தொப்பை குறைய, உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்வதோடு, தொப்பை குறையவும் தடையாக இருக்கும். உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாகற்காய், முட்டைகோஸ், ப்ரோக்கோலி ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடிக்கலாம். எடையும் குறையும். தொப்பையும் கரையும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தொடக்கூடாது. குறிப்பாக சிப்ஸ், பர்கர், பிரெஞ்ச் பிரை ஆகியவற்றை மறந்து விட வேண்டும்.
தியான நிலையில் அமர்ந்து, தினமும், 30 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்தாலும், தொப்பை குறையும். பொட்டாசியம் அதிகமுள்ள உணவை சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் கொழுப்பு சேர்வது குறைந்து, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும்.
நார்ச்சத்து அதிகமாக உள்ள, உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும், வாகனத்தில் செல்வதை தவிர்த்து, நடந்து சென்றால், தொப்பையும் குறையும், கால்களும் வலுவாகும்.
தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், தொப்பை பாதியாக குறைந்து விடும். நீர்ச்சத்துள்ள பேரிக்காய், தர்பூசணியை சாப்பிட்டால், உடலில் கொழுப்பு சேர்வது குறையும்.
எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிக அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். தொப்பையும் வராது.