ஏன் இந்த விபரீதம்? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஏன் இந்த விபரீதம்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

அமெரிக்காவின் பிரபல மாடலும், 'டிவி' மற்றும் திரைப்பட நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில், பிரிட்டனை சேர்ந்த ஜோர்டான் ஜேம்ஸ் பரோக் என்பவர், கிம்மின் வெறிப்பிடித்த ரசிகர். இத்தனைக்கும், இவர், பிரபலமான, 'மேக் - அப்' நிபுணரும் கூட. கிம்மின் மீது கொண்ட வெறியால், அவரைப் போலவே மாற வேண்டும் என்ற விபரீத ஆசை இவருக்கு வந்தது. இதற்காக, இதுவரை, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் முகத்தில், 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இப்போது, ஓரளவு கிம் போல் மாறி விட்டார். கிம் கர்தாஷியனுக்கு உதடுகள் பெரியது. இதனால், உதடுகளில் அறுவை சிகிச்சை செய்வதற்கு தான், அதிகமாக சிரமப்பட்டாராம், ஜேம்ஸ்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X