தேனிலும், பட்டையிலும் அப்படி என்னதான் இருக்கின்றன என்பதை காண்போம்.
முட்டி வலிகள்: ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்பூன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால், இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். ஆர்த்தரடிஸ் நோயாளிகள், தினமும் காலையில் ஒரு கப் சுடு தண்ணீரில், 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால் போதும்.
முடி உதிர்தல்: முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலையுள்ளவர்கள் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக கலந்து, குளிப்பதற்கு, 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொலஸ்டிரால்: இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் பட்டை பவுடரை, 16 அவுன்ஸ் டீத்தண்ணிரில் கலந்து கொலஸ்டிரால் நோயாளிகளுக்கு கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால், 10% குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராலும் குணமாகிவிடும்.
ஜலதோஷம்: ஜலதோஷத்தால் அவதிப்படுகிறவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஜலதோஷம், இருமல், சைனஸ் குணமாகி விடும்.
வயிற்றுக்கோளாறு: தேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்னையும் குணமாகும்.
நோய் எதிர்ப்பு தன்மை: தேனையும் பட்டை பவுடரையும் தினமும் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரஸ் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும்.
நீண்ட வாழ்வு: நான்கு ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தயாரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.
உடல் எடை குறைய: அதிகம் வெயிட் போட்டவர்கள், தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ரெகுலராக குடித்து வந்தால், உடம்பில் கொழுப்பு சேரவே
சேராதாம்.