சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2015
00:00

E.M. திறன்மிகு நுண்ணுயிரி: Effective Micro Organisms சாதாரணமாக பஞ்ச கவ்யத்தில் (ஐம்மருந்து) பத்து வகை நுண்ணுயிர்கள் என்றால் E.M.ல் எண்பது வகை நுண்ணுயிர்களைத் தேர்வு செய்து அதை ஒருங்கிணைத்த ஒரு நுண்ணுயிர் கலவை ஆகும். இது திரவ வடிவத்தில் உள்ளது. இந்த திறன்மிகு நுண்ணுயிர் கலவையின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மகசூல் அதிகரிப்பது, பூச்சிநோய் கட்டுப்பாடு, மண்ணின் வளத்தை அதிகரிப்பது, நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் பயிர் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பது. உM சுத்தமான ஒரு இயற்கை பொருள் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், கழிவு நீர் பராமரிப்பு, குப்பை கூழங்கள் பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
விதை நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் கூடுகிறது. கருகல், வேர் அழுகல், இலைப்புள்ளி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. வறட்சியின் போதும், அதிக மழை பெய்யும் போதும் பயிர்கள் தாக்குபிடிக்கும் செலவு குறைவு. மகசூல் அதிகரிப்பு, தரம் மேம்படும் விவசாயிகளுக்கு செலவு குறையும். திருச்சி வானொலி உழவர் சங்க சேவை மையத்தில் அதிகமாக விற்பனையாகிறது. தொடர்புக்கு: ரகுபதி, ஆசிரியர், வானொலி உழவர் சங்கம், நெ.16 முதல் மாடி, சித்தன் காம்ப்ளக்ஸ், சத்திரம் பஸ் நிலையம், திருச்சி-2. அலுவலக தொலைபேசி : 0431-271 6891, அலைபேசி : 98424 81580
கோதுமை கோ.டபிள்யூ 3: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்த கோதுமையைப் பயிரிடலாம். குறுகிய கால வயதுடைய இந்த வளர்ப்பு 95-100 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. குளிர்க்காலத்தில் பருவமழை அதிக அளவில் இல்லாத போது உழவர்களுக்கு இந்த இரகம் ஒரு மாற்று பயிராக அமையும். இதன் சராசரி தானிய மகசூல் எக்டருக்கு 4070 கிலோ. பல்வேறு துரு நோய்களுக்கான எதிர்ப்புத் திறனையும், தரமான தானிய பண்புகளை சீர்தூக்கி பார்த்து இந்த ரொட்டி கோ.டபிள்யூ 3 ரகம் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களின் நன்மை கருதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 0422 - 661 1215 இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003.
கொம்பு அவரை: (நாட்டு ரகம், நீல அவரை) வயது 6 மாதம் அனுபவ விவசாயி பழனியப்பன், கார்கூடல்பட்டி, அலைபேசி : 96261 77355. கடந்த ஆண்டு ஐப்பசியில் விதைத்துள்ளார். பொங்கலுக்கு காய் வந்து விட்டதாம். புரட்டாசியில் ஊன்றினாலும் பிப்ரவரியில் காய் வந்துள்ளது. 15 நாள் இடைவெளியில் "பவர்ஜிம்' தெளித்துள்ளார். செடி தளதளவென்று வர ஆரம்பிச்சுச்சுள்ளது என்கிறார் விவசாயி. எப்பவும் கொம்பு அவரைக்கு ரூ.4-5 அதிகமாக விலை போகிறது. குறைந்த பட்சம் கிலோ ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.60-90 வரை போகுதாம். மேலும் விபரங்களுக்கு ஜெகன், செல்: 98652 04567; அஞ்சன் அலைபேசி : 96555 55166.
பவர் ஜிம்: கிரீன் ஹவுஸ் ஆர்கானிக்ஸ் வழங்கும் எல்லா பயிர்களுக்கும் ஏற்ற தரமான இடுபொருள் தயாரிப்பு மற்றும் வினியோகம் ""கிரீன் ஹவுஸ் ஆர்கானிக்ஸ், 9/204, மெயின் ரோடு, பேளுக்குறிச்சி அஞ்சல், நாமக்கல் மாவட்டம். அலைபேசி : 96555 55166, 98652 04567. ஆண்டவர் அக்ரோ சென்டர், திண்டுக்கல் 98946 13088, அக்ரம் அக்ரோ-கோபி, ஈரோடு; 98427 88355.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X