இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!
வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.
செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை உரிக்கச் சொல்லுங்கள். நண்பர் வாழைப்பழத்தை உரித்ததும் துண்டு துண்டாக இருக்கும். இந்த மேஜிக்கை செய்வது எப்படி?
நீங்கள் மேஜிக் செய்யும் முன்பே யாருக்கும் தெரியாமல் ஒரு தையல் ஊசியை வாழைப் பழத்தில் சொருகி, (ஆனால், அடுத்த பக்கம் வெளியே வராமல் இருக்க வேண்டும்) அதைப் பக்க வாட்டில் உள்ளே முன்னும், பின்னும் அழுத்தி அசைக்க வேண்டும். இதனால், உள்ளே பழம் துண்டாகி விடும். ஆனால், வெளியே தெரியாது. இப்படித் தயாரித்த வாழைப்பழத்தினால் மேஜிக் செய்து எல்லாரையும் அசத்த வேண்டியதுதான்.