திருந்துங்கள் இளைஞர்களே ...- தி.செல்லப்பா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2010
00:00

நவ.,5   தீபாவளி!
இந்த கலியுகத்தில், இளைஞர்களை ஈர்க்கும் கவர்ச்சி சக்திகள் அதிகமாகி விட்டது. இவற்றிலிருந்து தங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பது என்று, பெற்றோர் தவியாய் தவிக்கின்றனர். ஆனால், இன்று நேற்றல்ல. முந்தைய யுகங்களிலும் உலக கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட குழந்தைகளை திருத்த, பெற்றோர் சிரமப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் தங்கள் பழக்க வழக்கங்களால், தாங்க முடியாத சிரமத்திற்கு ஆளாகும் போது திருந்தியும் இருக்கின்றனர் அல்லது பெற்றோரால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். பூமாதேவிக்கும், பெருமாளுக்கும் பிறந்த புத்திரன் பவுமன். "பவுமன்' என்றால், "பூமியின் பிள்ளை' எனப்பொருள். மனிதனாகப் பிறந்த அவன், அசுர குணங்களுடன் வாழ்ந்தவன் என்பதால், "நரகாசுரன்' என பெயர் பெற்றான். "நரன்' என்றால், "மனிதன்! ஆனால், இவனது அகங்கார குணம் இவன் பின்னால், "அசுரன்' என்ற பட்டத்தைக் கட்டி விட்டது.
இவன், இறைவனிடம் சாகாவரம் வேண்டுமென கேட்டான். பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இருப்பதாக அவர் கூறவே, "தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தன்னை கொல்ல முடியாது...' என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பெற்றவள் தன்னைக் கொல்ல மாட்டாள் என்பது அவனது கணிப்பு.
தான் பெற்ற வரத்தின் காரணமாக ஆணவமடைந்த அவன், பூலோகம் மட்டுமின்றி தேவலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களை, தன் பணியாட்களைப் போல் நடத்தினான். அவன் செய்யாத அராஜகமே இல்லை. அவனது கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள், திருமாலிடம் முறையிட்டனர். மாயக்கள்வனான பெருமாள், தான் பெற்ற பிள்ளையாயினும் தர்மம் தவறி நடந்த அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்தார். அந்தப் பிறவியில், பூமாதேவி சத்யபாமாவாக பிறந்து, திருமாலைத் திருமணம் செய்திருந்தாள். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு, முந்தையப் பிறவியில் தான் பெற்ற மகனைப் பற்றிய தகவல் தெரியாது. நரகாசுரனுடன் போர் தொடுக்கப் போவதாகவும், அதற்கு தேரோட்டியாக சத்யபாமாவே வர வேண்டுமென்று, திருமால் சொன்னதும், மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்; தேர் பறந்தது. நரகாசுரனுடன் யுத்தம் செய்தார் திருமால்.  அவரால், நிச்சயம் அவனை கொல்ல முடியாது. ஏனெனில், அவன் பெற்ற வரம் தடுத்தது. எனவே, அவனிடம் அடிபட்டு, மயங்கி விழுந்தது போல நடித்தார். தன் கணவரைக் காப்பாற்றும் ஆவேசத்தில், நரகாசுரனை நோக்கி பாணம் தொடுத்தாள் சத்யபாமா. நரகாசுரன் கீழே சாய்ந்தான். அப்போது தான் எதிரே  நிற்பது தன் தாய் என்பது தெரிந்தது; சத்யபாமாவுக்கும் உண்மை புரிந்தது. தன் மகனுக்காக அவள் திருமாலிடம்,"என் மகன் இறந்ததற்காக நான் வருந்தினாலும், இந்த உலகமே மகிழ்கிறது. தங்கள் வாழ்வில் இருள் நீங்கி, வெளிச்சம் வந்தது போல் அவர்கள் உணர்கின்றனர். இவனது வாழ்வு உலக மக்களுக்கு பாடமாக அமையும் வகையில், அனைவரும் விளக்கேற்றி இந்நாளை தீபாவளியாகக் கொண்டாடட்டும்...' என்று, திருமாலிடம் வேண்டுகோள் வைத்தாள்; திருமாலும், அந்த வரத்தை அளித்தார்.  இளைஞர்களே... நரகாசுரன் சாகும் நேரத்தில் திருந்தியது போல் இல்லாமல், நீங்கள் உடனடியாகத் திருந்தி, பெற்றோரை மகிழ்விக்கவும், நல்ல பண்பெனும் தீபத்தை மனதில் ஏற்றவும் உறுதியெடுங்கள்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saru - chennai,இந்தியா
05-நவ-201010:54:01 IST Report Abuse
saru இட்ஸ் வெரி nice belivable ஸ்டோரி, thanks
Rate this:
Share this comment
Cancel
குமரன் - Vijayawada,இந்தியா
31-அக்-201009:09:35 IST Report Abuse
குமரன் இனிய தீபாவளி நாளில் நல்ல கதையோடு இளைய தலைமுறைக்கு சிறந்த அறிஉரை கூறிய வைரம் ராஜ கோபால் வைரமாகவே திகழ்கிறார். இளங்குமரன்- விஜயவாடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X