கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

கேள்வி: வாட்ஸ் அப் மெசேஜிங் அப்ளிகேஷனில், இப்போது, நாம் யாருக்கு தகவல்களை அனுப்புகிறோமோ, அவர்கள் அதனைப் படித்த பின்னர், நம் மொபைல் போனில், நீலக் கலரில் டிக் அடையாளம் காட்டுகிறது. எதற்காக இந்த வண்ண டிக் அடையாளம்? இதனை நிறுத்த இயலுமா?
என். பாத்திமா, காரைக்கால்.
பதில்:
நீங்கள் சுட்டிக் காட்டுவது, வாட்ஸ் அப் வழங்கிய 'read receipt' வசதி ஆகும். தகவலைப் பெற்றவர்கள், அதனைப் படித்துவிட்டால், இரண்டு நீல நிற டிக் அடையாளம் மூலமாக, நமக்கு அது தெரிவிக்கப்படுகிறது. இதனை ஒரு வசதி மேம்பாடாகவே, வாட்ஸ் அப் அளித்தது. ஆனால், பலருக்கு இது பிடிக்கவில்லை. ”நான் தகவலைப் படித்தேனா இல்லையா என்பது என் தனிப்பட்ட விருப்பம். இது ஏன் அந்த தகவலை எனக்கு அனுப்பியவருக்கு தர வேண்டும்” என்று பலரும் விரும்பவில்லை. இதனை உணர்ந்தவுடன், இந்த வசதி அறிமுகமாகி, இரண்டு வாரங்களிலேயே, இந்த வசதியை, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி, நிறுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. அதற்கான வழிகள் இதோ: இது ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. உங்கள் app settings பிரிவிற்குச் செல்லவும். அடுத்து, “privacy option” என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு 'Read Receipts' என்ற ஆப்ஷனை இயங்கா நிலைக்குத் தேர்வு செய்திடவும். அவ்வளவுதான். இனி, உங்கள் தகவல்கள் படிக்கப்பட்டதற்கான நீல நிற டிக் தோன்றாது. மற்றவற்றை உணர்த்தும் டிக் அடையாளங்கள் எப்போதும் போலக் காட்டப்படும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அன்றைய தேதியை அமைக்க என்ன பார்முலா கொடுக்க வேண்டும்? என் நண்பர் அதற்கு கீ போர்ட் ஷார்ட் கட் கீ உண்டு என்றும், ஆனால், நினைவில்லை என்றும் கூறுகிறார். உங்கள் விளக்கத்தினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். சுந்தர மூர்த்தி, சென்னை.
பதில்:
வெகுநாட்களாக இந்த குறிப்பினை எழுத எண்ணியிருந்தேன். உங்கள் கேள்வி, அதனை உடனே எழுதத் தூண்டிவிட்டது. நன்றி. மைக்ரோசாப்ட் எக்ஸெல் புரோகிராமில், பல பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. உங்களில் பலர், நாம் மேற்கொண்டதை ரத்து செய்திட 'Ctrl' 'Z' கீ பயன்படுத்துவதை நினைவில் கொண்டிருப்பீர்கள். இதைப் போல பல பொதுவான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நம்மில் பலர் பயன்படுத்துவோம். அன்றைய நாளினைத் தர 'Ctrl' + ';' கீகளைப் பயன்படுத்துங்கள். எதற்காக 29012015 என எழுத வேண்டும். மேலே குறிப்பிட்ட ஷார்ட்கட் கீ தொகுப்பினைப் பயன்படுத்தினால் போதும்.
=Now() or =Today() போன்றவற்றில், அவ்வப்போது இதன் மதிப்பு, அதாவது நாள் மாறுபடும். ஆனால், கண்ட்ரோல் கீ பயன்படுத்தி அமைத்துவிட்டால், தரப்படும் நாள் மாறாமலேயே இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திகென, மைக்ரோசாப்ட் தந்து வரும் சப்போர்ட் நிறுத்தப்பட்டது எனப் படித்தேன். உண்மையா? இனி, விண்டோஸ் 7 பயன்படுத்துவது, எக்ஸ்பி மாதிரி ஆபத்து நிறைந்ததா? பயந்திருக்கிறேன். பயத்தைப் போக்கும் விதமாக பதில் தரவும்.
எஸ். ஜெயச்சந்திரன், கோவை.
பதில்:
பயப்பட வேண்டாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இனி புதிய வசதிகள் கிடைக்காது. பழைய வசதிகளும் மெருகூட்டப்பட மாட்டாது. அவ்வளவுதான். மற்றபடி பாதுகாப்பான இயக்கத்திற்கான சப்போர்ட் பைல்கள் தொடர்ந்து கிடைக்கும். ஜனவரி 13, 2020 வரை இவ்வகை சப்போர்ட் பைல்கள் கிடைக்கும். இது குறித்த தனி கட்டுரை ஒன்று தனியே தரப்பட்டுள்ளது. அதில் விரிவான தகவல்களைக் காணலாம்.

கேள்வி: அண்மையில் ஆப்பிள் நிறுவன போன்களில் பேட்டரி திறனைத் திறமையாக நிர்வகிப்பது எப்படி? என்ற கட்டுரையில் பல குறிப்புகளைப் படித்தேன். என்னிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் உள்ளது. அதற்கும் இந்த குறிப்புகள் பொருந்துமா?
என். சத்தியசீலன், தேவாரம்.
பதில்
:ஐபோன் பேட்டரி குறித்து தகவல்கள் இருந்தாலும், தரப்பட்டுள்ள அனைத்து பேட்டரி மின்சக்தி நிர்வகிக்கும் வழிகளும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களுக்கும் பொருந்தும். மின்சக்தியினை ஒரு மொபைல் போனில் எளிதாக நிர்வகிக்கலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன என்பதனை, போனில் செட்டிங்ஸ் ஐகான் கிளிக் செய்து, பின்னர், பேட்டரி என்ற பிரிவில் டேப் செய்தால், அதில் ஒவ்வொரு புரோகிராமும் பயன்படுத்தும் மின் சக்தி குறித்த தகவல்கள் காட்டப்படும். இந்த பட்டியலைப் பார்த்து, எந்த புரோகிராமின் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்று நீங்கள் முடிவெடுத்துச் செயல்படலாம்.
நாம் இடத்தைக் காட்டும் லொகேஷன் சர்வீஸ் சேவை, அதிகமான அளவில் மின் சக்தியை எடுத்துக் கொள்ளும். இதனைத் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். இதே போல மற்ற அப்ளிகேஷனையும் பார்க்கலாம். அதிக மின் சக்தியைப் பயன்படுத்தும் அப்ளிகேஷன் எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து முடக்கி வைக்கலாம். அல்லது மொத்தமாக எப்போதும் தேவை இல்லை எனில், நீக்கிவிடலாம்.
ஸ்கிரீன் செட்டிங்ஸ் அமைப்பு எவ்வளவு மின் சக்தியினை காலி செய்கிறது என்பதனைப் பார்க்கவும். இதன் ஒளி வெளிப்படுத்துதலைக் கட்டுப்படுத்தலாம். ஸ்கிரீன் எவ்வளவு நேரம் பயன்படுத்தாமல் இருந்தால், அது அணைக்கப்படலாம் என்பதற்கான கால வரையறையைச் சுருக்கமாக வைத்திடலாம். அதே போல, வைபி, ஏரோ பிளேன் மோட் ஆகியவற்றையும் இயங்காமல் வைத்திடலாம்.

கேள்வி: நான் ஸ்கைப் பயன்படுத்தக் கூடிய, வை பி திறன் கொண்ட டேப்ளட் ஒன்றை வாங்க விரும்புகிறேன். அதில் கட்டாயம் யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும். எத்தகைய டேப்ளட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு அறிவுரை கூறவும்.
என். தாமரைச் செல்வி, சீர்காழி.
பதில்:
முன்புறமாக கேமரா கொண்டுள்ள எந்த டேப்ளட் பி.சி.சாதனத்திலும் ஸ்கைப் செயல்படும். அது ஆண்ட்ராய்ட், ஐபேட் அல்லது விண்டோஸ் டேப்ளட் ஆக இருக்கலாம். ஆனால், நீங்கள் விரும்பும் யு.எஸ்.பி. போர்ட் எனில், விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் டேப்ளட் பி.சி.யைத்தான் வாங்க வேண்டும். இவை தான் யு.எஸ்.பி. போர்ட் கொண்டவை. மற்றவை மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் கொண்டவையாக இருக்கும். விண்டோஸ் டேப்ளட் வாங்கினால், விண்டோஸ் ஆர்.டி. அல்லது விண்டோஸ் 8 என இரு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒன்றை விருப்பமாகத் தெரிவித்து வாங்கலாம்.

கேள்வி: எனக்கு ஒரு டேப்ளட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே வெகு நாட்களாக லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். ஸ்மார்ட் போனையும் பயன்படுத்துகிறேன். இன்டர்நெட் பார்ப்பதற்கு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறேன். டேப்ளட்டினை எதற்கெல்லாம் முதன்மையாகப் படுத்தலாம்?
எம். ரத்னமாலா, மதுரை.
பதில்:
டேப்ளட்டினை முதல் முதலாகப் பயன்படுத்துபவர்கள், அதனை இணைய உலாவிற்குப் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன் திரையைக் காட்டிலும் பெரிய திரையில் இணையத்தைக் காணலாம். சிம் இயக்கும் டேப்ளட் என்றால், அதனையே உங்கள் மொபைல் போனாகவும் பயன்படுத்தலாம். வை பி இணைப்பில் இயக்கி, வர்த்தக இணைய தளங்கள் சென்று, ஷாப்பிங் செய்திடலாம். மிக வேகமாகச் செயல்படும் ப்ராசசர்கள், டேப்ளட் பி.சி.க்களில் இருப்பதால், கேம்ஸ் விளையாட இது துணை புரியும். இணைய தளங்களில் இருந்து திரைப்படங்கள், பாடல் காட்சிகள் ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்து, இதில் இயக்கி மகிழலாம். உலக அளவில் கல்வி சேவைகளை இலவசமாக வழங்கும் இணைய தளங்கள் உள்ளன. உங்கள் வீட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் இவற்றை டேப்ளட் பி.சி.யில் கண்டு பயன்பெறலாம்.

கேள்வி: யு ட்யூப்பில் இப்போது எந்தப் படத்தினைப் பார்த்தாலும், அதனை டவுண்லோட் செய்து பார்த்தாலும், படம் அல்லது பாடலுக்கு முன்னால், விளம்பர வீடீயோ ஒன்று ஓடுகிறது. சிலவற்றை, சில நொடிகள் கழித்து, நிறுத்த முடிகிறது. ஆனால், சில விளம்பர வீடீயோக்களை, இறுதி வரை பார்த்துத்தான் தீர வேண்டியிருக்கிறது. இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?
ஆர்.சுகன்யா, செங்கல்பட்டு.
பதில்:
இதனைத் தவிர்க்க முடியாது. இந்த விளம்பரப் படங்களை prerolls என அழைக்கின்றனர். இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் இதற்கென கட்டணம் கட்டியிருப்பார்கள். சில நொடிகளில் நிறுத்தக் கூடிய வீடியோக்களுக்கு ஒரு கட்டணமும், கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய வீடியோக்களுக்கு ஒரு கட்டணமும் இருக்கும். எனவே, இவற்றை நாம் பார்த்துத்தான் ஆக வேண்டும். இணைய தளம் ஒன்றை அமைத்து, நிர்வகிப்பதற்குப் பல வல்லுநர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தொடர்நது பராமரிக்க செலவு ஆகிறது. வல்லுநர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் பராமரிப்பு செலவினை இது போன்ற வர்த்தக ரீதியான விளம்பரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்தே சரிக்கட்ட முடியும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, சில வீடியோ காட்சிகளில், இது போன்ற விளம்பரங்களைப் புறந்தள்ளி, நேராக நீங்கள் விரும்பும் காட்சிக்கே செல்வதற்கான ஆப்ஷன் தரப்பட்டு, ஓர் அம்புக் குறி காட்டப்படும். அல்லது பட்டன் தரப்படும். அதில் கிளிக் செய்தால், விளம்பரம் நிறுத்தப்பட்டு,நேரடியான காட்சிக்குச் செல்லலாம். சில வேளைகளில், அந்த வீடியோ உள்ள இணைய முகவரியில் மீண்டும் கிளிக் செய்து, இந்த விளம்பரத்தினை முடக்கலாம். அல்லது F5 கீ அழுத்தலாம். ஆனால், இந்த வழி எப்போதும் பயன் தராது.
இந்த முன் உருளும் விளம்பரங்கள் தான், இது போன்று நீங்கள் ரசிக்கும் வீடியோவினை அமைத்துத் தர உதவுகின்றன. எனவே, அவற்றை ஒதுக்காமல் பார்த்துவிடுங்களேன்.

கேள்வி: விண்டோஸ் 8 பதிந்துள்ள கம்ப்யூட்டர் ஒன்று எனக்கு என் அலுவலகத்தில் தந்துள்ளார்கள். விண்டோஸ் 7 போல, இதனை ஷட் டவுண் செய்திட முடியவில்லை. எப்போதும், ஆல்ட் + எப் 4 போட்டு, ஷட் டவுண் செய்கிறேன். ஸ்டார்ட் மெனு இல்லாததால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. நான் தனியாக இதனை ஆப்பரேட் செய்வதால், மற்றவர்களிடமும் கேட்க இயலவில்லை. இதற்கு ஒரு ஷார்ட்கட் அமைத்து செயல்படுத்த முடியுமா?
என். கருணாகரன், திருப்பூர்.
பதில்:
ஷார்ட் கட் கீ ஒன்றை உருவாக்கி, அதன் மூலம், சிஸ்டத்தினை ஷட் டவுண்ட் செய்திடலாம். அதற்கு கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
2. இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் நடுவில், ஒரு சிறிய பாக்ஸில், உங்கள் ஷார்ட் கட் இருக்க வேண்டிய இடத்தை அமைக்க வேண்டும். இந்த பாக்ஸில் shutdown /s /t 0 என டைப் செய்திடவும்.
3. அடுத்து “Next” பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து உங்கள் ஷார்ட் கட் வழிக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இதற்கு Shut Down என்றே பெயர் கொடுக்கலாம். அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். இறுதியாக “Finish” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட் கட் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டம் ஷட் டவுண்ட் செய்யப்படும். இது விண்டோஸ் 8க்கு மட்டுமல்ல, அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் செயல்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X