முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா, விளையாட்டு பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சிறு வயதில், பய்யோளி கிராமத்தில் ஓட்டப் பயிற்சி செய்யும் போது, அவர் தந்தையும் ஒரு தடியுடன் அவர் பின்னாலேயே ஓடுவார். காரணம், இக்கிராமத்தில் நாய் தொல்லை அதிகம். யாராவது ஓடுவதை கண்டால் நாய்களும் துரத்திக் கொண்டு, ஓடுவது வழக்கம். இதைக் குறிப்பிட்ட உஷா, 'இப்படி தான் வேகமாக ஓட கற்றுக் கொண்டேன். ஆனால், அன்றைய காலகட்டங்களில் எனக்கு உதவி செய்தவர்களை விட, துரோகம் செய்தவர்கள் தான் அதிகம். ஆரம்ப காலத்தில் பல ஊர்களுக்கு சென்று பந்தயங்களில் கலந்து கொள்ள பணமின்றி அவதிப்பட்ட போது கேத்தலிக் சிரியன் வங்கி தான் நிதி உதவி செய்தது. அதை மறக்க முடியாததால், இன்றும் அந்த வங்கியில் மட்டும் தான் கணக்கு வைத்து இருக்கிறேன்...' என்று கூறியவர், 'என் மாணவியர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற பின், சுயசரிதை எழுதுவேன்...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.