கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2015
00:00

கேள்வி: என்னுடைய ஆடியோ மற்றும் வீடியோ பைல்களுக்கான போல்டரில் .crdownload என்னும் பெயர் கொண்டு சில பைல்கள் உள்ளன. இது எதற்காக? இவற்றை அழித்தால், என்ன நடக்க்கும்? அன்பு கூர்ந்து விளக்கவும்.
என். சிகாமணி, திருச்சி.
பதில்:
நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, பைல்களை, அது ஆடியோ அல்லது வீடியோ என எதுவாக இருந்தாலும், தரவிறக்கம் செய்கையில் முதலில் இந்த துணைப் பெயருடன், பைல் இறங்கத் தொடங்கும். தொடர்ந்து தரவிறக்கம் செய்திடுகையில், இந்த பைலின் அளவு பெரிதாகிக் கொண்டு வரும். இறுதியில், தரவிறக்கம் செய்து முடித்தவுடன், இந்த பெயர் மாற்றப்பட்டு, அந்த பைலுக்கான பெயராக இருக்கும். எடுத்துக் காட்டாக, நீங்கள் “Song.mp3″ என்ற பைலைத் தரவிறக்கம் செய்திட முயற்சிக்கையில், குரோம் பிரவுசர், “Song.mp3.crdownload” என்ற பெயருடன் தரவிறக்கத்தினைத் தொடங்கும். பின்னர், பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும் பணி நடக்கையில், இந்த பைலின் அளவு அதிகரிக்கும். முடிந்தவுடன் பைலின் பெயர் “Song.mp3 என்று மாற்றப்பட்டு முழுமையாக இருக்கும். இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் டவுண்லோட் செய்வதனைப் பாதியிலேயே விட்டுவிட்டால், அப்படியே “Song.mp3.crdownload” என்ற பெயருடன் அந்த பைல் இருக்கும். அதனை நீங்கள் இயக்கவும் முடியாது. ஏனென்றால், பைல் முழுமையாக இறக்கப்பட்டிருக்காது.
.crdownload என்ற துணைப் பெயர், அந்த குறிப்பிட்ட பைல் முழுமையாக இறக்கப்படவில்லை என்பதனைக் காட்டுகிறது. நீங்கள் ஒரு பைலைத் தரவிறக்கம் செய்கையில், இடையிலேயே அதனை வேண்டாம் என நிறுத்தி விட்டால், இந்த .crdownload என்னும் துணைப் பெயர் கொண்ட பைல் தானாகவே நீக்கப்படும். நீங்கள் தரவிறக்கம் செய்வதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், இந்த பைல் தொடர்ந்து இருக்கும். மீண்டும் இந்த பைல் தரவிறக்கத்தினைத் தொடரலாம்.

கேள்வி: சில வாரங்களுக்கு முன், வேர்ட் டிப்ஸ் வழங்கும்போது எழுத்தின் அளவைப் பற்றிக் கூறி இருந்தீர்கள். எழுத்தின் அளவு குறித்து இன்னும் தெளிவான விளக்கம் தரவும். இதில் “பாய்ண்ட்” என்று கூறப்படுவது எது?
பேரா. எஸ். மாயவன், கும்பகோணம்.
பதில்:
நீங்கள் எந்த டிப்ஸ் குறித்து கூறுகிறீர்கள் என்பது விளங்கவில்லை. இருப்பினும், எழுத்து குறித்து கூறுகையில், “பாய்ண்ட்” என்பது என்ன என்று இங்கு பதில் தருகிறேன். எழுத்தியலில் “பாய்ண்ட்” என்பது ஓர் அளவு முறை. ஏறத்தாழ, ஒரு அங்குலத்தில் 72ல் ஒரு பங்கினை இது குறிக்கிறது. பதிப்புத் துறையில், டிசைன், டைப் செட்டிங் மற்றும் அச்சுப் பணியில் இந்த அளவு முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வேர்ட் புரோகிராமைப் பொறுத்த வரை, அது பயன்படுத்தும் அனைத்து எழுத்து வகைகளின் உயரத்தினைக் குறிக்க பாய்ண்ட் அளவினைப் பயன்படுத்துகிறது. இந்த வகையில், நீங்கள் 12 பாய்ண்ட் அளவிலான எழுத்து ஒன்றைப் பயன்படுத்துகையில், அது ஒரு கேரக்டர் பாக்ஸில், ஒரு அங்குல அளவில் 12/72 (அல்லது 1/6) இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதே போல, 72 பாய்ண்ட் அளவிலான ஓர் எழுத்து, கேரக்டர் பாக்ஸில் ஒரு அங்குல அளவில் இடத்தை எடுத்துக் கொள்கிறது. பாய்ண்ட் என்ற அளவினை pt என்ற குறியீட்டின் மூலம் காட்டலாம். நீங்கள் மாறா நிலையில் ஒரு பாய்ண்ட் அளவினை அமைக்க வேண்டும் எனில், டூல்ஸ் மெனுவில், Options தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் General டேப் தேர்ந்தெடுக்கவும். இங்கு Measurement Units பிரிவில் Points என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: என்னுடைய வேர்ட் புரோகிராம், எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐச் சார்ந்தது. ஆப்பரேட்டிங் சிஸ்டம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் போலவே, வேர்ட் 2003க்கும் சப்போர்ட் பைல்கள் தரப்படாது என்று அறிகிறேன். அது உண்மையா? நான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றிக் கொள்ள இருக்கிறேன். அதே போல ஆபீஸ் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா?ஆபீஸ் 2003ல் நான் தயாரித்த பைல்கள், புதியதாக இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் வேர்ட் 2013ல் இயங்குமா?
கே. அன்புராணி, நெய்வேலி.
பதில்:
நீங்கள் பயன்படுத்தும் ஆபீஸ் 2003 நிச்சயம் நன்றாகச் செயல்படும். ஆனால், இதனைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் வழியாக இணைய இணைப்பினை ஏற்படுத்தினால், இந்த புரோகிராமிற்கு ஆபத்து ஏற்படலாம். பல மால்வேர் புரோகிராம்கள், வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்பட்ட பைல்களையே குறி வைத்து தாக்குகின்றன. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பயன்படுத்துவது ஆபத்தை வரவழைக்கலாம். மேலும், நீங்கள் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மூலமாகவும், வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள், உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையலாம். உங்கள் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை, இன்றைய, பாதுகாப்பு கிடைக்கும் தொகுப்பு ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ஆபீஸ் 2013 க்கு மாறுவது மிகச் சிறந்த வழியாகும். அந்த புரோகிராமில், ஆபீஸ் 2003 பைல்கள் படிக்கப்படும். அதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

கேள்வி: BIOS என்பதுவும் Firmware என்பதுவும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா? கம்ப்யூட்டரில் இந்த இரு சொற்களும் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்ளும் சாப்ட்வேர் என்று என் நண்பர் கூறுகிறார். இந்த கூற்று சரியா?
என். சுப்ரமணியன், திண்டுக்கல்.
பதில்:
ஒருவர் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுகையில், இது போன்ற சில தொழில் நுட்ப சொற்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுவார். அப்போது இது போன்ற சந்தேகங்கள் எழுவது இயற்கையே. உங்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் இயற்கையானதும் சரியானதும் ஆகும்.
BIOS என்பது கம்ப்யூட்டர்களுக்கான Firmware, என்ன குழப்புகிறேனா? தொடர்ந்து படியுங்கள். BIOS என்பதை Basic Input/Output System என விரிக்கலாம். இதனை இன்னும் விரிவாகச் சொல்கையில், பல வகைகள் இருப்பதனைக் காணலாம். அவை System BIOS, ROM BIOS, or PC BIOS. கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், அதாவது பூட் செய்கையில், கம்ப்யூட்டரைத் தயாரித்த நிறுவனம் பயன்படுத்தும் அதனுடைய Firmware தான், BIOS. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் உள்ளாக இந்த BIOS Firmware அமைக்கப்படுகிறது. இந்த பெயர், டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னால், பயன்படுத்தப்பட்ட CP/M ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே, 1975 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.
Firmware என்பது, அழியாமல் இருக்கும் மெமரி, புரோகிராம் குறியீடுகள் மற்றும் அதில் பதியப்படும் சார்ந்த டேட்டா ஆகியவற்றைக் குறிக்கும். ட்ராபிக் லைட், நுகர்வோர் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் சாதனங்கள், டிஜிட்டல் கடிகாரங்கள், கம்ப்யூட்டர்கள், கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் இந்த Firmware அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சாதனங்களில் அமைக்கப்படும் Firmware, இந்த சாதனங்களைக் கட்டுப்படுத்தும் புரோகிராம்களாக அமைகின்றன. பயாஸ் என்பது, இந்த வகையில், மதர்போர்டுக்கான Firmware ஆகும். பழைய கம்ப்யூட்டர்களில் இவை இடம் பெற்றன. இப்போது, நவீன கம்ப்யூட்டர்களில், UEFI or EFI என அழைக்கப்படும் புதிய Firmware இடம் பெற்றுள்ளன.
இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாட்டினைக் கூறுவதென்றால், அது ஒரு சாதனத்தைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும், மதர் போர்டில் இயங்கும் Firmware.

கேள்வி: புதியதாக எச்.பி. லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில், நான் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில், இணையப் பக்கங்களில் கிடைக்கும் திரைக் காட்சிகளை அப்படியே இணைக்க விரும்புகிறேன். இதனை எப்படி மேற்கொள்வது?
-என். பார்த்தசாரதி, தூத்துக்குடி
பதில்:
இணையப் பக்கத்தில், நீங்கள் டாகுமெண்ட்டில் ஒட்ட விரும்பும் பக்கத்தினைத் திரையில் பார்க்கும் போது, பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தவும். அந்தக் காட்சி அப்படியே கிளிப் போர்டுக்கு வரும். பின்னர், டாகுமெண்ட்டில் நீங்கள் இந்தப் படத்தினை இணைக்க வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து, கண்ட்ரோல் + வி கீகளை அழுத்தினால், திரைக் காட்சி அப்படியே ஒட்டிக் கொள்ளும்.
சில வேளைகளில், முழுமையான பக்கம் அப்படியே தேவை இல்லை என நீங்கள் எண்ணலாம். அந்தப் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஒட்டிவிடத் திட்டமிடலாம். அந்த நோக்கத்தில் செயல்படுகையில், முதலில் கூறியது போல அந்தப் பக்கத்தினை அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் கிளிப் போர்டு செல்லவும். பின்னர், பெயிண்ட் போன்ற இமேஜிங் புரோகிராம் ஒன்றைத் திறந்து, அதில் இதனைப் பேஸ்ட் செய்திடவும். பின்னர், நீங்கள் டாகுமெண்ட்டில் ஒட்ட வேண்டிய பகுதியினை மட்டும் தேர்ந்தெடுக்கவும். அந்தப் பகுதியை கண்ட்ரோல் + சி கீகளை அழுத்திக் காப்பி செய்திடவும். இனி, இதனை, டாகுமெண்ட்டில் தேவைப்படும் இடத்தில் ஒட்டிவிடலாம்.

கேள்வி: நான் என் கம்ப்யூட்டரில் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ், மால்வேர்களைத் தடுக்க மால்வேர் பைட்ஸ், தேவையின்றி தங்கும் தற்காலிக, கேஷ் பைல்களை நீக்க சி கிளீனர் ஆகியவற்றைப் பதிந்து பயன்படுத்தி வருகிறேன். மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டருடன் தந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என் கம்ப்யூட்டரில் வந்தது முதலே, செயல்படாமல் உள்ளது. மைக்ரோசாப்ட் தந்த பயர்வால் பாதுகாப்பு செயல்பாட்டில் உள்ளது. நான் இவற்றில் எதனை நீக்க வேண்டும் என்பது தெரியாததால், அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இது குறித்து தங்கள் அறிவுரையை வேண்டுகிறேன்.
என். கமலக் கண்ணன், நெய்வேலி.
பதில்:
ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன், மால்வேர் பைட்ஸ் மற்றும் சி கிளீனர் தொகுப்புகளைப் பயன்படுத்துவது சரியே. இவற்றில் எதையும் அழிக்க வேண்டாம். மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடலாம். இருப்பினும், அதனை நீக்கிவிட வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கவும்.
ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், சில பிரச்னைகளைத் தடுப்பதில் நமக்கு உதவுகிறது. வைரஸ் புரோகிராம்களுடன் கூடிய பைல்களை, உங்கள் கம்ப்யூட்டருக்குள் தரவிறக்கம் செய்வதிலிருந்து தடுக்கிறது. மேலும் இறங்கிய வைரஸ் பைல்களைக் கண்டறிந்து, அவற்றைத் தனியே ஒதுக்கி வைக்கிறது. அவற்றின் இயக்கத்தினை முடக்கியும் வைக்கிறது.
மால்வேர் புரோகிராம்கள், பாதிக்கப்பட்ட பைல்களை நீக்குவதில் அதிக கவனம் செலுத்தும். பாதிக்கப்பட்ட பைல் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பாதுகாப்பு வளையங்களையும் மீறி, உள்ளே இயங்க ஆரம்பிக்கலாம். மால்வேர் டூல்கள், இவற்றை வேட்டையாடி முடக்கி வைக்கும் பணியைச் செய்கின்றன.
பயர்வால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளே புகும் அனைத்தையும் ஸ்கேன் செய்து, சந்தேகம் இருப்பின், அவற்றை அனுமதிக்கலாமா என்று உங்களின் அனுமதியைக் கேட்கும். நீங்கள் இணையத்தை நாட அது உங்களை அனுமதிக்கும். ஆனால், இணையம் வழி மற்றவர்கள், அல்லது உங்கள் அனுமதி பெறாதவர்களை அது அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஒரு பயர்வால் மற்றும் ஒரு மால்வேர் தடுக்கும் புரோகிராம் தேவை. அத்துடன், இந்த புரோகிராம்கள் அனைத்தும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு, அற்றைய நிலையில் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான், புதிதாக வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து உங்கள் கம்ப்யூட்டர் காப்பாற்றப்படும்.
சிகிளீனர் புரோகிராம், கம்ப்யூட்டரின் இயக்கத்தில் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு, அழிக்கப்படாமல் தங்கும் தற்காலிக பைல்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. மேலும், தவறான ரெஜிஸ்ட்ரி குறியீடுகளை அழிக்கிறது.பிரவுசிங் ஹிஸ்டரியை நீக்குகிறது. இது ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல; கம்ப்யூட்டரில் சேரும் குப்பைகளை நீக்கும் புரோகிராம் ஆகும். இதுவும் கம்ப்யூட்டர் இயக்கத்தில் தேவையான ஒரு புரோகிராமாகும்.
நம் வீட்டில் நல்ல பூட்டு போட்டு போடுகிறோம். திருடர்கள் கதவை உடைத்தால், அபாய மணி ஒலிக்க சாதனத்தை நிறுவுகிறோம். திறக்க முடியாத போல்ட்டுகளைப் போட்டு கதவை இறுக்குகிறோம். இவை எல்லாம் தவிர, ஒரு காவல்காரனையும் நியமிக்கிறோம். எதனையாவது தேவை இல்லை என்று ஒதுக்குகிறோமா. இல்லையே. அது போல் தான் இவையும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X