பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

மதுரா நகரில் உள்ள பிருந்தாவனம், கண்ணன் வாழ்ந்த இடம் என போற்றப்பட்டாலும், இன்று, 'விதவைகளின் நகரம்' என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு, 60,000க்கும் மேற்பட்ட வயதான விதவைகள் உள்ளனர்.
'கண்ணன் காலடி பட்ட பூமியில் கால் வைப்பது புண்ணியம்...' என்று நினைக்கும் பக்தைகள், தங்களை கோபிகைகளாக நினைத்து இங்கு வருகின்றனர். மேலும், சிலர், தங்கள் வீட்டில் உள்ள வயதான விதவை பெண்களை, பிருந்தாவனத்தை காட்டுவதாக அழைத்து வந்து, மக்கள் கூட்டத்துக்குள் விட்டுச் செல்கின்றனர். இப்படி பல மாநிலங்களில் இருந்து வந்த விதவைகள், இங்கு பிச்சை எடுத்து வாழ்கின்றனர்.
இங்கு மதன்மோகன் கோவில், கருட கோவிந்த கோவில், பிருந்தாவன் சந்திரோதய கோவில் மற்றும் பிரேம் மந்திர் ராதாவல்லப கோவில் என, 20க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இங்கெல்லாம், இந்த வயதான விதவைகள், பக்தர்கள் முன் கை ஏந்தி நிற்கும் காட்சி, மனதை கசக்குகிறது.
ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X