கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
00:00

கேள்வி: என்னிடத்தில் விண்டோஸ் போன் 530 டூயல் சிம் மாடல் உள்ளது. இதில் விண்டோஸ் 10 போன், சிஸ்டத்தைப் பதிவு செய்து, சோதனை செய்து பார்க்கலாமா?
என். ஆனந்தன், புதுச்சேரி.
பதில்:
இந்த மாடலில் சோதனைப் பதிப்பைப் பதிந்து, இயக்கி, அதன் சிறப்புகள் மற்றும் சிக்கல்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தெரிவிக்கலாம். Windows Insider Programல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த சோதனைப் பதிப்பை ஏற்றுக் கொள்ளும் மாடல் போன்களாகக் கீழ்க்குறித்தவற்றை, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது: Lumia 1020, 1320, 1520, 520, 525, 52, 530, 530 Dual Sim, 535, 620, 625, 630, 630 Dual Sim, 635, 636, 638, 720, 735, 810, 820, 822, 830, 920, 925, 928 and Icon. இவற்றுடன் பின் காட்டப்பட்டுள்ளவையும் சேர்க்கப்பட்டுள்ளன. லூமியா 430, 435, 435 Dual Sim, 532, 532 Dual SIM, 640 Dual SIM மற்றும் 535 Dual Sim.
இந்த பட்டியிலில் தரப்பட்டுள்ள போன்களில், விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பு சரியாக இயங்காமல், ஏதேனும் பிழைக் குறியீடுகள் இருப்பின், குறிப்பிட்ட மாடல் சோதனைக்கான போன்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் அறிய https://insider.windows.com/ என்ற இணைய தளம் செல்லவும். விண்டோஸ் 10 போன் சிஸ்டத்தில், நாம் சொல்வதை டெக்ஸ்ட்டாக மாற்றித் தரும் வசதி, மேம்படுத்தப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் ஆகியவற்றைக் கூறலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் கைவிட்டுவிட்டதாக ஒரு தகவல் படித்தேன். அது உண்மையா? எக்ஸ்பி போல இதற்கும் அப்டேட் பைல்கள் இனி கிடைக்காதா? நான் என் இரண்டு கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 தான் பயன்படுத்தி வருகிறேன். இதனால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குக் கட்டாயம் மாறிக் கொள்ள வேண்டுமா?
என். சுசீந்திரன், நாகர்கோவில்.
பதில்:
நீங்கள் தகவலை முழுமையாக வாங்கவில்லை. உங்களைப் போலவே, இந்த தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள், உலக அளவில் இது குறித்து கடிதங்களும் அஞ்சல்களும் அனுப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் இதனைத் தெளிவாக அறிவிக்காததுதான். தன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மெயின் ஸ்ட்ரீம் சப்போர்ட், எக்ஸ்டெண்டட் சப்போர்ட் என இருவகை சப்போர்ட்களை மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. மெயின் ஸ்ட்ரீம் சப்போர்ட் என்பது, குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனை முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு, புதிய கம்ப்யூட்டர்களுக்கு உரிமங்கள் கிடைக்காத நிலை ஆகும். எக்ஸ்டண்டட் சப்போர்ட் என்பது, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான மேம்பாட்டு பைல்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாகும். இதில் செக்யூரிட்டி தொடர்பான பைல்களும் உண்டு.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான மெயின் ஸ்ட்ரீம் சப்போர்ட்டினை மட்டுமே மைக்ரோசாப்ட் ஜனவரி 13, 2015 முதல் முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு, இனி விண்டோஸ் 7 உரிமங்கள் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கும், கேட்டுக் கொண்ட கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே, விண்டோஸ் 7 உரிமங்கள் வழங்கப்படும். எனவே, புதிய கம்ப்யூட்டர் வாங்கச் சென்றால், விண்டோஸ் 8.1 அல்லது வர இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டங்களுக்கு மட்டுமே உரிமங்கள் வழங்கப்படும். விண்டோஸ் 7 சிஸ்டம் தான் உலக அளவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இதற்கான எக்ஸ்டண்டட் சப்போர்ட், வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டங்களுக்கு எப்படி இந்த சப்போர்ட்களை வழங்குகிறது; அவற்றின் கால வரையறை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், http://windows.microsoft.com/en-us/windows/lifecycle என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும். நீங்கள் கவலைப்படாமல், காத்திருந்து விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதனைத்தான் விரும்புகிறது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்கள் அடிக்கடி தயாரிக்க வேண்டிய வேலையில் இருக்கிறேன். இதில் ஒரு வாக்கியம் முடிந்தவுடன், முற்றுப் புள்ளி வைத்தவுடன் இரண்டு ஸ்பேஸ் தானாக அமையும்படி செட் செய்திட முடியுமா? நான் வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். இதற்கான வழிகளைத் தரவும்.
என். வாணி முருகேசன், திருப்பூர்.
பதில்:
வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும். வேர்ட் திறந்து கொள்ளவும். இதில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் இடதுபக்கம் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு தரப்பட்டுள்ள கட்டத்தில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Spaces Required Between Sentences என்ற கீழ்விரி மெனுவில், நீங்கள் அமைக்க விரும்பும் ஸ்பேஸ் எண்ணிக்கையை அமைத்து, பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடி வெளியே வரவும். இனி, இலக்கணத்தினை சோதனையிடுகையில், நீங்கள் அமைத்தபடி ஸ்பேஸ் இல்லாத வாக்கியங்களின் கீழாக பச்சை நிறத்தில் வளைவு கோடுகள் காட்டப்படும். அவ்வாறு காட்டப்படும் இடங்களில், ரைட் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் ஸ்பேஸ் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: ஒரு மைக்ரோ எஸ்.டி. கார்டில் அதிக பட்ச கொள்ளளவு எவ்வளவு? அதிகமான கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்டினை அதிக விலை கொடுத்து வாங்கி, அது கெட்டுப் போய்விட்டால், வீணாகிவிடுமே. அதுபோல வாங்கலாமா? தங்களுடைய அறிவுரை தேவை.
டி.எஸ். பாக்யலஷ்மி, திண்டுக்கல்.
பதில்:
குறைந்த பட்ச கொள்ளளவு என்பதே இப்போது ஜி.பி. கணக்கில் தான் வருகிறது. நீங்கள் மைக்ரோ எஸ்.டி. கார்டினை எதற்குப் பயன்படுத்த திட்டமிடுகிறீர்கள் என்று சொல்லவில்லை. போன் என்றால், 16 அல்லது 32 ஜி.பி. வரை போதும். கேமரா போன்ற சாதனங்களுக்கு 2 அல்லது 4 ஜி.பி. வரையிலான கார்ட்கள் போதும் என்று நினைக்கிறேன். பொதுவாக இவை வாங்கியவுடன் வீணாவதில்லை. வாங்கும்போது பில், மற்றும் வாரண்டி குறித்து தெரிந்து கொண்டு அதற்கான அத்தாட்சி சீட்டு வாங்கிக் கொள்ளவும். வீணாகிப் போகும்போது மாற்றிக் கொள்ள உதவும்.
இனி, உங்கள் கேள்வியின் முதல் பகுதிக்கு வருவோம். மைக்ரோ எஸ்.டி. கார்டில் அதிக பட்ச கொள்ளளவு எவ்வளவு என்று கேட்டுள்ளீர்கள். அண்மையில் படித்த ஒரு தகவலைத் தருகிறேன். SanDisk நிறுவனம் இத்தகைய மைக்ரோ எஸ்.டி. கார்ட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் இயங்கும் நிறுவனம் ஆகும். தற்போது 200 ஜி.பி. அளவில் இத்தகைய கார்ட்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பரவலாகக் கிடைக்கும் 128 ஜி.பி. அளவைக் காட்டிலும் இது 56% கூடுதலாகும். இந்த கார்ட், விநாடிக்கு 90 எம்.பி. தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறது. அதாவது நிமிடத்திற்கு 1,200 போட்டோக்களை அடுத்த மீடியாவிற்கு மாற்றும் திறன் கொண்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இது விற்பனைக்கு வரும். விலை 400 டாலர்.

கேள்வி: விண்டோஸ் மீடியா பிளேயருக்குப் பதிலாக, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வி.எல்.டி. பிளேயரைப் பயன்படுத்த முடியுமா? எப்போதும் வி.எல்.சி. பிளேயரையே பயன்படுத்துமாறு கம்ப்யூட்டரில் செட் செய்திட முடியுமா?
ஆர். சிவராமன், சென்னை.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டர் டைரக்டரியில் உள்ள வீடியோ, எம்.பி. 4 பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இனி, இதில் நீளாமான மெனு ஒன்று கிடைக்கும். இதில் உள்ள “Open With” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். மீண்டும் “Browse” என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் புரோகிராம்பட்டியலில் VLC Media Player என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் கீழாக, “Always use the selected program to open this file” என்று இருப்பதற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தவும். அல்லது, ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் வீடியோ பைல்களைத் திறக்க, வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை மட்டும் திறக்கும்படி, கம்ப்யூட்டருக்கு கட்டளை கொடுத்துள்ளீர்கள் என்றாகிறது. இனி, எந்த விடியோ பைல்கள் மீது கிளிக் செய்தாலும், அது வி.எல்.சி. பிளேயர் புரோகிராமில் தான் திறக்கப்படும். பின் நாளில், இதனை மாற்ற வேண்டும் என எண்ணினாலும், இதே வழியில் சென்று மாற்றலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த டெக்ஸ்ட் காப்பி செய்தாலும், அதன் முடிவில் ஒரு சிறிய ஐகான் காணப்படுகிறது. தொடர்ந்து டைப் செய்திட முற்படுகையில் இது மறைந்துவிடுகிறது. இதில் கிளிக் செய்தால், பார்மட்டிங் சம்பந்தமான சில ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இது எதற்காக? இதனை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?
எஸ். வாஜித் அலி, திருச்சி.
பதில்:
இது நம் நன்மைக்காகத்தான். டெக்ஸ்ட் அல்லது இணைய தளம் ஒன்றிலிருந்து ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றைக் காப்பி செய்கையில், அதில் இருந்தபடியே காப்பி செய்யப்படுகிறது. அதனை வேர்டில் ஒட்டுகையில், அப்படியே விட்டுவிட்டால், ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டுக்கும் ஒட்டப்பட்ட டெக்ஸ்ட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளால், சரியாக டெக்ஸ்ட் பொருந்தி இருக்காது. தோற்றம் வேறாக இருக்கும். இதனைச் சரி செய்திடவே, அந்த ஐகான் காட்டப்படுகிறது. ஒட்டிய பின்னர், அந்த ஐகான் மீது கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் செய்யப்பட்டு ஒரு செய்திக் கட்டம் காட்டப்படும். அதில் ஒரு சிறிய பட்டியல் இருக்கும். இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X