குறுதானிய சுண்டல் செய்வது எப்படி
தேவையானவை
புட்டு அரிசி மாவு, கம்பு மாவு, பொன்னாங்கண்ணி கீரை - அரைக்கிண்ணம்
தேங்காய் துருவல் அரைக்கிண்ணம்
கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம்
- சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான- அளவு
செய்முறை: பாத்திரத்தில், புட்டு அரிசி மாவு மற்றும் கம்பு மாவு இவற்றோடு நறுக்கிய கீரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து, மூன்று நிமிடங்கள் வறுக்க வேண்டும். பின் சிறிது நேரம் அவற்றை ஆறவிட்டு, சப்பாத்தி மாவு பதம் போல் பிசைந்து கொண்டு, சிறுசிறு சீடைகளாக உருட்டி, இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் சுவையான குறுதானிய சுண்டல் தயார்.
பயன்கள்: ஞாபக மறதிக்கும், பித்த அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் சிறந்த உணவு. உடல் சோர்வை போக்கும்; குடலிலுள்ள தட்டை புழுக்கள் குறையும். மார்பக சளி மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
- லீலாவதி சீனிவாசன்
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்