தங்கமான மனசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

'சூரியன் உதிப்பதை பார்ப்பவன் பாக்கியசாலி; பார்க்காதவன் துரதிர்ஷ்டசாலி...' என்பது கிராமத்து சொலவடை. சூரியன் உதிக்கும் முன் எழுந்து, சூரியதோயத்தை தரிசித்து, வணங்கி, தன் கடமையைச் செய்பவனின் வாழ்வில் வெற்றி குவியும். அதனால், அவன் வாழ்வு செழித்து பாக்கியசாலி ஆகிறான். 11:00 மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கி, உழைக்கும் கடமையை மறப்பவன், வாழ்வில், உடலில் பல்வேறு நோய்களும் மற்றும் பணக் கஷ்டங்களும் ஏற்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் துரதிர்ஷ்டசாலி ஆகிறான்.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இரவு, 11:00 மணிக்கு தூங்கச் செல்வதும், காலை, 8:00 மணிக்கு எழுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும், சூரியனுக்கே உரித்தான ஞாயிற்றுக்கிழமைகளில், காலையில் எழுவதே இல்லை. இதனால், உடல் மட்டுமல்ல, மனதும் கெட்டுப்போகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை.
ராவணனை வெல்வதற்குரிய உத்தியை ராமனுக்கு உபதேசித்த அகத்தியர், 'ராமா... சூரிய குலத்தவனான நீ, சூரிய வழிபாட்டின் மூலமே, ராவணனை எளிதில் வெல்ல முடியும்...' என்று கூறி, சூரியனை வழிபடுவதற்குரிய, 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகங்களை உபதேசித்தார்.
வாழ்வில் வெற்றி வாகை சூட, சூரியனின் தயவு அவசியம். இதனால் தான், நம் முன்னோர் காலை, 4:30 மணிக்கு எழுந்தனர். இதை பிரம்ம முகூர்த்த வேளை என்பர்.
தன் தோழிகளை அதிகாலையிலேயே துயில் எழுப்பி, நீராட செல்வோம் என, அழைக்கிறாள் ஆண்டாள். அதில் ஒரு பாடலில், 'கீழ் வானம் வெள்ளென்று...' என்ற வரிகள் உள்ளது. 'கிழக்கு வெளுத்து விட்டது; புறப்படலாம்...' என்பது இதன் பொருள். இதில், ஒரு மறைபொருள் புதைந்துள்ளது. 'கீழ்வானம்' என்ற ஒன்று இருந்தால், 'மேல் வானம்' என்ற ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா!
இதிலே, கீழ்வானம் என்பது மனிதர்கள் வசிக்கும் பகுதி; மேல்வானம் என்பது கடவுளின் இடம். கீழே இருப்பவர்களின் மனம் வெளுத்தால் தான், மேலே இருக்கும் கடவுளை அடைய முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். சூரிய உதயத்தை கருப்பொருளாக வைத்து, எவ்வளவு பெரிய தத்துவத்தை உதிர்த்திருக்கிறாள் பாருங்கள்.
மனம் வெளுத்திருக்க வேண்டும் என்றால் எப்படி?
ராமனின் பட்டாபிஷேக நாள்... தாய் கவுசல்யா, மகன் பட்டம் சூட்டி மகுடத்துடனும், சகல பரிவாரங்களுடனும் வருவான் என, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், மகன் அமைதியாக வந்து தாய் முன் நிற்கிறான்.
'என்னப்பா... முடிசூட்டு விழா நடக்கவில்லையா?' என்று கேட்கிறாள் கவுசல்யா.
'நடந்தது தாயே... எனக்கில்லை, என் தம்பி பரதனுக்கு...' என்கிறான் ராமன்.
'மூத்தவனுக்கு பட்டம் சூட்டுவது தான் வழக்கம். இருப்பினும், முடிசூட்டிக் கொண்டிருக்கிறானே பரதன்... அவன் உன்னை விட மூன்று மடங்கு நற்குணங்கள் பொருந்தியவன், மகா உத்தமன்...' என்று பதிலளித்தாள் அந்தத் தாய்.
எவ்வளவு உயர்ந்த மனது பாருங்கள்! மனமானது இவ்வாறு தான் வெளுத்திருக்க வேண்டும்.
ரதசப்தமி என்றால், சூரியனுக்குரிய திதி. இந்நாளில், சூரியன் தன் பாதையில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்வார். அன்று, விரதமிருந்து பொங்கல் வைத்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதுடன் நின்றுவிடாமல். அதிகாலையில் எழும், நல்ல பழக்கத்தை துவங்கவும், நல்ல மனதுடன் திகழவும் உறுதியெடுக்க வேண்டும். செய்வோமா!

தி.செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
t.chellappa - Madurai,இந்தியா
31-ஜன-201515:00:04 IST Report Abuse
t.chellappa திரு.சுந்தர் அவர்களுக்கு, தங்கள் சந்தேகம் நியாயமானதே. ராமன் குடும்பத்து கதாபாத்திரங்கள் நம்மைப் போல் அல்ல. அவர்கள் குணத்தால் உயர்ந்தவர்கள். பரதனுக்கு பட்டாபிஷேகம் முடிந்து விட்டதாகவே கருதி கவு்சல்யா இப்படி கேட்கிறாள். பட்டாபிஷேகம் நடக்கும் இடத்துக்கு பெண்கள் யாரும் போகவில்லை என்பதும், அவர்கள் அறியாமல் கேட்கிறார்கள் என்பதும இந்த உரையாடலில் இருந்து தௌிவாகிறது. ஒருவேளை பரதன் வௌியூரிலிருந்து வரவழைக்கப்பட்டு பட்டம் சூட்டப்பட்டிருக்குமோ என்ற அர்த்தத்தில் அவள் கேட்டிருக்கலாம். இன்னும் தௌிவு வேண்டுமென்றால் ஆன்மிக உபன்யாசகர் திரு. முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் எழுதிய குறையொன்றுமில்லை பேச்சுத்தொகுப்பக் கேட்டுப்பாருங்கள். இது புத்தமாக கூட வௌி வந்துள்ளது. வாலமீகி ராமாயணத்தையும், பாரதத்தையும் கரைத்துக் குடித்த அவரே இப்படித்தான் சொல்லியுள்ளார். தங்கள் கருத்துக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
26-ஜன-201512:53:48 IST Report Abuse
P. SIV GOWRI ஞாயிற்றுக்கிழமைகளில், காலையில் எழுவதே இல்லை. நிஜமாவே நிறைய பேர்களிடம் இந்த கெட்டபழக்கம் உள்ளது. ரெஸ்ட் வேண்டும் என்று சொல்கிறார்கள். இது தவறான பழக்கம்,.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Taipei, Taiwan,சிங்கப்பூர்
25-ஜன-201509:41:32 IST Report Abuse
Sundar ராமாயண கதையில் பரதனுக்கு பட்டம் சூட்டவே மாட்டார்கள். ராமன் பட்டமளிப்பு விழாவின் போது பரதன் நாட்டிலேயே இருக்க மாட்டான். நல்ல விஷயம் சொல்லும்போது தவறாக கூறகூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X