அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

ஏ.சண்முகசுந்தரம், துவரிமான்: நண்பர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
நாம் துன்பத்தில் இருக்கும் போது நம்மிடம் வருத்தப்படுவது போல் நடித்து, பிறரிடம் நம்மை கிண்டல் செய்து, நம் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள், ஒன்று! நம் துன்பத்தில் பங்கு கொண்டு துன்பத்தை நீக்க, வழி செய்யத் தெரியாதவர்கள், இரண்டு! துன்பம் நீங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்பவர்கள், மூன்று! ஆக, நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். உங்களது நண்பர்களில் முதல் மற்றும் மூன்றாம் வகை நண்பர்கள் எத்தனை?

எம்.குழந்தைவேல், கருப்பட்டி: பிச்சைக்காரர்களை நம் நாட்டில் அறவே ஒழித்து விட முடியாதா?
உழைக்க அஞ்சும் - மறுக்கும் சோம்பேறிகள் இருக்கும் வரை, உலகின் எந்த மூலையிலும் பிச்சைக்காரர்களை ஒழிக்கவே முடியாது!

வி.கண்மணி, பெரியகுமட்டி: திருமணமான என் நண்பர் ஒருவர், தன்னை நிறைய பெண்கள் விரும்பினர் என்று அடிக்கடி என்னிடம் கூறுகிறார். இது எதற்கு?
பார்ட்டி படியுமா, படியாதா என, உங்களிடம் நூல் விட்டுப் பார்க்கிறார் மேடம்... ஜாக்கிரதையாக இருங்கள். இனியும், அவரை, நண்பராக கருத வேண்டுமா என, நன்கு யோசிதது முடிவு செய்யுங்கள்!

ஆர்.குணசெல்வி, காமரசவல்லி: இந்திய பெண்களின் முன்னேற்றம் உங்களை வியக்க வைக்கிறதா, திகைக்க வைக்கிறதா?
ஏன் வியக்க, திகைக்க வேண்டும்? இயல்பிலேயே அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகள், இப்போது தான் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன. இது, மகிழ்ச்சியை தருகிறது!

ஜெ.மாரிமுத்து, அரியலூர்: பெண்கள் எப்போதும் மென்மையாகத் தான் இருக்க வேண்டுமா?
தேவையில்லை. எப்போதும் மென்மையாக இருந்தால், சவைத்து துப்பி விடுவர். இருக்க வேண்டியவர்களிடம் இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில், நேரத்தில் மட்டுமே மென்மையாக இருக்க வேண்டும்!

எம்.முகம்மது இஸ்மாயில், எல்லீஸ்நகர்: 'காதலர்கள் தற்கொலை' என்று, தினமும் செய்தி வருகிறதே... இம்மாதிரியான செய்திகளைப் படிக்கும் போது, உங்களுக்கு என்ன தோன்றும்?
அல்பாயுசில் போன அந்த இரு ஜீவன்களை எண்ணி, மனம் வேதனைப்படும். இளம் பெண்களே, இளைஞர்களே... நிறைவேறாது என, ஆரம் பத்திலேயே தெரிந்தால், காதலிக் காதீர்கள்; பின், வேதனைத் தீயில் விழுந்து துடிக்காதீர்கள்!

என்.வளையாபதி, புறத்தாக்குடி: மனைவி அடித்தால் வலிக்காது என்கின்றனரே... உண்மையா?
ப்ளீஸ் வெயிட்... லென்ஸ் மாமாவை கேட்டுச் சொல்கிறேன்!

வே.பிரபு, கோண்டூர்: படித்த பெண்கள் கூட மூட நம்பிக்கையிலும், வரதட்சணை கொடுமையிலும் சிக்கித் தவிக்கின்றனரே...
சிந்திக்க கற்றுத் தராத பாடத் திட்டமும், பழமைவாதிகளின் வறட்டு பேச்சும், கவுரவுமும் பெண்களுக்கு எதிராக செயல் படுவதால் தான், இக்கொடுமை தொடர்கிறது. ஆனால், ஆங்காங்கு வெளியாகும் செய்திகளை படிக்கும் போது, பெண்களை சுற்றி உள்ள விலங்குகள் உடைபட்டு வருவதாகவே தோன்றுகிறது!

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X