வெந்தயம் பொடுகை குறைக்க உதவுகிறது. ஒரு கையளவு வெந்தயத்தை இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கரகரப்பான பசையாக அரைக்கவும். இப்போது அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, சில மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு உங்கள் முடியை ஒரு மிதமான ஷாம்பு அல்லது சீக்காயினால் அலசவும். இந்த பசைக்கு மற்றொரு மாற்று, கடுகு எண்ணெயை சில மருதாணி இலைகளுடன் சூடுபடுத்தி, பின்னர் அதை வடிகட்டவும். அது குளிர்ச்சியான பிறகு, அதனுடன் வெந்தயப் பசையை சேர்த்து உச்சந்தலையில் தடவவும். அதை, முடியை அலசுவதற்கு முன் அரை மணி நேரம் விட்டு வைக்கவும்.
உச்சந்தலையில் அரிப்பைக் குறைக்க: வெப்பம் அல்லது வறட்சியின் விளைவாக, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் சிறிய புடைப்புகளைக் குறைக்க வெந்தயம் உதவும். இரவில் வெந்தய விதைகளை ஊறவைக்கவும். காலையில் நீரை வடிகட்டி, இந்தக் கரைசலில் உங்கள் முடியை அலசவும். அரிப்பிலிருந்து விடுபட,வெந்தய விதைகளுடன் கூடுதலாக மற்ற பொருட்களையும் நீங்கள் சேர்க்கலாம். முதலில் துளசி இலைகள் சிலவற்றை, வெட்டி அவற்றை அரைத்து அதில் எள் எண்ணையைக் கலக்கவும். குறைந்த வெப்பத்தில் இதை சூடு செய்து, அதில் சில வெந்தய விதைகளைச் சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைக்கவும். இதை குளிர வைத்து வடிகட்டிய பின், அதை தடவவும். உச்சந்தலை அரிப்பு பிரச்னைக்கு இது கைகொடுக்கும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்த: முடி உதிர்தல், உங்கள் ஆளுமை மற்றும் சுய மரியாதைக்கு தீங்காக இருக்க முடியும். இதைக் கட்டுப்படுத்த, தயிர் மற்றும் வெந்தய விதைகளின் பேஸ்ட்டை தயாரிக்கவும். அதை தயிரில் கலந்து உங்கள் உச்சந்தலையில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து, ஷாம்பூவில் உங்கள் முடியை அலசவும்.
முகப்பரு வடுக்களை குறைக்க: முகப்பருக்கள் மறைந்த பிறகும், அவை விட்டு சென்ற வடுக்கள் முகத்தில் இருந்தால், அதை குறைக்க இந்த பயனுள்ள பேக்கை தயாரிக்கவும். 15 நிமிடங்கள் வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து, பின் அதை குளிர்ச்சியடைய அனுமதியுங்கள். விதைகளை வடிகட்டி விட்டு, அந்த திரவத்தை ஒரு பஞ்சு பந்தினால் வடுக்களின் மேல் தடவவும். குறைந்தது ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.