உலகின் எந்த இடத்திலிருந்தும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப உதவிடும், வாட்ஸ் சிம் (WhatSim) என்ற ஒரு சிம் வெளியாகியுள்ளது. இந்த சிம் கார்ட், அதன் பயனாளர்கள், உலகில் உள்ள, 150 நாடுகளில் இயங்கும் 400 மொபைல் சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையைப் பெற்றுத் தருகிறது. இந்த சிம் கார்டின் விலை 10 யூரோ. மாதக் கட்டணம் அல்லது குறிப்பிட்ட காலக்கெடு என இந்த சிம் கார்டிற்குக் கட்டுப்பாடு இல்லை. இந்த வாட் சிம் கார்டை வடிவமைத்து, சேவைக் கட்டமைப்பினை வழங்குவது 'ஸீரோ மொபைல்' என்னும் இத்தாலிய தொலை தொடர்பு நிறுவனமாகும். மெசேஜ் அனுப்ப, இது வாட்ஸ் அப் போலவே இயங்குகிறது. ஆனால், படங்கள் அனுப்ப, பாடல்களை இணைத்து அனுப்ப, குரல் ஒலியைப் பதிவு செய்து அனுப்ப, கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும். மொபைல் சாதனங்கள் வழி மெசேஜ் அனுப்ப வாட்ஸ் அப் மிகச் சிறந்த அப்ளிகேஷனாக உள்ளது. இதனுடைய ஒரே கட்டுப்பாடு, டேட்டா தொடர்பு தான். குறிப்பாக நீங்கள் பயணத்தில் இருக்கையில், ரோமிங் கட்டணம் அதிகமாக இருக்கும். அதனால், வாட்ஸ் அப் வழி செய்தி அனுப்புவது செலவு அதிகம் கொள்ளும் இனமாக அமைந்துவிடும். மேலும், அனைத்து இடங்களிலும் வை பி வசதி கிடைக்கும் என நாம் உறுதி செய்திட முடியாது. மேலும், வை பி இலவசமாகவும் கிடைக்காது. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழி குறித்து சிந்திக்கையில், இந்த அப்ளிகேஷன் மற்றும் சிம் கார்ட் யோசனை வந்ததாக, ஸீரோ மொபைல்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
WhatSim has now evolved and it is called ChatSim. With ChatSim you can use not only WhatsApp, but many other apps too, such as: WhatsApp, Facebook Messenger, WeChat, Telegram, BBM, Line, Kik, Hike, Kakao, and QQi. With ChatSim World you can connect to more than 400 network operators in more than 150 countries. For only 10 euros a year, you can send unlimited instant messages and emoji. ChatSim World works with 4G technology too. It also has an intelligent firewall that automatically blocks unwanted data traffic up to 90 %. If you travel a lot and if you use chatting apps a lot, ChatSim is perfect for you. If you need more information, you can contact us at info@chatsim.com. We will be glad to inform you
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.