இன்றைய, உலகில் போட்டி தவிர்க்க முடியாதது. தேவையானவற்றை தேடுவோர் எண்ணிக்கை மாறுபட்டு இருப்பதால், பற்றாக்குறை, அன்றாடம் அனுபவிக்கப்படும் விஷயமாக மாறிவிட்டது. எனவே, விட்டுக் கொடுங்கள் என்ற போதனை, அவசியமாகிறது.
விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன; எதில் விட்டு கொடுப்பது; எதற்காக விட்டு கொடுப்பது, என்று தெளிவாக அறிந்து, செய்ய வேண்டும்.எந்த ஓரு காரியத்தை செய்தாலும், எப்போதும்
அதை நினைத்து திருப்தியடைய வேண்டும். வருந்த கூடாது.
பெரும்பாலும் விட்டு கொடுப்போர், பின்னால் அதற்காக வருந்துகின்றனர் அல்லது பொருமுகின்றனர். எனவே, விட்டு கொடுப்பதா, வேண்டாமா என்ற முரண்பாட்டிற்கு ஆளாகி நொந்து போகின்றனர்.சாதாரண, தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படுத்தாத, இழப்புகளை, தனக்குரிய விஷயங்களை, விட்டு கொடுக்க அனைவரும் முன் வருவர்.
அதேநேரம், அசாதாரணமான நீடித்த இழப்பை ஏற்படுத்த கூடிய, தன் முன்னேற்றத்தை பாதிக்க கூடிய விஷயங்களை விட்டுக் கொடுக்க யாரும் முன் வருவதில்லை.
விட்டு கொடுப்பது நற்குணமாக கருதப்படுகிறது. விட்டு கொடுக்காமல் இருப்பது துர்க்குணமாக கருதப்படுகிறது. அவசியமாகவும், அவசரமாகவும் இருக்கும் போது, விட்டு கொடுப்பது தான் முக்கியம். அது பாசத்தின் அறிகுறி.கருணை, பரிதாபம் மற்றும் பச்சாதாபத்தின் அடிப்படையில், விட்டு கொடுப்பது, பலவீனத்தின் அறிகுறி. சூழ்நிலையை சீர்தூக்கி பார்த்து, தெளிவான நோக்கத்துடன் விட்டு கொடுப்போர், கெட்டு போகமாட்டார்கள்.
- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்,
மனநலம் கிளினிக், சென்னை.
94440 34647