நோய்கள் ஜாக்கிரதை: அகமண முறை தேவைதானா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2015
00:00

மாற்றுத்திறனாளிகள், உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றனர்; காரணம், சொந்தத்திற்குள் திருமணம் நடப்பது தான்! அந்நியம், என்று நினைத்து நாம் மணம் முடிப்பது கூட, நேரடியான ரத்த உறவாக இல்லாமல் போகலாம்; ஆனால், ஒரே ஜாதிக்குள்தான், அதுவும் நடக்கிறது.ஜாதி என்பது, தலைமுறை தலைமுறையாக, ரத்த உறவுக்குள் மணம் முடித்து, உருவான ஒரு குழு என்கின்றனர், மரபணு ஆய்வாளர்கள்.

மரபணு மூலம் ஏற்படக்கூடிய, 3,000 வகையிலான நிரந்தர ஊனங்களோடு, சில வகையான மருத்துவ ஊனங்கள், தமிழகத்திலும், ஆந்திராவிலும் மட்டுமே இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம், சொல்கிறது. தசைநார் தேய்வு, உதடுகள் பிளவு, டவுன் சிண்ட்ரோம், சிக்கல் செல் அனீமியா, தலசீமியா, நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியான கருக்கலைப்புகள் எல்லாம், (அதாவது கருவிலிருக்கும் குழந்தை குறைபாடுடையதாக இருந்தால், மருத்துவ சட்டப்படி கருக்கலைப்பு செய்வது) மரபணுக் குறைபாடுகளால் வரக் கூடியதே.இதயநோய், வருவதற்கு காரணமாக உள்ள நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை, மரபணு வழியாகவே வருகின்றன என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், பொதுவாக, 50 வயதிற்கு பின் வரக்கூடிய இதயநோய்கள், உறவு முறையில் திருமணம் செய்தோரின் குழந்தைகளுக்கு, 35, 40 வயதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆணின் உயிரணுக்களும், பெண்ணின் கருமுட்டையும் இணையும் போது, இருவரின் மரபணுக்களும் இணைகின்றன. அதில், இருவரிடமும் இருக்கும், குறைபாடுள்ள மரபணுக்களும் இணைகின்றன. பொதுவாக குறைபாடுடைய அணுக்களே, ஆதிக்க குணம் கொண்டவை. இந்த குறைபாடுடைய அணுக்களே, மரபணுக் குறைபாடுகள், நிரந்தர ஊனங்கள், குணப்படுத்த இயலாத நோய்களை உருவாக்குகின்றன.


- அரவிந்த் ராமநாதன்,
மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohangee - Namakkal,இந்தியா
01-மார்ச்-201519:55:09 IST Report Abuse
mohangee " நல்ல கருத்துக்கள். யாரோ கையை பிடித்துக் கொண்டிருப்பதைப் போல அனைவரும் தங்கள் ஜாதிக்குள்ளேயே வட்டமிடுவது ஒரு மாயைதான். "
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
01-மார்ச்-201519:49:57 IST Report Abuse
வழிப்போக்கன் அரவிந்தன் - மாற்றுத்திறனாளிகள், உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றனர். காரணம், சொந்தத்திற்குள் திருமணம் நடப்பது தான் - இது எத்தனை பொய்யான கூற்று என்பது நிஜமான ஆராய்ச்சி செய்பவருக்கு தெரியும். ஏன் இப்படி தவறான செய்திகளை - அதுவும் ஒரு பிரபல பத்திரிகை மூலம் பரப்ப வேண்டும். சொந்தத்திற்குள் திருமணம் என்பது முக்கிய காரணம் அல்ல - பல பல நுற்றாண்டுகளாக இருந்து வரும் செயல் இது. கடந்த பத்து இருபது வருடங்களில் இது "மட்டுமே" காரணம் என்ற பொய்யான செய்தி மிக விரைவாக பரப்படுகிறது. ஆனால் சுற்று சூழல், உணவு (ரசாயனம்), வாழ்வியல் முறை - இவை தான் காரணம் என்று சொன்னால் உலக வணிக அரசியல் வெளியாகும் என்பது ஏன் மறைக்கபடுகிறது. இது ஒரு மிக பெரிய பொய்யான தகவல். இதனை பரப்பி துரோகம் இழைக்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X