வேர்ட் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

பக்கங்களில் தாவிச் செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
1. Tools மெனுவிலிருந்து Customize என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Commands என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். வேர்ட் கட்டளைகள் சில வரிசையாகத் தரப்படும்.
3. இந்த பட்டியலின் இட்து பக்கம் All Commands என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. வலது பக்கம் உள்ள பிரிவில் AutoScroll என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இந்த AutoScroll ஆப்ஷனை உங்கள் டூல்பார்கள் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், AutoScroll என்னும் பெயருடன் ஒரு பட்டன் டூல்பார்களில் தோன்றுவதைப் பார்க்கலாம்.
6. தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து Customize டயலாக் பாக்ஸை மூடவும்.
இந்த புதிய கட்டளையைப் பயன்படுத்த, புதிய டூல் பார் பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வாறு செய்திடுகையில், வலது பக்கம் உள்ள நெட்டு வாக்கில் உள்ள பார் மாறும். புதிய இரட்டை அம்புக் குறி ஒன்று தோன்றும். இந்த அம்புக்குறியினை மேலாகவும் கீழாகவும் ஸ்குரோல் பாரில் நகர்த்துவதன் மூலம், டாகுமென்ட் எவ்வளவு வேகமாக நகர்த்தப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடலாம். இந்த வேகமாக நகர்த்தும் செயல்பாட்டிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்துங்கள். அல்லது மவுஸ் பட்டனை அழுத்துங்கள்.

பக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.
2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று
இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.
3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே
கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.
4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.
5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.

கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Font Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (copy ).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (Replace)
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.
Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.
Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.
Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட.
Ctrl+t:பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி அமைக்க.
Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.
Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.
Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.
Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.
Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.
Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.

பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூ டூல்பாரில் கிடைக்கும் பிரிவியூ குரூப்பில், Magnifier டூலை, டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு நீக்கவும். இவ்வாறு செய்தவுடன், ஏற்கனவே பிரிவியூ தோற்றத்தில் காணப்படும் கர்சர் வழக்கமான ஐ-பீம் போலக் காட்சி அளிக்கும். டாகுமெண்ட் நார்மல் வியூவில் கிடைக்கும். உடன் டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivekisravel - rajapalayam,இந்தியா
28-ஜன-201519:45:19 IST Report Abuse
vivekisravel Thanks for tips
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X