இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

பரிகார ராசியா, பரிகாச ராசியா?
என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.
ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!
- எல்.சிவகாமி,திருவள்ளூர்.

ஆளைப் பார்க்காதீர்!
கசாப்புக் கடை வைத்திருக்கும் என் நண்பருக்கு, திருமணத்திற்கு பெண் தேடிய போது எளிதில் கிடைக்கவில்லை. கசாப்பு கடை என்றதும், வெறும் லுங்கி, பனியனும், கையில் அரிவாளுமாக அவரை கற்பனை செய்து கொண்டு, யாரும் பெண் கொடுக்க சம்மதிக்கவில்லை.
கல்யாணம் என்றாலே, ஆபீஸ் வேலை, அழுக்கு படியாத தோற்றம் கொண்ட மாப்பிள்ளைகளை நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, நண்பரை பிடிக்காமல் போனதில் வியப்பில்லை.
கடைசியில், ஆசிரியர் வேலைக்கு படித்த பெண் கிடைத்தது. கல்யாணம் முடித்த கையோடு, தன் மனைவிக்கு வேலையும் வாங்கிக் தந்தார் நண்பர். ஆசிரியர் வேலை பார்க்கும் அவரது மனைவியும், கணவரது தொழிலை விரிவுபடுத்த யோசனை கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர, தடை ஏதும் போடவில்லை. நேர்மையான வேலையும், அதன் வருமானமும் தான் முக்கியமே தவிர, வீண் கவுரவம் தேவையில்லை.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்களே... கணவரை தேர்வு செய்யும் போது, வீண் கனவுகளுக்கு முக்கியத்துவம் தந்து, நல்ல வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்!
எம்.கிருஷ்ணன்,காஞ்சிபுரம்.

'கொட்டு' வைத்தியம்!
சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார். பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.
'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.
கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?
சங்கமித்ரா நாகராஜன், கோவை.

கம்பன் ஓ பாசிடிவ்!
சமூக வலைதளங்களில், தங்கள் கணக்குகளை துவக்குபவர்கள், 'மாதவன் தி கிரேட்' 'பிரதோஷ் டைம் ஹாஸ் கம்' 'ராகுல் ஹாண்ட்சம்' என்பது மாதிரியான வித்தியாசமான பெயர்களை வைப்பர். ஆனால், கம்பன் என்பவர், தன்னுடைய கணக்கிற்கு, 'கம்பன் ஓ பாசிடிவ்' என்று பெயர் வைத்திருக்கிறார். பெயரோடு தன்னுடைய, 'ப்ளட்' குரூப்பையும் சேர்த்து, கணக்கு துவங்கியிருக்கும் அவருடைய செயல், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம், 'ஓ' பாசிடிவ் ரத்தம் தேவைப்படுவோர் அவரை அணுகலாம்.
சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், சமூக அக்கறை கொண்ட இவரை போன்றவர்களை நினைக்கும் போது, பெருமையாக இருக்கிறது. சமூகவலை தளங்களை, நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இவர்.
ஜெ.கண்ணன், சென்னை.

புத்தகம் பரிசளிப்பவரா நீங்கள்?
நானும், என் நண்பரும் மற்றொரு நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தோம். நான், மொய் பணம் கொடுத்தேன்; நண்பரோ, புத்தகம் ஒன்றை மணமக்களுக்கு பரிசளித்தார்.அடுத்த சில நாட்களில், மாப்பிள்ளை எங்கள் மீது கோபமாக இருக்கிறார் என, தெரிய வந்தது.
என்னவென்று தெரிந்து கொள்ள, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு சென்றேன். அப்போது தான் அவரின் கோபத்திற்கு காரணம் தெரிந்தது.
என் நண்பர் பரிசளித்த புத்தகம், 'செக்ஸ்' பற்றியது. புதுமணத் தம்பதிகளின் அந்தரங்கத்திற்கு தேவையான விளக்கங்கள், வரைபடங்களுடன் இருந்தது. திருமணம் முடிந்த மறுநாள், சுற்றம் சூழ உறவினர்கள் மத்தியில், திருமணத்திற்கு வந்த பரிசுகள் பிரிக்கப்படும் போது, மணப் பெண்ணின் உறவுகளிடம் இந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது.
நண்பரை போட்டு உலுக்கி எடுத்திருக்கின்றனர். நீண்ட விளக்கம் கொடுத்த பின்பே, நிலைமை சகஜ நிலைக்கு வந்திருக்கிறது.
நண்பர்களே... புத்தகம் பரிசளிப்பது நல்ல பழக்கம் தான். ஆனால், அது முகம் சுளிக்க வைக்கக் கூடியதாக இல்லாமல் தரமான புத்தகமாக இருக்க வேண்டும்.
- எஸ்.சஞ்சய் ராமசாமி, துறவிக்காடு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arumugamchervai Ramakrishnan - Chennai,இந்தியா
30-ஜன-201500:06:25 IST Report Abuse
Arumugamchervai Ramakrishnan ஜனவரி 25,2015 தினமலர் வாரமலர் இதழில், "இது உங்கள் இடம் " பகுதியில், "ஆளைப்பார்க்காதீர் " எனும் கடிதம் மூலம், வீண் ஜம்பமும், வெளிப்பகட்டும் இல்லாத, கணவனும் மனைவியும் அவரவர் செய்யும் பணியையும் தொழிலையும் மதித்து, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்ந்தால்,குடும்பம் ஏற்றம் பெறுவது திண்ணம் என்பதை காஞ்சிபுரம் கிருஷ்ணன் அவர்கள் எடுத்துக்காட்டுடன் உணர்த்தி இருந்தார். இதனை புதிதாக திருமணம் செய்ய இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியாகும். நன்றி வணக்கம். ஏ.சி .ராமகிருஷ்ணன், மறைமலைநகர்.
Rate this:
Cancel
murli - kampala,உகான்டா
27-ஜன-201515:49:41 IST Report Abuse
murli எல் சிவகாமிக்கு : முல்லை முள்ளால் எடுங்கள், மூளை இ உபயோகபடுதுங்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜன-201515:08:59 IST Report Abuse
Girija இந்த புத்தகம் மற்றும் வீடியோக்களை, கல்யாண பரிசாக ஆண், ஆண் நண்பருக்கும், பெண் பெண் நண்பருக்கும் தான் கொடுக்க வேண்டும், மாற்றி செய்துவிடாதீர்கள், அது அவர்கள் நிம்மதியை கெடுத்துவிடும். நினைவில் கொள்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X