இரவில் அசைவம்சொல்லுங்க "நோ'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2015
00:00

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால், பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர, இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர், அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது; உடல் நலத்துக்கும் தீங்கானது.
செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப்பின், வாழைப்பழங்கள் சாப்பிடலாம். எனினும், பொதுவாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-மார்ச்-201521:17:14 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ரொம்பவே சரியான கருத்து. இரவில் வெறும் ரொட்டி அதிகம் மசாலா சேர்க்காத கூடுகலெ போரும். உப்பு பெருங்காயம் கராச்ச நீர்மோரும் போரும். கூடியவரை மோர் சாதம் சேர்க்கலாம். நோ தயிர் சாதம். வாரியார் சாமிகள் சொல்லுவார், இரவிலே தயிர் சாதம் தின்னால் மந்தபுத்தியா இரும் என்று. நான்வெஜ் கூடாதுன்னா கொழுப்பு அதிகம். அதனால் ரத்தத்துலே கொழுப்பு சேரும் , ரொட்டி கூட நெய் சேர்க்காமலே செய்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
17-மார்ச்-201516:11:43 IST Report Abuse
ராம.ராசு சைவத்தை உயர்த்திச் சொல்வதற்காக பொத்தாம் பொதுவாக கருத்து இது. அசைவம் இரவில் சாப்பிடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அதை உண்ணுபவர்கள்தானேத் தவிர, சைவத்தை மட்டுமே,,,. சைவம் உண்ணுபவர்களை மட்டுமே மிகஉயர்வாகச் சொல்லும் தினமலர் அல்ல. பசித்து உண்ணுதல் வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அது சைவம் என்றாலும் சரி. ஏதோ அசைவம் சாப்பிடுவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிவுரை சொல்வது போல உள்ளது தினமலரின் கருத்து. உணவு ஜீரணமாவதற்கு சுமார் நான்கு மணி நேரம் போதுமானது. அது சைவம், அசைவம் எதுவானாலும். ஏதோ சைவம் உண்பவர்களுக்கு அஜீரணக் கோளாறு, வாந்தி, வாயிற்றுவலி போன்றன வருவதே இல்லை என்பது போலவும் அசைவம் உண்பவர்களுக்குத்தான் அனைத்து வயிற்று உபாதைகளும் வரும் என்பதுபோல "நோ" சொல்லுங்கள் என்று அழகாய்த் தமிழில் சொல்லுகிறது தினமலர். எல்லாம் தெரிந்தவர்கள், அறிவுரை சொல்வதற்காகவே பிறந்தவர்கள் போல கருத்து சொல்லப்பட்டுள்ளது. உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. எது வேண்டும் என்பதை அவரவர்கள் தீர்மானிக்க வேண்டும். சைவம் உண்பவர்கள் அறிவுள்ளவர்கள்... புத்திசாலிகளாகவே இருக்கட்டும். அதற்காக அசைவம் உண்பவர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவு பற்றிய அறிவு உட்பட எதுவும் தெரியாது என்று சொல்வது சைவம் உண்பவர்கள் மட்டுமே உயர்வான சிந்தனை கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்வது. அசைவமும் உணவுச் சுழற்ச்சியில், இயற்க்கை நியதியில, மிகவும் அவசியமானது உண்பதை சைவத்தை போதிப்பவர்கள் உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X