடு வனத்துறை சார்ந்த பாரஸ்டர் பிரிவில் 148 இடங்களும், தமிழ்நாடு பாரஸ்ட் பிளான்டேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்ந்த பாரஸ்டர் பதவிக்கு 17 இடங்களும், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்ந்த பீல்டு அசிஸ்டென்ட் பிரிவில் 16 இடங்களும் காலியாக உள்ளன.
வயது: 01.07.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளின்படி உச்ச பட்ச வயதில் 5 வருடங்கள் சில பிரிவினருக்கு உள்ளது. விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: அக்ரிகல்சர், அனிமல்ஹஸ் பென்டரி, தாவரவியல், வேதியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங், என்விரான்மென்டல் சயின்ஸ், பாரஸ்ட்ரி, மண்ணியல், ஹார்டிகல்சர், மரைன் பயாலஜி, கணிதம், இயற்பியல், புள்ளியியல், கால் நடை அறிவியல், வைல்டு லைப் பயாலஜி, விலங்கியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவை.
உடல் தகுதி: உயரத்தைப் பொறுத்த வரை ஆண்கள் 163 செ.மீயும், பெண்கள் 150 செ.மீ.,யும் குறைந்த பட்ச உயரம் கொண்டிருக்க வேண்டும். மார்பளவு ஆண்களுக்கு 79 செ.மீ.,யும் பெண்களுக்கு 74 செ.மீ.,யும் விரிவடையும் தன்மை 5 செ.மீ.,யும் குறைந்த பட்சம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.60/- மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.262/-.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி மற்றும் திருச்சி.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief Post Master,
Anna Road HO, Chennai-600 002
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.01.2015
இணையதள முகவரி: www.forests.tn.nic.in

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X