படத்தில் உள்ள மீன், நெத்திலி போன்று காட்சியளித்தாலும், இது நெத்திலி மீன் அல்ல; குழவால் மீன். வேறு எங்கும் காணப்படாத இம்மீன், கொல்லம் - அஷ்ட்டமுடி நீர்த்தேக்கத்தில் மட்டும் காணப்படுகிறது. அதுவும், மழைக் காலத்தில் மட்டுமே தென்படுகிறது.
கேரள அரசின் முன்னாள் மீன் வள ஆராய்ச்சி கமிஷன் தலைவர் சஞ்ஜீவ் கோஷ் கூறுகையில், 'அஷ்ட்டமுடி காயலில், 39 வகை, இனத்தை சேர்ந்த, 97ரக மீன்கள் உண்டு...' என்கிறார். மழைக்காலம் வந்து விட்டால், குழவால் மீன் சாப்பிடுவதற்காக, ஏராளமானவர்கள் கொல்லம் - அஷ்ட்டமுடி நீர்தேக்கத்திற்கு வந்து விடுவர். 'குழவால் மீன் கறி, கப்பயும் (மரவள்ளிக்கிழங்கு)சேர்த்து, கள்ளு குடித்தால், பேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாருக்கும்...' என்கின்றனர் இங்குள்ள, 'குடி' மகன்கள்.
— ஜோல்னாபையன்.