ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் கம்ப்யூட்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2015
00:00

சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது. இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் மின் சக்தி தரக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கூறலாம். இன்டெல் கோர் எம் ப்ராசசர் மற்றும் பேட்டரியால், குறைந்த தடிமனில் கம்ப்யூட்டர் அமைந்துள்ளது. இந்த ப்ராசசர், உள்ளாக வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி தேவையை நீக்குகிறது. எனவே கம்ப்யூட்டரின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டரில் தான், ஆப்பிள் முதல் முறையாக, யு.எஸ்.பி. /சி போர்ட்டினைத் தந்துள்ளது. இது பவர், விடியோ அவுட்புட் மற்றும் டேட்டா ஆகிய அனைத்திற்கும் ஒன்றாக, ரிவர்ஸ் அமைப்பில் உள்ளது.
இந்த மேக் புக் கம்ப்யூட்டர் மூன்று வண்ணங்களில், சில்வர், கிரே மற்றும் தங்க நிற வண்ணங்களில், வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இந்த தங்க நிற கம்ப்யூட்டர், இதே நிறத்தில் ஏற்கனவே வெளியான ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றுடன் இணையாகக் காட்சி அளிக்கும் வகையில் அமைகிறது. கம்ப்யூட்டர் மூடியைத் திறந்தவுடன், அது அமைக்கப்பட்டிருக்கும் உறை, மனங்கவரும் தோற்றத்தில் உள்ளது.
11 அங்குல மேக் புக் ஏர் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்று சிறியது போலக் காட்சி அளிக்கிறது. இதன் திரை இரண்டு மூலைகளையும் தொட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ கம்ப்யூட்டரில் உள்ள ரெடினா திரை போன்று காட்சி அளிக்கிறது. திரை அமைப்பு விகிதம் 16:10 ஆகவும், ரெசல்யூசன் 2,304 x 1440 ஆகவும் உள்ளது. இதனால், திரையில் கிடைக்கும் காட்சி மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் அமைகிறது. அதில் உள்ளவற்றைப் படிப்பதுவும் எளிதாகிறது.
இதில் அமைக்கப்பட்டுள்ள புதிய கீ போர்ட், மேக் புக் ஏர் கம்ப்யூட்டரின் கீ போர்டைக் காட்டிலும், தடிமன் குறைவாக உள்ளது.
இதில் தரப்பட்டுள்ள போர்ஸ் டச் (Force Touch) ட்ரேக் பேட், தொட்டு இழுத்தவுடன் உடனடியாக வேலை செய்கிறது. கிளிக் செய்து கிடைக்கும் பலன் தெரிகிறது. வழக்கமான மல்ட்டி டச் செயல்பாடு இதில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்று விரல்கள் தொடு அமைப்பு விசை இதில் கிடைக்கிறது.
இந்த ட்ரேக் பேடில், போர்ஸ் டச் (Force Touch) என்ற விசை அமைப்பு புதியதாகத் தரப்பட்டுள்ளது. தேவைப்பட்டது கிளிக் ஆகிவிட்டது என்ற கணம் வரை சற்று அழுத்திச் செயல்படுத்தலாம். இது ஏறத்தாழ மவுஸ் ரைட் கிளிக் போலச் செயல்படுகிறது. இந்த Force Touch வசதி, ரெடினா டிஸ்பிளே கொண்ட மேக்புக் ப்ரோ 13 அங்குல கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பிள் வாட்சிலும் தரப்பட்டுள்ளது.
இந்தக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. சி வகை போர்ட் தரப்பட்டுள்ளது. இதுவே பவர் சார்ஜிங் மற்றும் ஹெட்செட் இணைக்கப் பயன்படுத்தலாம். வழக்கமான யு.எஸ்.பி. போர்ட் தரப்படவில்லை. இதனால், Display Port, HDMI, USB 2.0/3.0, மற்றும் VGA ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனி அடாப்டர்களை வைத்து இயக்க வேண்டியதிருக்கும். கம்ப்யூட்டருடன் USB- C சார்ஜர் வழங்கப்படுகிறது. இது மற்ற சாதனங்களுடன், தனியே ஒரு அடாப்டர் இல்லாமல் செயல்படாது. 802.11ac and Bluetooth 4.0 ஆகியன கம்ப்யூட்டரிலேயே தரப்பட்டுள்ளதால், வை பி இணைப்பு குறித்து தனியே இணைப்பு வேண்டும் என கவலைப் பட வேண்டியதில்லை.
சிஸ்டத்தின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், எங்கும் எடுத்துச் செல்வது எளிதாகிறது.
ஏப்ரல் 24 அன்று வாடிக்கையாளர்களுக்கு இந்த லேப்டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும்போது, அது ஒரு புதிய கண்டுபிடிப்பு போன்ற அனுபவத்தினைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
256 ஜி.பி. அளவிலான கம்ப்யூட்டர் 1299 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு அதிக ஸ்டோரேஜ் மற்றும் சற்று கூடுதலான வேகத்தில் இயங்கும் ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டர் 1,599 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் ராம் மெமரி 8 ஜி.பி. இதனை உயர்த்த முடியாது.

பன்னாட்டளவில் ஆப்பிள்
ஆப்பிள் வாட்ச், மேக் கம்ப்யூட்டர் வெளியீட்டின் போது, சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது 16 நாடுகளில், 453 தனி விற்பனை மையங்கள் இயங்குகின்றன. சீனாவில் 21 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு மையங்கள், கடந்த இரண்டு மாதங்களில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனை மையங்கள் மூலம், ஆப்பிள் 12 கோடி வாடிக்கையாளர்களை அடைய முடிகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X