நம் வாழ்வின் ஜீவ நாடியான, தண்ணீரை காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள்.
புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க இது ஒன்றே சிறந்த வழி.
கண்களை அதிகம் உபயோகிக்க வேண்டிய வேலையிலிருப்போர், அடிக்கடி வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தை பார்ப்பது நல்லது. அதிக கோபம், உணர்ச்சிவசப்படுதல் இவற்றைத் தவிர்த்து, தினமும் யோகா, தியானம் செய்வது நல்லது.
குளிர் சாதனப்பெட்டியில் வைத்த பொருட்களை அடிக்கடி எடுத்து சூடு செய்து உண்பது நல்லதல்ல. ஒருமுறை எடுத்தால் அதை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே சாப்பிட பயன்படுத்த வேண்டும்.
அதையும் இரண்டு நாட்களுக்கு மேல், தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. நாம் சாப்பிடும் உணவுதான் நமக்கு ஆரோக்கியம் தருகிறது. உணவைப் பொறுத்தவரை, தற்போது பெருகி வரும் சாலையோரக் கடைகளில் தட்டுகளை ஒரே பக்கெட்டில் நீர் வைத்து அதிலேயே
கழுவுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
ஒரே தண்ணீரில் மீண்டும் மீண்டும் கழுவிய எச்சில் தட்டுகளில் சாப்பிடுவதன் வாயிலாக, வயிற்று உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இன்று குடிக்கும் நீரால்தான் நோய் அதிகம் பரவுகிறது நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிப்பதே நல்லது.