கிருமிகள் தங்குமிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2015
00:00

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும், சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இதை செய்ய சிறந்த வழி, உள்ளங்கையளவு பிளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும்.
மற்றுமொரு பிரச்னை, அழுக்கு டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து, வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.
வீட்டில் உள்ளோர் அனைவரும், தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது, எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும்.
சுத்தம் செய்யும் சானிடைசர் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அலமாரி, கதவுக் கைப்
பிடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள்.
சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு, கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். சமையலறையில் பாத்திரம் கழுவும் இடமும், கிருமிகள் வளரும் இடமும் ஒரே இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X