கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 அக்
2010
00:00

கேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா? - ஆ. பிரகாஷ், விழுப்புரம்
பதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான். ஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ஒரு எம்பி யை எடுத்துக் கொள்வோம். 1 எம்பி = 1/1024 ஜிபி. அதாவது, 0.0009765625 ஜிபி. இதனையே 16 எம்பிக்குக் கணக்கிட்டால், 16   x  0.0009765625 ஜிபி.  இதனைக் கணக்கிட்டால் கிடைப்பது 16 எம்பி=0.015625 ஜிபி. இதே போல் கிகாபைட் அளவினை, மெகா பைட்டில் சொல்லலாம். 4 கிகா பைட், 4  x 1024 =4096 எம்பி.  கூகுள் தளம் சென்றால், இந்த மாற்று அளவினை அதுவே கணக்கிட்டு எளிதாகத் தரும்.கூகுள் தேடல் தளம் சென்று, தேடல் கட்டத்தில்  Convert 128 Mb to Gb  என்று கொடுத்துப் பாருங்கள்.

கேள்வி: நான் தமிழை கம்ப்யூட்டரில் நன்கு பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் நண்பர் அனுப்பிய ஒரு டாகுமெண்ட்டில், பாரா தலைப்பு தவிர மற்ற வரிகள் எல்லாம் நன்கு தெரிகின்றன. ஏன் இந்த குறைபாடு? ஸ்டைல் பார்மட்டிங்கினால் இது ஏற்படுகிறதா? என் நண்பர், அவருடைய கம்ப்யூட்டரில் நன்றாகத் தெரிவதாகவும், அந்த டாகுமெண்ட் தன் நண்பர் அனுப்பியதாகவும் கூறுகிறார். வழி சொல்லவும்.    - ஆ. செந்தமிழ்ச் செல்வன், மதுரை
பதில்: இதில் சிக்கலே இல்லை, செந்தமிழ். பாரா தலைப்பு மட்டும் தனியான ஒரு தமிழ் எழுத்து வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகை பாண்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்கலாம்.  அந்த தெரியாத சொற்களில் கர்சரை நிறுத்துங்கள். இப்போது அது எந்த பாண்டில் அமைக்கப்பட்டது என, வேர்ட் உங்களுக்குக் காட்டும். அந்த பாண்ட் பைலை இணையம் அல்லது நண்பரின் கம்ப்யூட்டரிலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்திட்டால், அவற்றையும் நீங்கள் படிக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களில், கர்சர் தெரிந்த அளவிற்கு, விண்டோஸ் 7ல் நன்றாகத் தெரியவில்லை. செட்டிங்ஸ் சென்று எப்படி இதனை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம்?   - டி. கமலா, கோவை
பதில்: பொதுவாக சிஸ்டங்கள் மாற்றப்படுகையில், அனைத்தும் புதிய முறையில் தரப்படுவதால், இது போன்ற சில விஷயங்கள் நம்மை உறுத்தும். பழகினால் சரியாகிவிடும். இருப்பினும், நம் விருப்பப்படி கர்சர் இயக்கத்தினை மாற்றிக் கொள்ள வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம். முதலில்  Start  அழுத்தி Search Box   சென்று “Keyboard”  என டைப் செய்திடவும்.  அடுத்து, கண்ட்ரோல் பேனல் விண்டோ பெற்று  “Keyboard”  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும்.  இந்த விண்டோவில்  கர்சர் பிளிங்க் ரேட் (blink rate)  என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும்.   இந்த மாற்றத்தை, விண்டோஸ் தொகுப்புகளில், விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சிஸ்டம் பைல்களைத் தேடுகையில், அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வருகிறது. நீங்கள் தரும் டிப்ஸ் மற்றும் ஆபத்துக் கால உதவிகளில், இவற்றை காப்பி எடுத்து வைக்கச்  சொல்கிறீர்கள். எப்படி இவற்றைப் பெறுவது? எப்போதும் பெறக் கூடிய வகையில் அமைப்பது எப்படி?     - சி.கனகவேல்,  பழனி
கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், சிஸ்டம் பைல்களைக் கையாண்டு அதில் எந்த பிரச்னையும் செய்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைக்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான வழி இருக்கிறது. அந்த வழி இதோ:  Start  பட்டன் அழுத்துங்கள். Control Panel   ஐத் திறக்கவும்.  Folder Options  என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைக் கிளிக் செய்திடவும். அதில்  Show Hidden Files and Folders   என்று இருக்கும் வரியின் முன் உள்ள ரேடியோ பட்டனில், மவுஸால் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.  இனி சிஸ்டம் பைல்களை, மறைத்தபடியே வைத்திட Hide Protected Operating System Files   என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இது எப்போதும் நல்லது. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் சிலவற்றை ஒரு சிடியில் பதிந்து என் உயர் அதிகாரியிடம் தர வேண்டியுள்ளது. இந்த பைல்கள் போல்டரில் அங்கும் இங்குமாக உள்ளது. இவற்றின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும் என எப்படி அறிவது? - ஆ. காமராஜ், மதுரை
பதில்: இரண்டு வழிகள் உள்ளன. புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். மற்றவற்றில் இருந்து அடையாளம் காண, உங்கள் அதிகாரி பெயரையே அதற்கு  சூட்டுங்கள்.   இப்போது அவருக்கு காப்பி செய்ய வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த போல்டரில் இடுங்கள். பின்னர், அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து, அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், எத்தனை பைல்கள், அவற்றின் மொத்த அளவு எவ்வளவு என்று காட்டும். அல்லது அந்த பைல்களை, இருக்கும் ட்ரைவிலேயே, அதன் போல்டரில், கண்ட்ரோல் அழுத்தித் தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம். மொத்த அளவு தெரிந்த பின்னர், ஒரு சிடி போதுமா, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிடி வேண்டுமா என முடிவு செய்திடலாம்.
போல்டரில் போட்டு வைத்தால், சிடியில் காப்பி செய்திடுகையில் உதவும். காப்பி செய்த பின்னர், போல்டரையே அழித்துவிடலாம்.

கேள்வி: சற்று அதிக நேரம் கம்ப்யூட்டரிலிருந்து விலகிச் செல்ல எண்ணுகையில், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்கிறேன். ஆனால் என்னுடைய மவுஸின் உணர்வு திறன் மிகவும் ஷார்ப்பாக இருப்பதால், அருகில் வேறு எதனையாவது தொட்டுவிட்டால், உடனே கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டு வந்து விடுகிறது. இதனைத் தடுக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். - சி. குமரேசன்,  பொள்ளாச்சி
பதில்: Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Mouse  என்று டைப் செய்திடவும். பின்னர் என்டர் தட்டவும்.  இப்போது உங்களுக்கு மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் Hardware  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கீழாக  Properties என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Power Management என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இந்த டேப் இல்லை என்றால், விண்டோவின் கீழாக Change Settings  என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு Allow this device to wake the computer  என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்து விடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் மவுஸ் தொல்லை கொடுக்காது. இப்படியே எந்த சாதனமும் உறங்கும் கம்ப்யூட்டரை எழுப்பாமல் அமைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை அமைக்கையில், என் பெயரினை, வேர்ட் தானாக அமைத்திடுமா? என் நண்பர் அனுப்பும் வேர்ட் டாகுமெண்ட்களில் இது போல் உள்ளது. இதனை எப்படி செட் செய்வது?    - கா. சுந்தர வள்ளி, சென்னை
பதில்: கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் அமைக்கப் பட்டிருந்தால், தாராளமாக அமைக்கலாம். அதாவது, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில் கம்ப்யூட்டர் உரிமையாளரின் பெயர் அல்லது யூசர் அக்கவுண்ட்டில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கடிதங்களை டாகுமெண்ட்டாக அமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் அனுப்புபவர் முகவரியில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனில் இதன் மூலம் அமைக்கலாம். முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.
எங்கு உங்கள் பெயர் இருக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். அடுத்து, இன்ஸெர்ட் மெனுவில் இருந்து, பீல்ட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் பீல்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இங்கு காணப்படும் கேடகிரீஸ் லிஸ்ட்டில், யூசர் இன்பர்மேஷன் என்பதனைத் தேர்ந்த்டுக்கவும். இனி, பீல்டு நேம்ஸ் லிஸ்ட்டில், யூசர் நேம் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த இடத்தில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் யூசரின் பெயர், தானாக அமைக்கப்படும். யூசரின் பெயரை மாற்றினால், இதுவும் தானாகவே மாறும்.

கேள்வி: உண்மையாகக் கூறுங்கள். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, பத்திரிக்கைகள் கூறும் அளவிற்கா வளர்ந்துவிட்டது. இரண்டாம் நிலை நகரங்களில், இன்டர்நெட் வளர்ச்சி, கம்ப்யூட்டர் பரவிய அளவிற்குப் பரவவில்லை என்பதே என் கருத்து. உங்கள் பதில் என்ன?  - என். சேஷாத்ரிநாதன், சென்னை
பதில்: பல விஷயங்களை இணைத்து உங்கள் கேள்வி உள்ளது. அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலைத் தருகிறேன். கம்ப்யூட்டர் வளர்ந்த அளவிற்கு இன்டர்நெட் வளரவில்லை என்பது உண்மை. ஏனென்றால், கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த பொருட்களின் விலை குறைந்ததைப் போல, இன்டர்நெட் கட்டணம் குறைக்கப்படவில்லை.  ஆனால் மத்திய அரசு, கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டினை ஊக்குவிக்க, பல சலுகைத் திட்டங்களை வழங்கி வருகிறது. இது போன்ற திட்டங்கள் இருப்பது மக்கள் அறியும் பட்சத்தில், நிச்சயம் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரிக்கும்.  அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, சராசரியாக, இந்திய இன்டர்நெட் பயனாளர் ஒருவர், வாரத்திற்கு 3.5 மணி நேரம் பயன்படுத்துகிறார். எனவே, நாளொன்றுக்கு 26 நிமிடங்கள். வார இறுதி நாட்களில் இது 12% குறைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே, வார இறுதியில் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் 12% அதிக இன்டர்நெட் போக்கு வரத்து உள்ளது. 

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாகூர் - சென்னை,இந்தியா
31-அக்-201018:51:50 IST Report Abuse
நாகூர் என் பெண் ட்ரைவில் அடிக்கடி வைரஸ் வந்து விடுகிறது. எனவே ஏதாவது பெண் டிரைவ் வைரஸ் ஸ்கானர் இருந்தால் டெல் மீ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X