மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் பதிப்புகளை முன்பு வெளியிட்டு அவை மக்களிடையே பெற்ற வரவேற்பினை எண்ணிப் பார்க்கையில், ஒரு பதிப்பின் வெற்றிக்குப் பின்னால் அடுத்து வந்த சிஸ்டம், தோல்வியைத் தழுவியதைக் காணலாம். விண்டோஸ் 98 மக்களிடையே எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பினைப் பெற்றது; ஆனால், அடுத்து வந்த, விண்டோஸ் மி சிஸ்டத்தை மக்கள் விரும்பவே இல்லை. அதே போல, விண்டோஸ் எக்ஸ்பி பெற்ற இமாலய வெற்றிக்குப் பின்னர், விண்டோஸ் விஸ்டா வெறுக்கப்பட்டது என்றே கூறலாம். இதே நிலை விண்டோஸ் 7 வெற்றியிலும், விண்டோஸ் 8 தோல்வியிலும் இருந்ததை நினைவு கூறலாம்.
இந்த அடிப்படையில், விண்டோஸ் இயக்க முறைமையின் பதிப்பு 10ன் சோதனைப் பதிப்பு மக்களுக்கென வழங்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பும், விரும்பிய, விரும்பாத விண்டோஸ் சிஸ்டங்கள் குறித்து ஒரு சிறிய ஆய்வு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களிடம் (2,937) எடுக்கப்பட்டது. அவர்கள் தெரிவித்த முடிவுகள்:
அதிகம் விரும்பப்பட்ட விண்டோஸ் பதிப்புகள்
1. விண்டோஸ் 7 - 41.64% - (1,233 பேர்)
2. விண்டோஸ் எக்ஸ்பி - 18.59% - (546 பேர்)
3. விண்டோஸ் மி - 13.04% - (383 பேர்)
4. விண்டோஸ் விஸ்டா - 12.70% - (373 பேர்)
5. விண்டோஸ் 8 - 10.45% - (307 பேர்)
6. விண்டோஸ் 95 - 1.40% - (41 பேர்)
7. விண்டோஸ் 98 - 1.40% - (41 பேர்)
8. விண்டோஸ் 3.1 - 1% - (23 பேர்)
மொத்தம் வாக்களித்தவர்கள் - 2,937 பேர்.
மக்கள் விரும்பாத, மோசம் என எண்ணப்பட்ட விண்டோஸ் பதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு
1. விண்டோஸ் மி -38.75% - (1,021 பேர்)
2. விண்டோஸ் விஸ்டா - 38.25% - (1,008 பேர்)
3. விண்டோஸ் 8 - 17.46% - (460 பேர்)
4. விண்டோஸ் 3.1 - 1.94% - (51 பேர்)
5. விண்டோஸ் 7 - 0.99% - (26 பேர்)
6. விண்டோஸ் 95 - 0.95% - (25 பேர்)
7. விண்டோஸ் எக்ஸ்பி - 0.95% - (25 பேர்)
8. விண்டோஸ் - 98- 1% - (29 பேர்)
மொத்தம் வாக்களித்தவர்கள் - 2,635 பேர்.