ஆரோக்கிய வாழ்விற்கு, சிறுவயது முதலே நாம் விதையிட வேண்டும். அதற்கு முக்கிய தேவை உணவு. உணவே மருந்தாக செயல்பட வேண்டும். அந்த வகையை சேர்ந்தது தான், குறுதானிய சாம்பார் சாதம்.
குறுதானிய சாம்பார் சாதம் செய்வது எப்படி?
தேவையானவை
தினை அரிசி ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு லி கிண்ணம்
வெங்காயம், தக்காளி தலா ஒன்று, பெரியது
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு 100 கிராம்
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
செய்முறை: வாணலியில் துவரம் பருப்பை போட்டு, லேசாக வறுத்து கொள்ள வேண்டும், பின் தினை அரிசி மற்றும் வறுத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்றாக கழுவ வேண்டும்.
தனியொரு பாத்திரத்தில் தேவையான அளவு, எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின், குக்கரில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து தினை, துவரம் பருப்பு, தக்காளி, வெங்காயம், காய்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக வைத்து கொண்ட பின், தாளித்த பொருட்களை, குக்கரில் சேர்த்து இறக்கினால், ருசியான குறுதானிய சாம்பார் சாதம் தயார்.
பயன்கள்: தினை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டால் தோலில் சுருக்கம் வராமல் இருக்கும்; பல் ஈறுகளுக்கு நல்லது; உடல் உழைப்பினால் வரும் சோர்வை தடுக்கும்; மலச் சிக்கல் வராமல் பாதுகாக்கும். பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து, இதில் மிகுந்துள்ளது.
- லீலாவதி சீனிவாசன்
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்