இன்டர்நெட் மற்றும் கேமரா இணைந்த நோக்கியா மொபைல் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
இன்டர்நெட் மற்றும் கேமரா இணைந்த நோக்கியா மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
00:00

ஸ்மார்ட் போன்கள் அதிகமாக அறிமுகமாகும் இந்திய மொபைல் சந்தையில், அடிப்படை வசதிகளுடன், இன்டர்நெட் மற்றும் கேமரா வசதியுடன் கூடிய மொபைல் போன் ஒன்றை நோக்கியா 215 என்ற பெயருடன், பட்ஜெட் விலையில், ரூ. 2,149 என விலையிட்டு, அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம். இத்தகைய போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், ரூ. 350 கோடி அளவில் இயங்கும் தொடக்க நிலை போன்களில் புதிய விரிவாக்கத்தினை நோக்கி நோக்கியா செல்லத் திட்டமிட்டுள்ளது.
நோக்கியா 215 போனில், கீழ்க்காணும் சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் பரிமாணம் 116.00 x 50.00 x 12.90 மிமீ. எடை 78.60 கிராம். பேட்டரியின் திறன் 1,100 mAh. திரை 240×320 ரெசல்யூசன் டிஸ்பிளேயுடன் 2.4 அங்குல திரை, 8 எம்.பி. ராம் நினைவகம், 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் வழி அதிகப்படுத்தும் வசதியுடன் ஸ்டோரேஜ் நினைவகம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் தளங்களுக்கான நேரடி இணைப்புள்ளது. பிங் தேடுதல் டூல் தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. யு.எஸ்.பி. போர்ட் கிடைக்கிறது. இரண்டு சிம்களை இயக்குகிறது. இதில் உள்ள பேஸ்புக் அப்ளிகேஷன் 9 மாநில மொழிகளை சப்போர்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
இந்த வகை அடிப்படை வசதிகள் கொண்ட, அதே நேரத்தில் இணைய இணைப்பு தரும் இரண்டு சிம் போன்களைத் தருவதில் நோக்கியா அதிக அக்கறை காட்டுவது இதுவே முதல் முறை. சென்ற 2014 ஆம் ஆண்டில், 25.7 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. இவற்றில் 70% போன்கள், இத்தகைய அடிப்படை வசதிகள் கொண்ட போன்களே. இந்த வகை போன் விற்பனைச் சந்தையில் சாம்சங் 16.5 % பங்கினையும், நோக்கியா 13.3% பங்கினையும் கொண்டிருந்தன.
ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விலையும், இணைய வசதியும் இரண்டு சிம் இயக்கமும் கொண்ட போன்கள் நிச்சயம், அதிகப் பயன்பாட்டை எதிர்பார்க்கும் மக்களைக் கவரும் என்று திட்டமிட்டு, நோக்கியா இந்த வகை போன்களைத் தயாரித்து வழங்குவதில் இறங்கியுள்ளது. இதன் மூலம், தனக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நோக்கியா திட்டமிடுகிறது. ஏனென்றால், சாம்சங் நிறுவனத்திடம், இன்டர்நெட் வசதி கொண்ட குறைந்த விலை போன் எதுவும் இல்லை.
அடிப்படை வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. மொத்தமாக சந்தையிலிருந்து மறைய இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 97 கோடி மொபைல் போன்களில், 20 கோடி போன்களில் மட்டுமே, இணைய இணைப்பு பெறும் வசதி உள்ளது. மேலும், மொபைல் போன் பயன்படுத்துவோர்களில், 80% பேர் ரூ.3,000க்கு மேல் விலையுள்ள போனை வாங்கிட வசதி இல்லாதவர்களாக உள்ளனர். இந்த இடைவெளியை மிக அருமையாக நோக்கியா பயன்படுத்த திட்டமிட்டு, இந்த புதிய மொபைல் போனை, நோக்கியா 215, வெளியிட்டுள்ளது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X