கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 நவ
2010
00:00

கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில், மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, கண் சிமிட்டும் கர்சர் ஒன்றைப் பார்த்தேன். இதனை எப்படி தேர்ந்தெடுப்பது? அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா?  என் ஆசையை நிறைவேற்ற பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- தி. ஷண்முக நாதன், திருப்புவனம்
பதில்: மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, பல வகை கர்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதற்கு வழி காட்டும் முன் சில எச்சரிக்கைகளைத் தருகிறேன். இந்த கர்சர்கள் பெரும்பாலும் அனிமேஷன் எனப்படும் அசைந்திடும் வரைகலை உருவங்கள்தான். ஆனால், இவற்றின் மூலம் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் இயங்குவதாகத் தகவல்கள் உள்ளன. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதை எண்ணி, இந்த வகை ஆசைகளுக்குத் தடை போடுவதே நல்லது. மேலும், இவை அனிமேஷன் வகை பைல்கள் என்பதால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியில் எப்போதும் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.
சரி, உங்கள் ஆசைக்குச் சரியான தீர்வு தரும் இணைய தளத்தைப் பார்ப்போம். இந்த வகை கர்சர்களைத் தரும் புரோகிராம் ஒன்று, பாதுகாப்பான, மால்வேர் புரோகிராம் எதுவும் இல்லாத தளம் ஒன்றில் உள்ளது. www.download.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு  (Cursor FX)  கர்சர் எப் எக்ஸ் என்ற புரோகிராம் தேடி எடுத்து டவுண்லோட் செய்திடவும்.   டவுண்லோட் செய்து முடித்த பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், இந்த புரோகிராமினைக் காண கண்ட்ரோல் பேனல் செல்லவும். இதில்   My Cursors  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் கர்சராகப் பயன்படுத்த என்ன என்ன கர்சர்கள் உள்ளன என்று காட்டப்படும். இதில் எந்த கர்சர் உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை வழக்கமான கர்சருக்குப் பதிலாக அமைத்திட Activate என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கர்சர்கள் இயங்குவதில், சில கூடுதல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். Trails   என்பதில் கிளிக் செய்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
கூடுதலாக சிறிய அளவில் ஆடியோ இசையைக் கூட இதில் வெளிப்படுமாறு செய்திடலாம். ஆனால் அதற்குக் கட்டணம் செலுத்தி இந்த புரோகிராமை விலைக்கு வாங்க வேண்டும்.

கேள்வி: தமிழில் ஆவணம் ஒன்றை, நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வழியாகப்  பெற்று படிக்க முற்படுகையில், அது வெறும் கட்டங்களாகக் காட்சி அளித்தது. நண்பரிடம் இது குறித்துக் கேட்கையில், அது யூனிகோட் எழுத்து முறை என்றும், அது என்னுடைய கம்ப்யூட்டரில் இல்லையா என்றும் கேட்டார். பின்னர் அதனை பி.டி.எப். ஆக மாற்றி அனுப்பினார். யூனிகோட் எழுத்து முறை என்பது என்ன?  - ஆர். நல்லசிவம், சென்னை
பதில்: யூனிகோட் என்பது பெரிய அளவில் உலக அளவிலான அனைத்து எழுத்துக்கள் மற்றும் சில குறியீடுகள் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். கம்ப்யூட்டரில் வெகு காலமாக ஆஸ்க்கி மற்றும் ஆன்ஸி குறியீட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வந்தன. இவற்றைப் பயன்படுத்தி, 256 தனிக் குறியீடுகளே அமைத்துப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் காட்ட முடியும். உலக அளவில் அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், அவர்கள் மொழிகளுக்கான எழுத்துக்களை அமைக்கையில் இந்த முறை ஒத்துழைக்கவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. ஏனென்றால் பல மொழிகளில் 256க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன.
இந்த பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் யூனிகோட் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு எழுத்தும், குறியீடும் இரண்டு பைட்களில், அதாவது 16 பிட்களில் அமைக்கப்படுகின்றன. இதனால் 65,536 தனிக் குறியீடுகளை அமைக்க முடியும். உலக அளவில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், மொழி ஆய்வாளர்கள் ஒரு குழுவாக அமைந்து உலக மொழிகள் அனைத்திற்கும் தனிக் குறியீடுகளை ஒரு பைலில் கொண்டு வந்தனர்.   இதுவே யூனிகோட் குறியீடு அமைப்பாகும். மேலும் சில வழிகளைக் கையாண்டு, இந்த தனிக் குறியீடுகளின் எண்ணிக்கையைப் பல லட்சமாக உயர்த்தவும் முடியும் என்று அறியப்படுகிறது.
தமிழ் உட்பட உலகின் அனைத்து மொழிகளும், யூனிகோட் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. உங்கள் கம்ப்யூட்டரில் யூனிகோட் தமிழ் எழுத்துரு வேண்டும் எனில் ஏரியல் யூனிகோட் எம்.எஸ். என்ற  பாண்ட் பைல் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துக்கள் லதா என்ற பெயரில் கிடைக்கும். இணையத்தில் தமிழ் யூனிகோட் தரக்கூடிய பைல்கள் நிறைய உள்ளன. இவற்றை டவுண்ட்லோட் செய்து, பாண்ட்ஸ் போல்டரில் போட்டு வைத்துக் கொண்டால், யூனிகோட் தமிழில் உருவாக்கப்பட்ட பைல்களை அந்த பாண்ட் வகைக்கு மாற்றிப் படித்துக் கொள்ளலாம்.  எக்ஸ்பி முதல் இப்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வரை யூனிகோட் எழுத்துருக்களை சப்போர்ட் செய்கின்றன.

கேள்வி: நாங்கள் பலர் இப்போது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறிவிட்டோம். பல புது வசதிகளைப் பயன்படுத்துகிறோம். தங்கள் கணிப்பில், இதற்கான இமெயில் கிளையண்ட் புரோகிராமாக எதனை பரிந்துரை செய்கிறீர் கள்?  - ஆ. சி. கணேசன்,  திருவள்ளூர்
பதில்: பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்கென உள்ளன. இருப்பினும் இலவசமாகக் கிடைக்கும் இரண்டு புரோகிராம்கள் குறித்து இங்கு கூறுகிறேன். அவை விண்டோஸ் லைவ் மெயில் மற்றும் தண்டர்பேர்ட். விண்டோஸ் லைவ்மெயில் புரோகிராமினை இலவச மாக http://explore. live.com/windows-live-mail?os=other   என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். அடிப்படையில் இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட புரோகிராமாகும். விண்டோஸ் லைவ் மெயிலில், நம்முடைய மற்ற ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்களை, ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ போன்றவற்றை இணைக்கலாம். இவ்வாறு அனைத்து இமெயில் அக்கவுண்ட்களையும் இதில் பார்க்கலாம். இதில் காலண்டர் ஒன்று இணைத்தே கிடைக்கிறது. இதில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக் குறித்து வைக்கலாம். ஆர். எஸ். எஸ். ரீடர் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதனுடனும் இணைத்து, அதில் போட்டோக்கள் இருப்பின், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை, இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் செய்து வைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்துடன்  இணைந்து பயன்படுத்த, இது ஒரு நம்பிக்கையான இமெயில் கிளையண்ட் புரோகிராமாகும். அடுத்ததாக, இதே போன்ற வசதிகளுடன் கூடிய புரோகிராம், தண்டர்பேர்ட் பதிப்பு 3 ஆகும். இதுவும் கிராஷ் ஆகாமல், நிலைத்து இயங்கக் கூடிய ஒரு புரோகிராம். பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.  இதில்  புதிய காண்டாக்ட் சேர்க்க அனுப்பு பவரின் பெயர் அருகே உள்ள ஸ்டாரை அழுத்தினால் மட்டும் போதும். பிரவுசர் இயங்குவது போல, டேப்களில் மெசேஜ்களைத் திறந்து காட்டும்.
மிகச்  சிறப்பான ஒரு விஷயம் இதனைப் பொறுத்தவரை என்னவென்றால், உங்கள் கடிதத்தில் “attachment” என்ற சொல் இருந்து, நீங்கள் பைல் எதுவும் அட்டாச் செய்யப் படாமல், மெயிலை அனுப்பினால், உடனே  ""பைல் அட்டாச் செய்திட மறந்துட்டீங் களா?'' என்று நினைவூட்டும். தானாகவே மொஸில்லா மேற் கொள்ளும் அப்டேட்களை இணைத்துக் கொண்டு, நிலையாக அனைத்து வசதிகளையும் தரும்.  இந்த இரண்டில் எது மிகச் சிறந்தது என்று கேட்கிறீர்களா? அதனை நீங்கள் தான் முடிவு செய்திட வேண்டும். இரண்டையும் இறக்கிப் பதிந்து, பயன்படுத்திப் பார்த்து முடிவு செய்திடுக. 

கேள்வி: நான் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். புதியதாக நான் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் கம்ப்யூட்டரில், பழைய கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புக்மார்க்குகளை, புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றுவது எப்படி? - டி. பிரதீப் குமார், கோவை
பதில்: மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் அதிர்ஷ்டவசமாக, அதன் புக்மார்க்குகளை பேக் அப் செய்து, இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழியைக் கொண்டுள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். Bookmarks  மெனுவில்  கிளிக் செய்திடவும். இதில் Organize Bookmarks  என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது லைப்ரேரி விண்டோ தரப்படும். இதில் Import and Backup   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து  Backup ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இதில் கிளிக் செய்தவுடன், உங்களுக்கு Bookmarks backup filename  என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த பைலில் தான், உங்கள் புக் மார்க்குகள் அனைத்தும் சேவ் செய்யப்படும். அடுத்து, சேவ் கிளிக் செய்திட பைல் உருவாகும். இதனை காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதிலிருந்து புக்மார்க்கு களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் செல்ல, அந்த கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் திறந்து, Bookmarks  மெனு கிளிக் செய்து, Organize Bookmarks மெனு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். லைப்ரேரி விண்டோ  கிடைக்கும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Restore  என்பதில் கிளிக் செய்து, Choose File...... என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Select a bookmarks backup என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் சேவ் செய்து வைத்த புக்மார்க் பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் open  என்பதில் கிளிக் செய் திடவும்.  இப்போது  Revert Bookmarks  என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் ஓகே பட்டன் கிளிக் செய்து, லைப் ரேரி விண்டோ வினை மூடவும். எடுத்து, சேவ் செய்து கொண்டு வந்த புக்மார்க்கு கள் அனைத் தும், புதிய கம்ப்யூட்டரில், பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரியா - singapore,இந்தியா
07-நவ-201018:14:51 IST Report Abuse
பிரியா really its help me and every one thank u. please give some important notes same as like that.. thank u
Rate this:
Share this comment
Cancel
ஹாஜி - திருச்சி,இந்தியா
06-நவ-201013:02:35 IST Report Abuse
ஹாஜி நான் Mozila Firefox பயன்படுத்துகிறேன். இதில் Youtube லிருந்து நேரடியாக download செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? எவ்வாறு Mozila Firefox ல் setting செய்வது ? இதே வாய்ப்பு Google Chrome ல் உள்ளதா ?
Rate this:
Share this comment
Cancel
kubendran - Madurai,இந்தியா
05-நவ-201020:25:22 IST Report Abuse
kubendran Kruti Tamil 130 பாண்டில் எழுதிய எழுத்துக்களை அப்படியே தமிழ் (லதா) பாண்டிற்க்கு மாற்றி படிக்க முடியுமா? என்பதற்க்கான தங்களின் பதில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X