உடலில் சாளரமாகவும், தன்னிகரற்ற உறுப்பாகவும் இருப்பவை கண்கள்தான். நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக, கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.
கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து, திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.
கண்களை பராமரிப்பதே சிறந்த வழி. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றை கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும், கண்களைக் நாள் போகப்போக பிரச்னையை உண்டாக்கும். எனவே காலதாமதம் செய்யாமல், கண் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது. கண்களுக்கு வைட்டமின் "ஏ,பி இரண்டும் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழே கூறிய உணவுகளில் வைட்டமின் "ஏபி அதிகமாக உள்ளது. முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் "ஏ,பி அதிக அளவு உள்ளது.
மேலும், மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து அதிகமாக உள்ளது. புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும். இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால், கண்களில் பணிச்சுமை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.