நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2015
00:00

பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.
ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று நீங்கும்.
கிராம்பு, கொட்டைப்பாக்கையும், சம அளவில் பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும், சம அளவில் எடுத்து, பொடி செய்து, பல் துலக்கி வந்தால், பல் வலி விலகும்.

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundara Thamizh - Chennai,இந்தியா
23-ஏப்-201611:13:54 IST Report Abuse
Sundara Thamizh நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும், உடல் பருமனாக இல்லாமல், அளவாக இருக்கவும் நமக்கு உண்மையில் தேவை அதிக உடல் உழைப்பே. பணம் சம்பாதிக்க உழைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் சம்பாதிக்க 'நோகாமல் நோன்பிருப்பது எப்படி?' என்பதற்கு வழி தேடுகிறோம். இது அறிவாளித்தனம் கிடையாது. உண்மையில் இது சோம்பேறித்தனத்தின் அடையாளம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு. "No Pain No Gain". "வலி இல்லை என்றால் பலனும் இல்லை". "உளியின் அடியைத் தாங்கும் கல்தான் அழகிய சிலையாக மாறும்" என்றொரு சினிமா பாடல் உண்டு.தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த வெள்ளைக்காரன் அதன் பலன்களை அனுபவிக்கும் அதே நேரத்தில், பலவிதமான உடற்பயிற்சிகளைச் செய்து உடல் ஆரோக்யத்தையும் தக்கவைத்துக் கொள்கிறான். ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கடற்க்கரை நம் தமிழ் நாட்டில் இருக்கிறது. எத்தனை தமிழர் கடலையும் அதன் கரையையும் விளையாட்டுகளுக்காக இன்று பயன்படுத்துகிறோம்? நீச்சலடிப்பது மட்டுமல்ல, படகில் துடுப்பு போடுவதும் கூட உடலுக்கு பலம் தரும் ஒரு விளையாட்டே. மலை ஏறுவது சிறுவர்கள் கூட மலை ஏறுவதை ஒரு விளையாட்டாக எடுத்து செய்கிறார்கள் மேலை நாடுகளில். மலை ஏறும் பயிற்சி தருவதற்கென்றே மேல் நாடுகளில் பயிற்சிக்கூடங்கள் பல இருக்கின்றன. அதிவேக சைக்கிள் ஓட்டும் பயிற்சி. ஒரு வாரத்தில் சுமார் 400 முதல் 800 கிலோமீட்டர் வரை அதிவேகமாக சைக்கிள் ஒட்டி பயிற்சி செய்கிறார்கள் புகை, குடி, பாக்கு போன்ற எந்த கெட்டப் பழக்கமும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து சில வருடங்களுக்கு இந்த அதிவேகமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்பவர்களுக்கு, மிக அதிகமாக ஆண்மை சக்தி அதிகரிப்பதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. முப்பத்திரண்டு கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்காவில் ஆறு கோடிக்கும் மேலானோர் 'ஓட்டப் பயிற்சி' செய்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் நூற்று முப்பத்திரண்டு கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவிலோ ஆறு லட்சத்திற்கும் குறைவானவர்களே 'ஓட்டப் பயிற்சி' செய்வதாக நம் நாட்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவை விட சுமார் நானூறு மடங்கு அதிகமானோர் அமெரிக்காவில் 'ஓட்டப் பயிற்சி' செய்வதாக தெரிகிறது.. (உண்மையில் இன்டர்நெட் மூலமாக படித்தவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் விளைவாகவே நம் நாட்டில் இந்த அளவாவது மக்கள் இப்போது ஓடத் தொடங்கியுள்ளார்கள்.) ஆகவே , கம்ப்யூட்டர் வேலை, குமாஸ்தா வேலை, ரிசப்ஷனிஸ்ட் வேலை, டிரைவிங் வேலை போன்ற உடம்புக்கு உழைப்பு குறைந்த வேலை செய்பவர்கள் ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்ளிங் பயிற்சி, ஸ்கிப்பிங் பயிற்சி போன்ற எதாவதை செய்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பெறமுடியும். இத்தகைய பயிற்சிகளை செய்பவர்களுக்குதான், 'நோய் எதிர்ப்பு சக்தி' மருந்து சாப்பிட்டாலும் அது வேலை செய்யும். உடம்புக்கு கஷ்ட்டம் தராமல், நோகாமல் வெறும் மருந்தின் மூலமாகவே 'நோய் எதிர்ப்பு சக்தி' பெற்று விடலாம் என்று நினைப்பவர்கள் மிக மிக மிகப் பெரிய ஏமாற்றத்தையே அடைவார்கள். 'நோய் எதிர்ப்பு சக்தி' கிடைக்கமலிருப்பது மட்டுமல்ல அவர்கள் அடையும் நஷ்ட்டம். உடல் உழைப்பில்லாத ஆண்கள் திருமணமாகி சுமார் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே முற்றிலும் ஆண்மை சக்தியை இழப்பார்கள். இந்த காலத்தில் நடக்கும் அதிகப்படியான விவாகரத்துகளுக்குக் காரணமே ஆண்களின் ஆண்மை குறைவுதான். இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள மருந்துகளை சாப்பிடுவது நல்லது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்புக்கு எந்த அளவு உழைப்பு தருகிறீர்களோ அந்த அளவே மருந்து பலன் தரும் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X