பலே திருடன்! (3)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 மார்
2015
00:00

""ஒரு சமயத்தில் நான் கானகத்தில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாழடைந்த அரண்மனையைக் கண்டேன். அதனுள்ளே ஒரு பெண் தன் மடியில் ஒரு சின்னக் குழந்தையுடன் அழுது கொண்டிருந்தாள். நான் அவளிடம் போய், ""ஏனம்மா அழுகிறாய்? இந்த அரண்மனைக்கு உரியவர் யார்?'' என்று கேட்டேன்.
""இந்த அரண்மனைக்கு உரியவர் இங்கு இல்லாதிருப்பது உன் நல்ல காலம்தான். ஒற்றைக் கண் ராட்சதன் இதன் உரிமையாளர். மனிதர்களின் மாமிசத்தை உண்டு மகிழ்பவன். இதோ, இந்தக் குழந்தையை எங்கிருந்தோ கொண்டு வந்து சமைத்து வைக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறான். இந்த அழகான குழந்தையைக் கொன்று பக்குவம் செய்ய வேண்டுமே என்றுதான் அழுது கொண்டிருக்கிறேன்,'' என்றாள் அந்த பெண்.
""இந்தக் குழந்தையை மறைத்து வைக்கத் தகுந்த இடம் இருக்குமானால் கூறு. நான் குழந்தையை மறைத்து வைத்து காப்பாற்றி விடுகிறேன். நீ அந்த அரக்கனுக்கு ஓர் ஆட்டுக்குட்டியைப் பக்குவம் செய்து தயாராக வை. இந்தக் குழந்தையினாலான உணவு தான் இது என்று அவன் நம்புவதற்கு இந்தக் குழந்தையின் சுண்டு விரலை மட்டும் வெட்டி அதன் மீதாக வைத்துவிடு,'' என்று கூறினேன்.
""அவளும் அதன்படியே ஓர் ஆட்டுக் குட்டியை வெட்டிச் சமையல் செய்யலானாள். நான் அந்தக் குழந்தையை குறிப்பிட்ட இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு ஓடி வந்தேன். அதற்குள் ராட்சதனும் திரும்பிக் கொண்டிருந்தான்.
""என்னைக் கண்ட அந்தப் பெண் பரபரப்புடன், "சீக்கிரம் ஓடு. அதோ அந்த அறைக்குள் போய் உன் உடைகளையெல்லாம் களைந்து விட்டு, அங்கு கிடக்கும் இறந்தவர்களோடு ஒருவனாக உடலை அசைக்காமல் கிட' என்று கூறி விரட்டினாள்.
"அவள் குறிப்பிட்ட அறைக்குள் ஓடினேன். அது ஒரு பயங்கரமான இடம். அங்கு ஆண், பெண் உடல்கள் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தன. நானும் அந்தப் பிணக் குவியலில் ஒருவனாகக் கிடந்தேன்.
""அடுத்த அறையில் அரக்கன் கூச்சல் போடுவது கேட்டது.
""இதன் சுவை குழந்தை மாமிசத்தினுடையதாக இல்லையே... ஆட்டுக் குட்டியின் இறைச்சி போல் அல்லவா இருக்கிறது? உண்மையைச் சொல்,'' என்று உறுமினான்.
""அந்தப் பெண், குழந்தையின் சுண்டு விரலைக் காட்டிய பிறகு அதிக ஆர்ப்பாட்டம் இன்றி உணவு உட்கொண்டான். இருந்தாலும், "என் பசியே அடங்கவில்லை. அந்த இறைச்சி குவியல் அறையில் சில நல்ல எலும்புகளை எடுத்துக் கடித்தால்தான் என் பசி தணியும்' என்று கூறியபடி நான் முடங்கிக் கிடந்த இடத்துக்கு வந்தான்.
""இரண்டு பெரிய தொடை எலும்புகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டவன் என் கால்களைக் கண்டதும், "இதோ மாமிசத்துடன் ஒரு கால்... ஆஹா!' என்று துள்ளிக் குதித்தான். அவனுக்கு ஒற்றைக் கண்தானே? சரியாகக் கவனிக்கவில்லை.
""என் காலைப் பற்றி இழுத்துக் கொண்டே மேஜை அருகே போனான். அங்குள்ள மதுப் பீப்பாவை மடமட வென்று காலி செய்தான். பிறகு தொடை எலும்புகளை கடித்துச் சுவைத் தான். அதற்குள் மதுவின் போதை வேலை செய்யவே, அப்படியே மேஜை மீது சாய்ந்தபடி குறட்டை விடலானான். இறந்த மனிதன் என்று என்னை இழுத்து சென்ற வேகத்தில், என் கால் எலும்பு உடைந்து விட்டது. அந்தப் பெண் எனக்கு மருந்து வைத்துக் கட்டினாள்.
""ராட்சதன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே ஒரு கனத்த இரும்பைப் பழுக்கக் காய்ச்சி அவன் ஒற்றைக் கண்ணுக்குள் சொருகினேன். இதனால் அவனைக் கொல்ல முடியாவிட்டாலும் அவன் கண்ணில் படாமல் தப்ப முடியுமல்லவா?''
""தீயினால் சுட்டபுண் திகுதிகுவென்று எரிய, அவன் பயங்கரமாகக் கத்தியபடி என்னைத் தொடர்ந்து ஓடி வந்தான். கண் தெரியாததனால் என்னைப் பிடிக்க முடியவில்லை.
""ஒரு வளையத்தை என் மீது வீசினான். அது என் காலில் வந்து விழுந்தது. அப்படியே ஒட்டிக்கொண்டது. அது மந்திர வளையம் போலிருக்கிறது. "நான் இங்கிருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன்' என்ற ஓலம் எழுந்தது அதனிடமிருந்து. என் இருப்பிடத்தை இத்தனை துல்லியமாக இது காட்டிக் கொடுக்கிறதே... என்று தவித்தேன்; தாவினேன்; ஓடினேன்.
""குரலின் ஓசை கேட்டு அரக்கன் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான். சட்டென்று நான் ஒரு காரியம் செய்தேன். என் கத்தியை எடுத்தேன். கால் சதையோடு வளையத்தை வெட்டினேன். சற்றுத் தொலைவில் அகல பாதாளமான ஒரு மலைப்பள்ளத்தில் என் காலோடு அந்த மந்திர வளையத்தை அதில் வீசினேன்.
அந்த மந்திர வளையம் அங்கிருந்தபடி அதேபோலக் கத்திக் கொண்டிருந்தது. அரக்கன் அந்த ஒலி சத்தத்தை கேட்டு, அந்த மலைப் பள்ளத்தில் போய் விழுந்தான். ஈட்டி போன்ற பாறைகள் நீட்டிக் கொண்டிருந்த அந்தப் பள்ளத்தாக்கில், அவன் உடல் குத்திச் சிதறிச் சின்னா பின்னமாகி மாண்டான். என் கால் ஊனமானது இதனால்தான்,'' என்றான் பலேதிருடன்.
இத்தனை நேரமும் திருடனின் கதைகளைக் காலகண்டனின் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொண்டு கிழவி-
""இந்தக் கிழவன் கூறிய இந்தக் கதை பொய் அல்ல. நிஜமாக நடந்ததுதான். ஏனென்றால், ராட்சனின் அரண்மனையில் சமையல்காரியாக இருந்தவள் நான்தான். அன்று இவனால் காப்பாற்றப்பட்ட குழந்தை நீதான். உன் இடது கையில் சுண்டு விரல் இல்லாதிருப்பதும் இதனால்தான்,'' என்றாள்.
காலகண்டன் கறுப்புத் திருடனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
"ஐயா! நான் உங்கள் எல்லாரையும் விடுதலை செய்வது மட்டுமல்ல... நீங்கள் எது விரும்பிக் கேட்டாலும் தருகிறேன். என் உயிரைக் காத்து வாழ்வளித்த உத்தமரல்லவா நீர்!'' என்றான்.
""உன்னுடைய பொற்சலங்கை பூட்டிய குதிரையைக் கொடு போதும்!'' என்று அந்த மூன்று ராஜ குமாரர்களின் கதையைச் சுருக்கமாகக் கூறினான் பலே திருடன்.
காலகண்டன் மகிழ்ச்சியோடு தன் அற்புதக் குதிரையை அவிழ்த்து வந்து, ராஜகுமாரர்களிடம் ஒப்படைத்தான்.
ராஜகுமாரர்கள் குதிரையுடனும், கிழவனுடனும் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர். இத்தனை காலமும் மூன்றாவது இளவரசனின் நிபந்தனைபடி உயரமான உப்பரிகையின் மீது, சோள ரொட்டியும் தண்ணீரும் குடித்தபடி, இவர்கள் சாவை எதிர்பார்த்துக் காத்திருந்த ராணி, தூரத்தில் இளவரசர்கள் குதிரையோடு வருவதைக் கண்டு, "வீல்' என்று அலறியபடி உப்பரிகையிலிருந்து கீழே குதித்துத் தன் உயிரை விட்டாள்.
அப்புறம் என்ன?
மூன்று ராஜகுமாரர்களும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக நாட்டை ஆண்டனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
-முற்றும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X