மைக்ரோசாப்ட் அழைக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

ஆண்டு தோறும், ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில், பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் வரும் மார்ச் 2 முதல் 5 வரை இது நடைபெற உள்ளது. உலகெங்கும் இருந்து மொபைல் போன் தயாரிப்பாளர்கள், சேவை வழங்குபவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொள்வார்கள்.
மொபைல் தொலை தொடர்பு, தற்போது பன்முகக் கோணங்களில் பரவி வருகிறது. உடலில் அணிந்து தொலை தொடர்பு ஏற்படுத்தும் கருவிகள், கார் மற்றும் பிற வாகனங்களை நம் வீடு மற்றும் அலுவலகத்துடன் தொடர்பு படுத்தும் சாதனங்கள் என மொபைல் டிஜிட்டல் சாதனங்களின் விரிவாக்கம் பரவலாக ஏற்பட்டு வருகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மொபைல் சாதனங்களைத் தயாரிப்பவர்கள், அவற்றை இயக்க அப்ளிகேஷன்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை உருவாக்குபவர்கள் எனப் பலரும் இணைந்து, வரும் ஆண்டுகளில், இதற்கான தொழில் நுட்பம் எவ்வகையில் வளர இருக்கிற்து என்பதனைத் தீர்மானிப்பார்கள்.
இந்த மொபைல் உலகக் கருத்தரங்கில், தன் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான அழைப்பிதழை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுப்பியுள்ளது.
மார்ச் 2 அன்று நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட் புதியதாக என்ன தரப்போகிறது என்று எந்த தகவலும் இல்லை. ”வாருங்கள், இந்த பயணத்திற்கு” என்று அழைத்துள்ளது. இந்த சந்திப்பில், மொபைல் போன்களுக்கான விண்டோஸ் 10 தொகுப்பு குறித்து தகவல்கள், அறிமுகக் காட்சிகள் கிடைக்கலாம்.
புதிய, பெரிய அளவிலான மொபைல் ஸ்மார்ட் போன்கள் எதனையும் மைக்ரோசாப்ட் கண்காட்சிக்குக் கொண்டு வராது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மத்திய மற்றும் அடுத்த நிலையில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகலாம். அந்த வகையில் லூமியா 1330 மற்றும் லூமியா 1335 என்ற இரு மொபைல் போன்கள் அறிமுகமாகலாம். இவை 5 அங்குல திரையுடன் 8.7 எம்.பி. திறன் கொண்ட பியூர்வியூ கேமரா கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளன.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X