மருத்துவ முறைகளில் ஹோமியோபதி மருத்துவம் அகிம்சா வழியை தழுவியது. ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த ஹானிமன், ஆங்கில மருத்துவ எம்.டி., பட்டப்படிப்பில் ஜெர்மனியில் உள்ள எர்லேஞ்சன் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, பின்னர் தொழில் புரிந்து கொண்டிருந்தவர்.
ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனின்றி போனதாலும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாலும், ஹோமியோபதியை கண்டுபிடித்தார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும் என்பதற்கேற்ப, அமைந்ததுதான் ஹோமியோபதி.
சின்கோனா மரத்து இலைகளை, கஷாயம் வைத்துச் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் வந்தது. பின்னர் அதே சின்கோனா மரத்து இலைகளை, தகுந்த அளவில் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் குணமானது. இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. அதன்பின்னர் படிப்படியாக பல்வேறு சோதனைகள் செய்து மருத்துவத்தை வளர்த்தார்.
இத்தகைய சிறப்பு பெற்ற சின்கோனா மரங்கள், நீலகிரியில் வளர்க்கப்பட்டன. நாளடைவில் இவை அழிவின் பிடியில் சிக்கிக் கொண்டன. மனிதனின் மனோநிலையை பொறுத்தும், உடல்ரீதியாக அவனது தாங்கும் சக்தி எவ்வளவு என்பதை பொறுத்துமே, ஹோமியோபதியில் மருந்துகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு மனிதனின் மனநிலை, அவன் பார்க்கும் வேலையைப் பொறுத்தே அமைகிறது. வாயுத் தொல்லைக்கு கார்போவெஜ், நக்ஸ்வாம், அச்போடிடா முதலிய மருந்துகளும், மலச்சிக்கலுக்கு நேட்மூர், அலுமினா, கிராபைட் முதலான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.