எயிட்ஸ் விழிப்புணர்வு தொலைக்காட்சி படம் ஒன்றில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ். அப்படத்திற்கு அவரது கணவர் டேனி மாடர் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர்களது இந்த சேவையை பாராட்டி, அவர்கள் இருவருக்குமே, 'மனித நேய விருது' வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா, லண்டனில் நடைபெற்ற போது, ஏராளமான ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு, இந்த தம்பதியை மனதார பாராட்டினர். அதனால், அதிக உற்சாகத்தில் இருக்கும் ஜூலியா ராபர்ட்ஸ், எதிர்காலத்தில் இன்னும் நிறைய படங்களில் சமூக நோக்குடன் தான் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
— ஜோல்னாபையன்.