சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2015
00:00

கறுப்புக்கொள்ளு: அனுபவ விவசாயி விழுப்புரம் மாவட்டம், துளுக்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுவது. கொள்ளை விதைத்து விட்டு அறுவடைக்குப் போனால் போதும். மானாவாரியில் கம்பு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்திரவாதம் கிடையாது. ஆனா கொள்ளு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்தரவாதம் இருக்கு. அதிகம் கறுப்பு கொள்ளுக்கு நல்ல தேவை இருக்கு. வழக்கமான கொள்ளு விதைகளைப் பயன்படுத்தும் முறையில் கறுப்புக்கொள்ளு விதைகளையும் சாம்பார், ரசம், துவையல்னு பயன்படுத்தலாம்.
கறுப்பு கொள்ளு சாகுபடி காலம் 120 நாட்கள். கார்த்திகைப் பட்டம் ஏற்றது. தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். இரண்டு மூன்று உழவு செய்து கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ விதைகளைப் பரவலாக விதைத்து விட வேண்டும். மண்ணிலும், காற்றிலும் இருக்கும். ஈரப்பதத்தில் விதைகள் 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்து விடும். 20 முதல் 25 நாட்களில் ஒரு களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் செடிகள் வளர்ந்து கொடிகளாகப் படர ஆரம்பிக்கும்.
மானாவாரி என்பதால் கிடைக்கும் மழைத்தண்ணீரை வைத்தே வளர்ந்து விடும். 80ம் நாளில் பூவெடுத்து 90ம் நாளில் காயாக மாறி 120ம் நாளில் காய்கள் முற்றி அறுவடைக்கு வந்து விடும். கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்து இரண்டு நாட்கள் காயவைத்து கம்பு கொண்டு தட்டினால் விதை தனியாக வந்து விடும்.
விவசாயி 40 சென்ட் நிலத்தில் 200 கிலோ மகசூலாக எடுத்துள்ளார். ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்து 13 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். செலவு 3 ஆயிரம் ரூபாய் ஆகிறது. சித்த மருத்துவம் செய்கிறவர்களும், இயற்கை அங்காடி நடத்துறவங்களும் விரும்பி வாங்குகிறார்கள். மேலும் விபரங்களுக்கு பாலசுப்பிரமணியன், அலைபேசி : 98434 88990.

நிழல்வலைக் கூடாரங்களில் காய்கறி சாகுபடி: ஆண்டு முழுவதும் பருவ நிலை பாதிப்பின்றி அனைத்து பருவங்களிலும் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நல்ல தரமான உற்பத்தி மற்றும் உயர்ந்த விளைச்சலைப் பெறலாம். பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்தலாம். நுண்ணிய தட்பவெப்பம் நிலவுவதால் பயிர் சேதம் குறைக்கப்படுகிறது. நிழல்வலைக் கூடாரங்கள் அமைப்பதற்கு பாலிதீன் விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
தக்காளி மற்றும் மிளகாய் பயிர்களை இந்த நிழல்வலைக் கூடார முறையில் நன்கு உற்பத்தி செய்யலாம். அதற்கு தேவையான நிழல் அளவு சுமார் 35 சதவீதம் ஆகும். நாற்றுகள் 80x40x60 செமீ இடைவெளியில் நட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவாக 50:250:50 கி/எக்டர் தழை, மணி, சாம்பல் சத்துக்களை அடியுரமாக இட வேண்டும். மேலும் விபரங்களுக்கு எம்.எஸ்.அனீசாராணி, ஜெ.ரேணுகாதேவி, மு.பாபு, இ.கண்ணையன், க.ராஜா, க.சக்திவேல், க.தனலெட்சுமி, காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர்-607 102. போன் : 04142 - 212 538, 275 222.

பருத்தி ரகம் ராகா BG II: அனுபவ விவசாயி வே.செல்வராஜ், த/பெ.வேலுச்சாமி, பெரியகோட்டை போஸ்டு, (வழி) சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் - 624 614. அலைபேசி : 99941 05383. மொத்தம் 3.5 ஏக்கர் கலாஷ் சீட்ஸ் வழங்கும் ராகா பிஜி ஐஐ பருத்தி சாகுபடி செய்துள்ளார். பெருசு பெரிசா காய் வெடிச்சு பஞ்சு நல்ல சைஸில் பூத்திருக்கிறது.
தொட்டதும் கையோட வருது. சென்ற வருடம் பயிரிட்டிருந்த பருத்தியோட அனுபவ அடிப்படையில் இந்த வருடம் பருத்தி மகசூல் 20 குவிண்டால் வரை வரலாம் என்று சொல்கிறார் விவசாயி. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள விஜயகுமார் - 98429 60815, பி.துரைராஜ், திண்டுக்கல் - 85080 88908, எம்.மகேஷ்குமார் தேனி - 98730 95628, பி.பிரபு சேலம்- 99768 68304, எம்.மகேஷ் கோவை-88837 62629.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X