அடம் பிடிக்கும் பைல்களை அழிக்க....
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 நவ
2010
00:00

சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.
Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது –– என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு  வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.
இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லாக்கர் (Unlocker) என்னும் புரோகிராம். இதனை http://ccollomb. free.fr/unlocker/#download   என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
இந்த பைலை இலவசமாக  இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லாக்கர்  புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock  என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.
 அன்லாக்கர் போல இணையத்தில், அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் மற்றவற்றில் கிடைக்காத பல வசதிகளை அன்லாக்கர் கொண்டுள்ளது.  
அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம்.  அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு வசதி குறைவாகவே உள்ளது. மற்ற புரோகிராம்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசஸ் எக்ஸ்புளோரர் (Process Explorer):   இதனைப் பெற http://www.sysinternals. com/ntw2k/freeware/p rocexp.shtml  என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2.பைல் அசாசின் (File Assassin):  தளம் – http://www.malwareb ytes.org/fileassassin.php
3.ஹூ லாக் மி (Who Lock Me) -: தளம்  http://www.dr-hoiby.com/WhoLockMe/ind ex.php

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWTHAM - Chennai,இந்தியா
07-நவ-201012:50:57 IST Report Abuse
GOWTHAM How to download songs,videos,pictures and others from the internet freely and easily ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X