'செயின்ட் எல்மோவின் தீ' என்பது மழைகாலத்து மின்னலோடு தொடர்பு உடையது எனலாம். இந்த அற்புதமான நிகழ்ச்சி அனேகமாக உயரமான கிறிஸ்துவத் தேவாலயங் களின் மேலே உள்ள ஊசி போன்ற கோபுரங் களிலும், கப்பலின் கொடிமரங்களின் உச்சி யிலும் நிகழும். அதாவது, கூரிய மேல் நோக்கிய முனை உயரமான பகுதியாக இருக்க வேண்டும். அதற்கருகில் அந்த உயரத்திற்கு வேறு ஏதும் கட்டடம் அல்லது மரம், மலைச் சிகரம் போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். மழைக்கால மேகங்கள் கவிந்து இருக்க வேண்டும். ஆனால், மழை இருக்கக் கூடாது.
இந்தக் கூரிய உச்சிமுனையில், "எல்மோ தீ' உண்டாகும் போது பளீரென்று ஊசி போன்ற ஒரு தீயின் கதிர் தோன்றிமறையும். அதே நேரம் ஒரு விதமான, மரக்கிளை முறியும் சத்தம் அல்லது வேகமாக காற்று மோதும் சத்தம் கேட்கும்.
இது எப்படித் தோன்று கிறது என்று காண, மின்னல் தோன்றும் முறையை முதலில் புரிந்து கொண்டால் எளிதாக இருக்கும்.
எல்லா பொருள்களும் நேர்மின்சக்தி, எதிர்மின் சக்தி என்னும், விளைவு களைக் கொண்ட அணுக் களால் ஆனவை. இவை, மிகையான விசையோடு இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கும். இவை சில காரணங்களினால் பிரியும் போது இவை மீண்டும் ஒன்றை ஒன்று மிக வேகமாக இழுக்கும்.
ஒரு மேகத் திட்டில் இதில் ஏதாவது ஒன்று மிக சக்தியோடு உருவானால் அது மேகத்திற்கு அடியில் இருக்கும். எதிர்மின் சக்தியை பூமியை நோக்கி வேகமாகச் செலுத்த முற்படும். இவை, அழுத்தப்படும் போது தழுவிச் செல்ல மேகத்திற்கு அடியிலிருந்து பூமியை நோக்கி ஒரு வெற்றிடக் கால்வாயை அல்லது கிளை கிளை யாகப் பிரியும் ஒரு கால்வாய்த் தொகுப்பை உருவாக்க முயன்று, அதன் வழியாக சக்தி மிகுந்த எலெக்ட் ரான்களை அனுப்ப முற்படும். அப்போதுதான் பூமியை மிக வேக மாக வெளிப்படும் எலெக்ட்ரான்கள் பளீரென்று மின்னலாகத் தோன்றித் தாக்குகின்றன.
இதைத் தொடர்ந்தோ அல்லது மிகச் சிறு இடைவெளியிலோ இடி சத்தம் கேட்கும் போது எலெக்ட்ரானால் ஏற்பட்ட மின்னலின் தாக்குதலை நாம் இடி தாக்கியது என்கிறோம்.
இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த மனித சமுதாயம், இடிதாங்கியைக் கண்டு பிடித்து உயரமான கட்டடங்களின் மீது பதித்தது. இதன் நோக்கம் ஒரு கால்வாய் போல் பூமியைத் தாக்க வரும் எலெக்ட்ரான்களை, இடையே கூறிய முனையில் குறுக்கிட்டு அதை அந்தக் கால்வாயிலிருந்து பக்கவாட்டில் கசியச் செய்வது அல்லது திசைத் திருப்புவது. அப்படிச் செய்யும் போது எலெக்ட் ரான்களின் வேகம் குறைந்து போய்விடுவ தோடு தாக்கும் தன்மை யும் அழிந்து விடும்.
இந்தக் கோபுர உச்சித் தீக்கு அக்காலத்தில் பாது காப்புத் தேவதையாகக் கருதப்பட்ட, "எல்மோ' என்ற தேவதையின் பெயர் சூட்டப்பட்டது.
இந்த எல்மோ தீ புரோபெல்லர்கள் நுனி யிலும், காற்றாலைகள் உச்சியிலும், உலர்ந்த பனிப்பிரதேசத்திலும், இடிமின்னலுக்கு இடையே பறக்கும் விமானங்களின் மூக்கு நுனியிலும் கூட இடம் பெறும்.
***