ஸோன் அலார்ம் பயர்வால்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2010
00:00

பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்துத் தகவல் தரும் நீங்கள், பயர்வால் பணியினை மேற்கொள்ளும் தொகுப்புகள் குறித்தும், ஒரு பயர்வால் தொகுப்பினை எப்படி நம் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பாக அமைக்க வேண்டும் எனவும் எழுத வேண்டும் என திருப்பூரில் சிறு தொழில் சேவை மேற்கொள்ளும் வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். இவரின் வேண்டுகோளை மனதில் கொண்டு கீழே குறிப்புகள் தரப்படுகின்றன.
பயர்வால் ஒன்று என்ன பணியினை நம் கம்ப்யூட்டரில் மேற்கொள்கிறது? பலரின் பதில் என்னவாக இருக்கும்? பயர்வால், நம் கம்ப்யூட்டரில் நுழைந்து, தனி நபர் தகவல்களைத் திருடும் ஹேக்கர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது என்று சொல்வார்கள். இது சரியே. ஆனால் பயர்வால் மேலும் சில பணிகளையும் மேற்கொள்கிறது.
இப்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயர்வால் ஒன்றைக் கொண்டுள்ளன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பயர்வால் ஒன்றைத் தந்து, அதனை அவ்வப்போது தானே அப்டேட் செய்து வருகிறது. ஆனாலும் விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், உலகெங்கும் விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்கள் தான் ஹேக்கர்களின் இலக்குகளாக உள்ளன. 90% க்கும் மேலான கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் இயங்குவதே காரணம்.
நமக்குத் தெரியாமல், நாம் உணராமல், நம் கம்ப்யூட்டர் இயங்குகையில், உள்ளே நுழைந்திடும் ஹேக்கர்களின் முயற்சியை முறியடிப்பதும், தடுப்பதுமே பயர்வால் ஒன்றின் செயல்பாடு. இது கம்ப்யூட்டர் உள்ளேயே இருந்து கொண்டு இந்த பணியில் ஈடுபடுவதால், இதனை உள்நிலைப் பாதுகாப்பு (inbound protection)  என அழைக்கின்றனர். அத்துடன், ஒரு நல்ல பயர்வால், வோர்ம்ஸ், வைரஸ் மற்றும் ஸ்பேம் என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் செல்லவிடாமல் தடுக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.
முதன் முதலாக, பல ஆண்டுகளுக்கு முன் விண்டோஸ் எக்ஸ்பி, பயர்வால் பாதுகாப்பு எதுவுமின்றி தரப்பட்டு, அதன் விளைவுகளைப் பல லட்சம் பேர்  அனுபவித்ததனர். அதனால், சர்வீஸ் பேக்1ல் பயர்வால் தரப்பட்டு இந்த குறை நீக்கப்பட்டது. விண்டோஸ் 95 மற்றும் 98 தொகுப்புகள் வந்த போது, பயர்வால் என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. ஆனால் அப்போது ஸோன் அலார்ம் என்னும் பயர்வால் தடுப்பினையே அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளில், மைக்ரோசாப்ட் நல்லதொரு பயர்வால் தொகுப்பினைத் தந்துள்ளது. ஆனால் அதனால் வெளியே இருந்து வரும் தொல்லைகளைத் தடுப்பதில் சற்று திறன் குறைவாகவே உள்ளது.
இதனால் தான் பலரும் இலவசமாகக் கிடைக்கும் ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பைப் பயன்படுத்துகின்றனர். அதுவே சிறந்த பாதுகாப்பு தரும் ஒரு தொகுப்பாக உள்ளது. ஸோன் அலார்ம் தொகுப்பு  என்னவெல்லாம் பாதுகாப்பு தருகிறது என்பது குறித்து அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தினர் கூறுவதை இங்கு பார்க்கலாமா!
1. பயர்வால் ஆக: நம் கம்ப்யூட்டர் வழியே, உள்ளே மற்றும் வெளியே மேற்கொள்ளப்படும் கோப்புகளின் போக்குவரத்தைக் கண்காணிக்கிறது. அடையாளம் தெரியாத இடத்திலிருந்து மற்றும் நாம் விரும்பாத  தளங்களிலிருந்து கம்ப்யூட்டருக்குள் வரும் தொகுப்புகளை அடையாளம் கண்டு, தடுத்து, நமக்கு அறிவிக்கும். நம் கம்ப்யூட்டரை, ஹேக்கர்களிடமிருந்து மறைக்கும்.
2. தகவல் ஆய்வு: பல லட்சக்கணக்கான பேர், ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பினைப் பயன்படுத்துவதால், தொடர்ந்து அவர்களிடமிருந்து வரும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில், ஸோன் அலார்ம் அற்றைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கம்ப்யூட்டரில் பதிந்து தொடங்கப்படும் புரோகிராம்கள், ஏற்கனவே தெரியப்பட்ட புரோகிராம்களுடன் ஒப்பிடப் படுகின்றன.
வித்தியாசமான முறையில் ஏதேனும் தென்பட்டால், அவை உடனே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன; அல்லது தடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் வலிமையான மற்றும் அமைதியான  பாதுகாப்பு வழங்கப்படுகின்றன. 
3. எச்சரிக்கை: பிஷ்ஷிங் எனப்படும் முறையில், நம்மைச் சிக்க வைத்திடும் தளங்கள் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களைப் பரப்பும் தளங்கள்  குறித்து எச்சரிக்கை தருகின்றன.
ஏற்கனவே அறியப்பட்ட குறியீடுகளைக் கொண்டு இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அளிக்கின்றன.
4. ஆன்லைன் பாதுகாப்பு: கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியுடன் அவர் தேர்ந்தெடுக்கும் வழி முறைகள் மூலம், பாதுகாப்பாகக் கோப்புகளை அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்திடவும் செய்கின்றன.
5. பேக் அப்: நாம் அமைத்து வைத்திடும் கால இடைவெளியில் நம் வசதிக்கேற்ப நம் டேட்டாவினைப் பாதுகாப்பாக பேக் அப் செய்து வைக்கின்றன.
ஸோன் அலார்ம் தொகுப்பை, நம் கம்ப்யூட்டரில் பதிவது குறித்துச் சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
ஸோன் அலார்ம் பதிவதற்கான மூலக் கோப்பு (setup file)  ஏறத்தாழ 45 எம்பி அளவில் உள்ளது. இதனை  http://www.zonealarm.com/security/enus/antivirusspywarefreedownload.htm  என்ற முகவரியில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இயக்கியவுடன் உங்களுக்கு செட் அப் செய்வதற்கான விண்டோக்கள் வரத் தொடங்கிடும்.
உங்களுக்கு என்ன வேண்டும் மற்றும் என்ன தரப்படுகிறது என்பதை நீங்கள் உறுதியுடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் “Customize your installation”  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் விருப்பப்பட்டால், ஸோன் அலார்ம் பயர்வால் டூல் பார் இல்லாமல், உங்கள் பிரவுசர் தரும் டூல்பாரினை  மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பலர் ஸோன் அலார்ம் தரும் Conduit toolbar  என்பதனை விரும்புவதில்லை.  அடுத்து நீங்கள் ஸோன் அலார்ம் நிறுவனத்துடன் பதிந்து கொள்ள விரும்புகிறீர்களா என்று ஒரு கேள்வி கேட்கப்படும்.  அங்கிருந்து தகவல் தரும் மெசேஜ் தேவை என்றால்,இதற்கு சரி என அமைக்கலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம். இது ஒரு அவசியத் தேவை இல்லை. பின்னர் கிடைக்கும் திரை மூலம், ஸோன் அலார்ம் குயிக் இன்ஸ்டலேஷனை மேற்கொள்ளலாம்.  பதிந்து முடித்தவுடன், ஸோன் அலார்ம் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், எவை பதியப்பட்டுள்ளன என்றும் கணித்து வைத்துக் கொள்ளும். பின் நாளில் இந்த புரோகிராம்கள் இயங்கும் போது, முதல் முறையாக இவற்றினை அனுமதிக்கவா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும்.
பொதுவாக, ஸோன் அலார்ம் சிஸ்டம் ட்ரேயில், ஒரு ஐகானாக அமர்ந்து கொள்ளும். அதில் இருமுறை கிளிக் செய்தால், அதன் முகப்பு பக்கம் எழுந்து வரும். இதில் நாம் ஒன்றும் செய்ய வேண்டியது இருக்காது. வழக்கமாக, ஏதேனும் ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரில் நுழைய முயற்சிக்கையில் மட்டுமே, அதனை அனுமதிக்கவா என்று, ஸோன் அலார்ம் கேட்கும்.
ஸோன் அலார்ம் டூல்பாரினை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால், அது தரும் பல்வேறு வசதிகளைக் கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். இது தளங்களைச் சோதனை செய்திடும் பணியை நீங்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் மேற்கொள்ளும். மோசமான தளமாக இருப்பின், உடனே எச்சரிக்கை தரும். 
இதில் ஒரு மின்னஞ்சல்,பேஸ்புக் தளம், சீதோஷ்ண நிலை மாறுதல், ஆன்லைன் ரேடியோ என இன்னும் பலவிதமான தகவல்கள்  குறித்து அறிவிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் ஐ-ட்ரைவ் (IDrive) தளத்தில், 2 ஜிபி வரை பைல்களை சேமித்துவைத்திடும் வசதியையும் இது தருகிறது. இதனை நேரடியாக, ஐ–ட்ரைவில் பெறலாம் என்பதுவும் உண்மை.
மொத்தத்தில், மைக்ரோசாப்ட் தரும் பயர்வால் தொகுப்பைக் காட்டிலும், ஸோன் அலார்ம் தரும் பாதுகாப்பு சிறந்தது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே.sReenivasan - chennai,இந்தியா
30-அக்-201007:14:08 IST Report Abuse
கே.sReenivasan Readers :Please be aware: This Zone Alarm Free download is not giving all the benefits indicated in the article. Free Firewall: has limited protection only. If you want full protection you have to download their paid package called Internet Security Suite. I feel the author of the article has not stated this point.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X