கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது. அவ்வாறு ஆகும் முன், இயக்கப்படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள், சில நேரம் செயல் இழந்து நிற்கின்றன. வேர்ட் உட்பட இந்த பிரச்னை ஏற்படுகிறது. ஆனால், சில வேளைகளில் மீண்டும் இயங்குகிறது. என்ன பிரச்னை? பிரச்னை என்ன எனக் காட்டும் பிழைச் செய்திகளும் தெரியவில்லை. இதற்கான தீர்வு என்ன?
பா. செல்லமுத்து, சிவகாசி.
பதில்:
சிக்கலான கேள்வி. உங்கள் பிரச்னை குறித்து இன்னும் சில தகவல்கள் அளித்திருந்தால், இதனைப் படிக்கும் மற்ற வாசகர்களுக்கும் உதவியாய் இருந்திருக்கும். இருப்பினும், பிரச்னை இதனால் தான் என யூகித்து, கீழே பதிலைத் தருகிறேன்.
பிரச்னை ஏற்படுகையில், தானாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆனால், கிடைக்கும் பிழைச் செய்தி நமக்குத் தெரியாமலே போய்விடும். அதனால் கூட, நீங்கள் தகவல்களைத் தராமல் இருந்திருக்கலாம். பிழைச் செய்தி சரியாக நமக்குக் கிடைக்காதபோது, நாம் நமக்குத் தெரிந்த வழிகளில் முயற்சிக்கலாம். ரீஸ்டார்ட் ஆவதைத் தடுக்கும் வகையில் சில செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்திவிட்டால், உங்களின் தற்போதைய சிக்கல் தீர்ந்துவிடும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, “Control Panel” தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் ”expanded Control Panel” பயன்படுத்துபவராக இருந்தால், “System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், “System and Security” என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், “System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இடது பக்கப் பிரிவில், “Advanced system settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு User Account Control டயலாக் பாக்ஸ் கிடைத்தால், அதில் “Yes” என்பதில் கிளிக் செய்திடவும்.
5. இப்போது பல டேப்கள் கொண்ட “System Properties” என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Advanced” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
6. இங்கு “Startup and Recovery” என்பதின் கீழாக, “Settings” பட்டனில் கிளிக் செய்திடவும்.
7. இனி “Startup and Recovery” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “System failure” என்பதன் கீழாக, “Automatically restart” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
8. பின்னர், ஓகே கிளிக் செய்து அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடி வெளியேறவும். இனி, உங்கள் சிஸ்டம் முடங்கிப் போகையில், புளு ஸ்கிரீன் கிடைக்கையில், அதற்கான காரணங்களாகக் காட்டும் தகவல்களை நீங்கள் பெற முடியும். அந்தக் காரணங்களின் அடிப்படையில் தீர்வினைப் பெறலாம்.

கேள்வி: மைக்ரோசாப்ட் தன்னுடைய எக்ஸ்பி சிஸ்டத்திற்குத் தந்து வந்த ஆதரவினை விலக்கிக் கொண்டது. அதனால், இது போல இல்லாமல், தொடர்ந்து சப்போர்ட் தரும் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதே நல்லது என்று எண்ணுகிறேன். எந்த சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்பதற்கு ஆலோசனை சொல்லவும்.
என். சுகிர்தமாலா, சென்னை.
பதில்:
இது போன்ற எண்ணங்கள் மனதில் கொண்ட பலர் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறினார்கள். சிலர் லினக்ஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தினார்கள். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு தங்கள் ஓ.எஸ். அல்லது சாப்ட்வேர் அப்ளிகேஷனுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இயக்கத் தொகுப்புகளுக்கு பத்தாண்டுகள் சப்போர்ட் தருகிறது. ஆனால், ஆப்பிள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே, பாதுகாப்பு தரும் இணைப்பு கோப்புகள், பிழை திருத்தக் குறியீடுகள் கொண்ட கோப்புகளைத் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஆப்பிள் நிறுவனம் தன் Snow Leopard சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை சென்ற ஆண்டு விலக்கிக் கொண்டது. இதனால், மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களில் 20% ஹேக்கர்களின் இலக்குக்கு ஆளாயின. ஆப்பிள், தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, தன் சாதனங்களை இலவசமாக அப்கிரேட் செய்கிறது. தானாகவே, இதனைத் தன் சிஸ்டம் இயங்கும் சாதனங்களில் மேற்கொண்டு விடும். ஆனால், அனைத்து சாதனங்களையும் இவ்வாறு அப்கிரேட் செய்திட முடியாது. அப்கிரேட் செய்யப்படும் நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இயங்கிட இயலாது என்றால், ஆப்பிள் தரும் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் அதில் பதியப்பட மாட்டாது. அப்படிப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை நீங்கள் வைத்திருந்தால், அதுவும் இன்றைய நிலையில், விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டரைப் போன்ற நிலை தான். லினக்ஸ் சிஸ்டத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை சிஸ்டம் அப்டேட் கிடைக்கும். டெஸ்க்டாப் மற்றும் சர்வர் அப்டேட் தரப்படுகிறது. இவை, பாதுகாப்பினை மேம்படுத்துவதுடன், இயக்க நிலையில் ஏற்படும் பிழைக் குறியீடுகளையும் சரி செய்கின்றன.

கேள்வி: நான் ஐபோன் எஸ் 4 பயன்படுத்துகிறேன். அடிக்கடி இதில் புதிய ஒன்றைப் பதிந்திட போதுமான இடம் கிடைப்பதில்லை. கூடுதல் ஸ்டோரேஜ் மெமரி அமைத்திட, இதில் மெமரி கார்ட் இணைக்கும் இடம் எங்கு தரப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. எப்படி இணைப்பது?
என். பாத்திமா, கோவை.
பதில்:
ஐபோனில், கூடுதல் மெமரி பெற மைக்ரோ எஸ்.டி.கார்டினைப் பொருத்த முடியாது. ஆப்பிள் நிறுவனம் அதன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதியைத் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால், உங்கள் பிரச்னைக்கு வேறு கோணத்தில் தீர்வு காணலாம்.
உங்கள் போனில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை நீக்கவும். அதன் பின்னர் உங்களுக்கு வேண்டும் என்றால், எப்போதும் ஐ ட்யூன்ஸ் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும். எனவே, மீண்டும் கிடைக்காதோ என்ற அச்சமின்றி, அவற்றை நீக்கவும். போனில் உள்ள போட்டோக்களை வேறு ஒரு ஸ்டோரேஜ் இடத்திற்கு, எடுத்துக் காட்டாக உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டருக்கு மாற்றவும். பின்னர், அவற்றை போனில் இருந்து நீக்கிவிடவும். இதனால், போதுமான இடம் கிடைப்பதுடன், போன் தொலைந்து போகும் அல்லது திருடப்படும் பட்சத்தில், போட்டோக்களைப் பாதுகாப்பாக இன்னொரு இடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
கூடுதல் ஸ்டோரேஜ் பெற மெமரி கார்டை இணைப்பது குறித்து கேட்டுள்ளீர்கள். ஐபேட் அல்லது ஐபோனில், வெளியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ் அல்லது வேறு ஸ்டோரேஜ் சாதனங்களை இணைத்து இயக்க முடியாது. ஆண்ட்ராய்ட் போன்களில், இது போல மெமரி கார்ட்களை உள்ளாக இணைக்கவும், வெளியில் இருந்து இணைப்பில் ஹார்ட் ட்ரைவ் போன்றவற்றை இணைக்கவும் வசதி உள்ளது. ஏனோ, ஆப்பிள் அத்தகைய இணைப்புகளை எப்போதும் அனுமதித்ததில்லை. அதாவது, அவ்வகையில் தன் சாதனங்களை வடிவமைக்கவில்லை.

கேள்வி: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பி.சி.க்கும், கிண்டில் (Kindle) சாதனத்திற்கும் இடையில் என்ன வேறுபாடு? அல்லது வேறுபாடே இல்லையா?
என். மஹேஸ்வரன், மதுரை.
பதில்
: நீங்கள் எந்த மாடல் கிண்டில் சாதனம் குறித்து இந்த கேள்வி எழுப்புகிறீர்கள் என்று கூறவில்லை. நீங்கள் Kindle eReader மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் குறித்து எழுதி இருக்கிறீர்கள் என்றால், இரண்டிற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. Kindle eReader என்பது, டெக்ஸ்ட்டைப் படிப்பது என்ற ஒன்றை முதன்மை வசதியாகக் கொண்டு இயங்குவதாகும். வேறு எந்தச் செயல்பாடும் அதில் மேற்கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் Kindle Fire tablet குறித்து சந்தேகம் எழுப்பியிருப்பதாக இருந்தால், இரண்டிற்கும் இடையே அவ்வளவாக வேறுபாடு இல்லை என்றே கூற வேண்டும். Kindle Fire tablet என்பது ஒரு ஆண்ட்ராய்ட் டேப்ளட் சாதனம்தான்.

கேள்வி: அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் ப்ராஜக்ட் ஒன்றில், வேர்ட் டாகுமெண்ட்களில், எடிட்டிங் பணி புரிவதில், அதில் செலவழிக்கப்படும் நேரத்தைக் கணக்கிட வேண்டியுள்ளது. இதனைக் கணித்து, அதே டாகுமெண்ட்டில் அமையும்படி வைத்திட முடியுமா?
-என். சுகவனேஸ்வரன், திருச்சி.
பதில்:
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, நாம் என்ன பணி செய்தாலும், அது கம்ப்யூட்டரால் கண்காணிக்கப்படும். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் திறன், நேரம் மற்றும் பிறவற்றைக் கண்காணிப்பதுடன், நாம் விரும்பினால், கம்ப்யூட்டரில் அதனைப் பதிவு செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. வேர்ட் டாகுமெண்ட்டினைப் பொறுத்தவரை இந்த வசதிகள் கூடுதலாகவே உள்ளன. நாம் உருவாக்கும் சொற்கள், நீக்கிய சொற்கள், மாற்றங்கள் மற்றும் நீங்கள் குறிப்பிடும் நேரம் ஆகியவற்றையும் இந்த புரோகிராம் தருகிறது. நாம் பணியாற்றுகிறோமோ இல்லையோ, டாகுமெண்ட் ஒன்றைத் திறந்துவிட்டால், அந்த நேரம் முதலே, அது எடிட் செய்யப்பட்டதாகக் கருதப்படும். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இதற்கான வழிகளைப் பார்ப்போம்.
1. எங்கு எடிட் டைம் காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. வேர்ட் ரிப்பனில் கிடைக்கும் Insert டேப்பினை கிளிக் செய்து அந்த பகுதியினைப் பெறவும்.
3. Text group கிளிக் செய்து திறந்து, Quick Parts டூலில் கிளிக் செய்திடவும். பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும்.வேர்டில் இப்போது Field டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இங்கு Categories என்ற பட்டியலைப் பெறவும். Date and Time என்பதனை Categories பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து கிடைக்கக் கூடிய பீல்டுகளிலிருந்து EditTime என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் அருகே வலது பக்கத்தில், எண்களாக இருந்தால், என்ன பார்மட்டில் வேண்டும் என்பதனையும் நாம் அமைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கேட்டபடி, வேர்ட்டாகுமெண்ட்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட எடிட் டைம் பதியப்படும்.

கேள்வி: நான் என் பேஸ்புக் அக்கவுண்ட்டை மூட முடிவு செய்துவிட்டேன். ஆனால், என் நண்பர்களுடன் நான் நடத்திய தகவல் பரிமாற்றங்கள், என்னுடைய மற்றும் அவர்களுடைய பதிவுகள், படங்கள், வீடீயோக்களை மட்டும் பார்க்க விரும்புகிறேன். இது சாத்தியமா?
என். தெய்வேந்திரன், புதுச்சேரி.
பதில்:
பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல், அதில் பதிந்துள்ளவற்றைப் பார்வையிட முடியாது. உங்கள் அக்கவுண்ட்டினை மூடிவிட்டால், பேஸ்புக் தளத்தின் செயல்பாட்டில் நுழைந்து உங்கள் நண்பர்களின் அல்லது உங்களின் பதிவுகளை அணுக இயலாது. ஆனால், உங்களுடைய பேஸ்புக் டேட்டாவினை சேவ் செய்து பதிந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். பேஸ்புக் தளம் சென்று, உங்களுடைய அக்கவுண்ட்டில் நுழையவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். General Account Settings என்பதன் கீழ், Download a copy of your Facebook data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து நீங்கள் உங்களுடைய பதிவுகள், வீடியோ, மற்றவர்களுடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றி சேவ் செய்து கொள்ளலாம். இதனை வைத்துக் கொண்டு, உங்கள் அக்கவுண்ட்டை நீக்க வேண்டும் என்றால், நீக்கிவிடலாம். சேவ் செய்த கோப்பினைத் திறந்து, பழைய பதிவுகளைப் பார்வையிடலாம். அக்கவுண்ட் நீக்கத்திற்கு https://www.facebook.com/help/delete_account என்ற முகவரிக்குச் செல்லவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X