கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குகிறது. இதில் ரைட் மவுஸ் கிளிக்கின, கீ போர்ட் மூலம் அமைப்பது எப்படி?
ஆர்.ஜீவராஜ், கோவை.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். எத்தனை வகை வேலைகளுக்கு, நமக்கு மெனு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம். சில வேளைகளில், நாம் கீ போர்டிலேயே பணியாற்றிக் கொண்டிருப்போம். இந்த செயல்பாட்டினை, மவுஸில் ரைட் கிளிக் செய்யப்படுவதனை, கீ போர்டிலேயே மேற்கொள்ளலாம். இப்போது வரும் நவீன கீ போர்டுகளில் இதகெனத் தனியே கீ தரப்பட்டுள்ளது. இது வலதுபுறம், ஸ்பேஸ் பாரை அடுத்து, கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே தரப்பட்டுள்ளது. கீ போர்டில் கீகளை அழுத்தி இந்த ரைட் கிளிக் மெனுவினைப் பெற வேண்டும் என்றால், Shift + F10 கீகளை அழுத்தினால் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட என் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்துகிறேன். இதற்கான சர்வீஸ் பேக் கொன்டு அப்டேட் செய்துள்ளேன். விண் 10 வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். விண் 7 சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்குகிறது. இதனை கம்ப்யூட்டரிலிருந்து நீக்க என்ன செய்திட வேண்டும்? வழிமுறைகளைக் கூறவும்.
என். சுகவனேஸ்வரன், திருப்பாலை.
பதில்:
நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்தினால், அதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை நீக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. முதலில் விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். இதில் கண்ட்ரோல் பேனல் டேப் அழுத்தி, அதனைப் பெறவும். பின்னர், Programs and Features செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள பிரிவில் Turn Windows Features on off என்ற ஆப்ஷன் இடது பக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்து அந்த புரோகிராமினை இயக்கவும். இங்கு View installed updates என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Microsoft Windows என்பதன் கீழ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Uninstall. என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அன் இன்ஸ்டால் ஆன பின்னர், சிஸ்டத்தினை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.
உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உங்கள் சிஸ்டத்தில் மறைக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் எப்போதும் தன்னுடைய விண்டோஸ் அம்சங்களை நீக்கிட அனுமதிப்பதில்லை. அத்தகைய அம்சங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் ஒன்றாகும். அதனால் தான், அதனை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்திட இயலாது.
இதனை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எப்படி நீக்குவது என்பதனையும் பார்க்கலாம். இதற்கு சற்று வேறு மாதிரியான நடவடிக்கைகள் தேவை. விண்டோஸ் பட்டன் அழுத்தி, "Turn Windows" என டைப் செய்திடத் தொடங்கவும். உடன் கிடைக்கும் பட்டியலில் "Turn Windows Features on or off" என்பதில் கிளிக் செய்திடவும். சில பதிவுகளில், இப்போது உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கேட்கப்படலாம். அப்போதுதான் தொடர்ந்து இயங்க முடியும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டினை முடக்கி வைக்க, Internet Explorer என இருக்கும் இடத்தின் இடது பக்கம் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். மீண்டும் Yes என்பதில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். தொடர்ந்து ரீ ஸ்டார்ட் என்பதில் கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும்.

கேள்வி: விண்டோஸ் 10 குறித்து நல்ல வகையாக, நிறைய எழுதி வருகிறீர்கள். இப்படித்தான் விண்டோஸ் 8 குறித்தும் ஓஹோ என்று பேசப்பட்டது. ஆனால் என்னவாயிற்று? எனவே, என்னிடம் விண்டோஸ் 7 இருப்பதால், விண்டோஸ் 10 வந்து பலரும் பயன்படுத்திப் பார்த்து, அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரை காத்திருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாமா?
என். ஜெயலட்சுமி, சிவகாசி.
பதில்:
விண்டோஸ் 8 மக்களிடம் பெரிய அளவில் சென்றடையவில்லை என்பதால், அது குறையுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றாகிவிடாது. இதில் செயல்பட சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது. மக்கள் அதற்குத் தயாராகவில்லை. மற்றபடி தொழில் நுட்ப வகையில் பார்த்தால், விண் 8 மிகச் சிறப்பான ஒன்றாகும். ஸ்மார்ட் மொபைல் போன்களில் மட்டுமே இருந்து வந்த தொடு உணர் திரை இயக்கத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வந்தது விண்டோஸ் 8 மட்டுமே. இன்றும் அதன் விரும்பிகளால், இந்த சிஸ்டம் போற்றப்படுவது உண்மையே.
இனி, உங்கள் கேள்விக்கு வருவோம். நீங்கள் காத்திருக்கலாம். ஆனால், 12 மாதங்களுக்குள், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திடவில்லை என்றால், அடுத்து கட்டணம் செலுத்தித்தான், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வாங்க வேண்டியதிருக்கும், சிஸ்டர். பரவாயில்லையா!

கேள்வி: ஸியோமி என்பது மொபைல் போன் தயாரிக்கும் சீன நிறுவனமா? இதன் மொபைல் போன்கள் அவ்வளவாகக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனாலும், இது குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது சீனாவில் இயங்குகிறதா? இதைப் போன்று வேறு சீன மொபைல் போன் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ளனவா?
என். ஸ்ரீதரன், மதுரை.
பதில்:
ஆம், ஸியோமி என்பது சீனாவில் இயங்கும் மொபைல் போன் நிறுவனமே. ஓரிரு ஆண்டுகளில், சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவில், உலக அளவில் இடம் பிடித்துள்ளது. 2011 ஆகஸ்ட் மாதம் தான் இதன் முதல் ஸ்மார்ட் போன் வெளியானது. தற்போது உலக அளவில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்வதில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. லெனோவா மற்றும் எல்.ஜி. ஆகியவை முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைக் கொண்டுள்ளன. ஸியாமியின் போன்களெல்லாம், ஆப்பிள் நிறுவனத்தின் போன்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் லே ஜுன், சீனாவின் பணக்காரர்களின் வரிசையில் 23 ஆவது இடத்தைக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்து காலூன்ற இருக்கும் சீன மொபைல் நிறுவனம் மெய்ஸூ (Meizu) ஆகும். இந்தியாவில் விரைவில் தன் மொபைல் போன்களை விற்பனை செய்திட இருப்பதாக, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் Meizu M1 Note என்னும் போனுடன் தன் வருகையைப் பதிவு செய்திட இருக்கிறது. இந்த 4ஜி போன் அனைத்து நவீன வசதிகளுடன், 3140 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸியாமி, இந்தியாவில் ப்ளிப் கார்ட் இணைய தள வர்த்தக நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தன் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. மெய்ஸூ நிறுவனமும் இதே வழியைப் பின்பற்றலாம்.

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 வைத்திருந்தேன். திடீரென தானாக அது விண்டோஸ் 8.1க்கு அப் கிரேட் செய்து கொண்டது. இதில் மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், பைல்களைத் தயாரிக்கும்போது, அவற்றை அப்படியே ஒன் ட்ரைவில் சேவ் செய்யலாம் என்றும் என் நண்பர் கூறுகிறார்? இது எப்படி சாத்தியம்? நான் இதெல்லாம் வேண்டாம் என்று இருக்கிறேன். விண் 10க்காகக் காத்திருக்கிறேன்.
என். ராஜ சேகரன், திருப்பூர்.
பதில்:
உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரில் இருந்த விண் 8 தானாக அப்கிரேட் செய்திருக்காது. அதனை அப்டேட் செய்திடும்படி நீங்கள் செட் செய்திருந்திருப்பீர்கள். அதனைத் தானாக இன்ஸ்டால் செய்திடவும் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இது நல்லதற்கே. நீங்கள் விண்டோஸ் 10ஐ விரும்புவதால், விண் 8.1க்கு அப்கிரேட் செய்யப்பட்டது நல்லதுதான். அப்போதுதான் ஒரே ஸ்டெப்பில், விண் 10க்குச் செல்ல முடியும். இல்லை எனில், முதலில் விண் 8.1க்கு மாறிய பின்னரே, விண் 10 தரவிறக்கம் செய்திட முடியும்.
உங்கள் நண்பர் ஒன் ட்ரைவ் குறித்துச் சொல்வதும் உண்மைதான். இதிலும், நீங்கள் ஒன் ட்ரைவ் ஒருங்கிணைத்தலுக்கு (syncing) அனுமதி அளித்திருப்பீர்கள். பின்னணியில் இதற்கான செயல்பாடு இயங்கிக் கொண்டே இருக்கும். உங்கள் பைல்கள் ஒன் ட்ரைவில் சேவ் செய்யப்படும். ஆனால், இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் எப்போதும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள ஒன் ட்ரைவ் போல்டரில் இவை இருக்கும். இணைய இணைப்பில் இவற்றை ஒன் ட்ரைவ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய கம்ப்யூட்டர் என்று மட்டும் இல்லை. எந்த கம்ப்யூட்டரில், உலகில் எந்த இடத்திலிருந்தும், OneDrive.com இணைய தளம் சென்று, நீங்கள் சேவ் செய்த பைல்களை எடுத்துப் பயன்படுத்தலாம். எடிட் செய்திடலாம். அதற்கான பாஸ்வேர்டினை மற்றவர்களுக்கும் கொடுத்து, பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதனால், இது ஒரு பேக் அப் போலச் செயல்படுகிறது.

கேள்வி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்கத்தில், தமிழ் எழுத்துருவாக “லதா” என்ற எழுத்துரு தரப்படுகிறது. ஏரியல் யூனிகோட் எம்.எஸ். என்ற எழுத்து பைலின் தமிழ்ப் பிரிவாக இது உள்ளது. சமீபத்தில், ஓர் இதழில், முரசு அஞ்சல் என்னும் சாப்ட்வேர் தரும் இணைமதி என்ற தமிழ் எழுத்தை விண்டோஸ் சிஸ்டத்தில் பெறலாம் என்று எழுதப்பட்டிருந்தது. இது உண்மையா? மைக்ரோசாப்ட் தரும் இந்த இரண்டு எழுத்துருக்களில் எது அழகாக இருக்கும்?
க. அன்புக்கரசி, விருதுநகர்.
பதில்:
விண்டோஸ் இயக்கத்துடன் வரும் எழுத்துருக்களில், ஏரியல் யூனிகோட் எம்.எஸ். என்ற எழுத்துரு கோப்பு, உலகின் பெரும்பாலான மொழிகளைக் கொண்டுள்ளது. அதுதான் யூனிகோட் கட்டமைப்பின் சிறப்பு. லதா என்ற எழுத்துரு அதில் தமிழைக் கொண்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் “இணைமதி” என்ற எழுத்துரு, முரசு அஞ்சல் தமிழ் மென்பொருள் வழி கிடைக்கும் எழுத்துருவாகும். மற்ற தமிழ்ச் செயலிகளைப் போல, இது தனியான சாப்ட்வேர் போல செயல்படாது. இதனை இன்ஸ்டால் செய்தால், இது விண்டோஸ் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்ததாக மாறிவிடும். இன்ஸ்டால் செய்த பின்னர், சிஸ்டத்தில் உள்ள எழுத்துருவாக இது அமைந்துவிடும். முரசு அஞ்சல் மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்தால், இந்த எழுத்துருவும் நீக்கப்படும். இது மைக்ரோசாப்ட் தரவில்லை.
எந்த எழுத்துரு அழகாக உள்ளது? என்று கேட்டுள்ளீர்கள். அழகு என்பது ஒவ்வொருவரின் தேவை, கண்ணோட்டத்தினைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை “இணைமதி” தமிழ் எழுத்துரு அழகுதான். லதாவைக் காட்டிலும் அழகுதான். மற்றவர்களுக்கு லதா எழுத்துரு அழகாகத் தென்படலாம். நீங்கள் இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, முரசு நிறுவனத்திடம், அதனை இன்ஸ்டால் செய்திட கீ இலவசமாகப் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கவும்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X